Posts

Showing posts with the label நாற்கவி என்றால் என்ன -நாற்கவி வகைகள்

நாற்கவி என்றால் என்ன

நாற்கவி என்றால் என்ன பாடல்கள் எழுதும் புலமையிலுள்ள திறன் வேறுபாடுகளை வைத்து கவி நான்கு வகையாக அடையாளப்படுத்தப்படுகிறது. 1. ஆசுகவி 2.மதுரகவி 3.சித்திரகவி  4.வித்தாரகவி  இவை நான்கும் நாற்கவிகள் என அழைக்கப்படுவனவாகும். ஆசுகவி : உடனடியாகக் கவிதை பாடும் திறனுடையவர்கள் ஆசுகவி என்று அழைக்கப்படுகின்றனர். ஒருவர் சொல்லும் எழுத்தையோ சொல்லையோ கருத்தையோ கேட்டவுடனே கவிதையாகப் பாடும் ஆற்றல் கொண்டவர் ஆசுகவி.   கவி காளமேகம்  மதுரகவி : காதுக்கு இன்பம் தரும் இனிமையான கவிதைகளைப் பாடுபவர்கள்  மதுரகவி எனப்படுவர். மதுரகவி ஆழ்வார்  சித்திரகவி : ஓவியங்களின் வடிவங்களுக்கு ஏற்ப கவிதை எழுதுபவர்கள் சித்திரக் கவியாக அடையாளப்படுத்தப்படுவர். திருமங்கையாழ்வார்  அருணகிரி நாதர் பாம்பன் சுவாமிகள்  வித்தாரகவி:  வக்கணையாகப் பேசும் கவிதை நடையில் நூல் செய்யும் புலமை உடையவர்கள் வித்தாரகவி எனப்படுவர். நாற்கவிராச நம்பி