தெய்வம் தொழாஅள் கொழுநன்....
தெய்வம் தொழாஅள் கொழுநன்.... " தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை " குறள் : 55 தெய்வம் - கடவுள் தொழாஅள் - தொழாதவள் கொழுநன் - கணவன் தொழுது - வணங்கி எழுவாள் - எழுந்திருப்பவள் பெய் - பொழிவாயாக என - என்று சொல்ல பெய்யும் - பொழியும் மழை - மழை வேறு எந்தத் தெய்வத்தையும் தொழாமல் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயில் எழுகிறவள் பெய் என்று கட்டளையிட்டால் மழை பெய்யும். விளக்கம் : வள்ளுவர் எந்த தெய்வத்தையும் வணங்க வேண்டாம். கணவனை மட்டுமே தொழுதால் போதும் என்று சொல்லிவிட்டாரா ? அது எப்படி திருவள்ளுவரால் சொல்லமுடியும் ? கடவுள் வாழ்த்து எழுதும்போது வள்ளுவர், " கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை" என்று சொல்லியிருக்கிறார். அதாவது கடவுளின் திருவடிகளை வணங்காத தலைகள் உறுப்புகளை க் கொண்டிருப்பினும் உணர்வில்லாதவையாகவே கருதப்படும் என்று சொன்ன வள்ளுவர் எப்படி கடவுளை வணங்க வேண்டாம் என்று கூ...