Posts

Showing posts with the label கர்வம் தொலைக்க வைத்த காளை- ஔவை

கர்வம் தொலைக்க வைத்த காளை

கர்வம் தொலைக்க வைத்த காளை இந்த உலகில் தோல்வியைத் தழுவாதவர் எவரும் இருக்க முடியாது. வெற்றி பெற்றவர்களின் வரலாற்றினைப் புரட்டிப் பார்த்தால் இந்த உண்மை புரியும். தோல்வியடைந்து விட்டோமே என்று விரக்தியில் முட்டைக் கட்டிக்கொண்டு முடங்கிக் கிடந்தால் சமூகம் நம்மைத் திரும்பிப் பார்க்காது எங்கேயோ ஓடிவிடும். மறுபடி ஓடு மறுபடி தேடு என்ற ஓயா ஓட்டமும்  தேடலும் சிகரத்தில் கொண்டு நிறுத்தி அழகு பார்க்கும். இது படைப்பாளிக்கு உரிய பண்பு. ஆனால் எந்தவொரு மனிதனும் இன்னொரு மனிதனிடம் தோற்றுப்போக விரும்புவதில்லை. அப்படித் தோன்றும்போவது தன் தன்மானத்திற்கு இழுக்கு என்று நினைப்பர். அதுவும் தன்னைவிட வயதில் அந்தஸ்த்தில் பொருளாதாரத்தில் அறிவில் குறைந்தவர்களிடம் தோற்றுப் போவதற்கு மனம் எந்த இடத்திலும் இடம் கொடுக்காது. நான்காவது இவனிடம் தோற்றுப் போவதாவது.. ஒரு அகந்தை தான் என்ற ஆணவம் இந்த இடத்தில்தான் வந்து தலை தூக்கி நிற்கும். அழிவுக்கு முன்னானது அகந்தை. அகந்தையில் வாழ்ந்தவர் ஒருவர்கூட இருக்கமுடியாது.ஆனால் வீழ்ந்தவர்கள் ஓராயிரம் பேரை நம்மால் அடையாளம் காட்டமுடியும். சாதாரண மனிதர் முதல் பெரிய அறிஞர்கள் வரை அனைவரையும்...