நன்றி சொல்ல வார்த்தை இல்லை
நன்றி சொல்ல வார்த்தை இல்லை " எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு " " எந்த நன்மையை மறந்தவர்க்கும் வாழ வழி உண்டு. ஆனால் ஒருவர் செய்த நன்மையை மறந்தவர்க்கு ஒருநாளும் வாழ்வு இல்லை" என்றார் வள்ளுவர். எதற்கு நன்றி சொல்ல வேண்டும்? யாருக்கு நன்றி சொல்ல வேண்டும்? அப்படி நான் நன்றி சொல்லும் அளவிற்கு யாரும் எனக்கு எந்த உதவியும் செய்யவில்லை. நான் உழைத்தேன். நான் வளர்ந்தேன். இன்று இந்த இடத்தில் வந்து நிற்கிறேன். யாருடைய உதவியையும் எதிர்பார்த்து நான் என்றுமே இருந்ததில்லை. இப்படி ஒரு தன்மான உணர்வு குறுக்கே வந்து கேள்விகளைக் கேட்டு நிற்கும். இந்தக் கேள்விகளும் அதற்கான மறுப்புகளும் குறுக்கும் நெடுக்குமாக ஓடி ஒரு குழப்பமான மனநிலைக்குள் நீங்கள் நின்று கொண்டிருக்கலாம். எத்தனைக் கேள்விகள் கேட்டாலும் மறுப்புரைகளை அள்ளி வீசினாலும் நீங்கள் பெற்ற உதவியை மறுதலித்துவிட்டுக் கடந்து போய்விட முடியாது. அப்படியே நீங்கள் நன்றி சொல்ல மறுத்து நின்றால், "உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு " என்று வள்ளுவர் எழுதிய வரி உங்களுக்காக மட்டுமே...