Posts

Showing posts with the label என்ன பிழைப்பு இது- கவிதை

என்ன பிழைப்பு இது?

அதென்ன பிழைப்பு மழைக்கால முன்காலைப் பொழுது உழைக்காமல் ஓய்ந்திருந்த வேளை சளைக்காமல் பாடலொன்று  செவிமடல்  துளைக்க சிந்தை எங்கெங்கோ அலைய கண்கள் அசைந்தாடும் நெல் வயலைத் தேட மயிர்க்கால்கள் சிலிர்க்க பயிர்க்கால்கள் நோக்க  வளையோரம்  கண் மினுமினுக்க நண்டொன்று வரப்போரம் மெல்ல நடை போட எட்டி நின்ற  தவளையாரும்  தாவிப் பாய்ந்தோட எட்டு கால் எடுத்து வைத்து நண்டும் பின்னாலே இடம் பெயர நெல்மணிமேல் அமர்ந்ருந்த கிளியொன்று நக்கலாய் மெல்லச் சிரிக்க அசைத்துப் பார்க்க வந்த பெருங்காற்று  நெல்தாள் மடிய  விளையாட்டுக் காட்ட தடுமாறிய கிளி வெலவெலத்து விருட்டென்று பறந்து தென்னை மட்டையில்  போயமர வரப்போரம் பதுங்கல் குழியில் பதுங்கியிருந்த தவளையாரும்  சலசலப்புக் கேட்டு  சலனமில்லாமல் ஓரக்கண்ணால்  அசைந்தாடும் ஓலையைப் பார்க்க வெட்கத்தால் முகம் சிவந்த கிளி ஈதென்ன பிழைப்பென்று  கீச்சிட்டு  பதிலுரைக்க பயந்த வாழ்க்கை தந்த  பரமனை இருவரும்  ஒருசேர பழித்திருக்க அப்பாடா...என்றபடி தென்னை மரத்தின்கீழ் உழவன்  ஒருவன் வந்தமர ஒய்யாரக் காற்று உடலோடு உறவா...