ஈஸ்டர் முட்டையின் வரலாறு
ஈஸ்டர் முட்டையின் வரலாறு ஈஸ்டர் என்றதும் இறைமகன் ஏசு உயிர்த்தார் என்பதுதான் நினைவுக்கு வரும். கிறிஸ்துமஸ் என்றதும் நினைவுக்கு வருவது கிறிஸ்துவின் பிறப்பு. கூடவே கிறிஸ்துமஸ் தாத்தாவும் நினைவுக்கு வருவார். கிறிஸ்துமஸ் தாத்தா பரிசுப் பொருட்கள் கொண்டு வருவார் என்று குழந்தைகள் தூங்காமல் காத்திருப்பர். அதுமட்டுமா....கிறிஸ்துமஸ் என்றால் கேக் இல்லாமலா...என்ற கேள்வியும் எழும். வகைவகையான கேக் தயாரித்து உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கொடுத்து மகிழ்வதில்தான் பண்டிகை கால மகிழ்ச்சியே இருக்கிறது. கிறிஸ்துமஸ் என்றால் கேக் என்பதுபோல ஈஸ்டர் என்றதும் நினைவுக்கு வருவது முட்டை. ஆனால் இந்த முட்டைகளைக் கொடுத்து "இயேசு உயிர்த்தெழுந்தார் "என்று வாழ்த்துச் சொல்லியிருக்கிறோமா என்றால்... இல்லை என்பதுதான் பலரின் பதிலாக இருக்கும். ஏன் முட்டையைக் கொடுத்து வாழ்த்துச் சொல்ல வேண்டும் என்கிறீர்களா? ஈஸ்டர் நாளின் சிறப்பே முட்டையில்தாங்க இருக்கிறது. இந்த ஈஸ்டர் முட்டையில் பெரிய வரலாறே அடங்கியிரு...