காய் நெல் அறுத்து....
காய் நெல் அறுத்துக் கவளம்.... பாண்டியன் அறிவுடை நம்பியைப் பிசிராந்தையார் என்னும் புலவர் பாடியது. மக்களவையில் பட்ஜெட் உரையின்போது நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறிய புறநானூற்றுப் பாடல். பட்ஜெட் உரைக்குப் பின்னர் அனைவராலும் பலவாறு விமர்சிக்கப்பட்ட... பாராட்டப்பட்ட பாடல். பிசிராந்தையாரும் கோப்பெருஞ் சோழனும் ஒருவரை ஒருவர் பார்க்காமலேயே நட்பு கொண்டிருந்தனர். சோழ மன்னன் வடக்கிருந்து உயிர் நீத்தப்போது பிசிராந்தையாரும் அவரோடு வடக்கிருந்து உயிர் நீத்தார் என்று வரலாற்றேடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது.இவர்களது நட்பை தமிழ்கூறு நல்லுலகு இன்றளவும் உயர் நட்பாகப் பேசி வருகிறது. பிசிராந்தையார் வெறுமனே பாட்டு எழுதும் புலவர் மட்டும் அல்லர். நல்ல அரசியல் புலமை மிக்கவர். பிசிராந்தையார் புறநானூற்றில் நான்கு பாடலும் அகநானூற்றில் ஒரு பாடலும் நற்றிணையில் ஒரு பாடலும் பாடியுள்ளார். பாண்டியன் அறிவுடை நம்பி என்ற மன்னன் தன் குடிமக்களை வருத்தி வரி வாங்கினான். இதனால் மக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாயினர் . மன்னனிடம் சென்று எடுத்துரைக்கும் துண...