ஓணான் பனைமரம் ஏறுமா
ஓணான் பனைமரம் ஏறுமா ஏறாதா ஓணான் பனைமரம் ஏறுமா... ஏறாதா? ஏன் ஏறாது.....பனைமரம் சொரசொரப்பானதாக இருக்கும் என்பதால் பனைமரத்தில் ஓணான் ஏறாது என்கிறீர்களா? பனை மரத்தில் ஓணான் ஏறியதைப் நானும் பார்த்ததில்லை. ஆனால் பனை மரத்தில் ஓணான் ஏறும் என்பதை நான் அடித்துச் சொல்லுவேன்.. ஆதாரத்தோடு சொல்லுவேன். ஓணான் பனைமரம் ஏறும்...ஏறும்...ஏறும். கணக்கதிகாரத்தில் ஒரு ஓணான் கணக்கு இருக்கிறது. அதில் ஓணான் பனை மரத்தில் ஏறிய கணக்கு ஒன்று இருந்தது. பாடல் இதோ உங்களுக்காக.... " முப்பத்தி ரண்டு முழம்உள முட்பனையைத் தப்பாமல் ஓந்தி தவழ்ந்தேறிச். - செப்பமுடன் சாணேறி நான்கு விரற்கழியும் என்பரே நாணா தொருநாள் நகர்ந்து " என்று காரி நாயனார் கணக்கதிகாரம் என்ற நூலில் சொல்லியிருக்கிறார். இப்போதாவது ஓணான் பனைமரம் ஏறும் என்பதை நம்புகிறீர்களல்லவா? இப்போது கணக்குக்கு வாருங்கள். ஒரு முழம் என்றால் இரண்டு சாண். ஒரு சாண் என்றால் பன்னிரண்டு விரல் கடையளவு அப்படியானால் இரண்டு முழம் என்றால் இருபத்தினான்கு விரல்கடையளவு என்பதை அப்படியே நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் . பனைமரத்தினுடைய உயரம் 32 முழம். ஓணான் ஒரு ந...