மருந்தாகி தப்பா மரத்தற்றால்....
மருந்தாகி தப்பா மரத்தற்றால்.... " மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம் பெருந்தகை யான்கண் படின் " குறள் : 217 மருந்தாகி _ நோய்தீர்க்கும் மருந்தாகி தப்பா _ தவறாது மரத்தற்றால் _ மரம் போன்றது செல்வம் _ பொருள் பெருந்தகையான்கண் _ பெருந்தன்மை உடையவனிடத்தில் படின் _ சேர்ந்திருக்குமானால் எல்லா நற்பண்புகளும் கொண்டவனிடம் சேரும் செல்வமானது ஒரு மரத்தின் எல்லா உறுப்புக்களும் மருந்தாகப் பயன்படுவதற்கு ஒப்பாக இருக்கும். விளக்கம் : செல்வம் எல்லா நற்பண்புகளும் கொண்டவனிடம் சேர வேண்டும். அத்தகைய நற்பண்பு மிக்காரிடம் செல்வம் இருப்பது என்பது ஒரு மரத்தின் இலை, பூ , காய் ,பழம், கொம்பு , வேர் ,பட்டை என அனைத்து உறுப்புகளுமே மருந்தாகப் பயன்படுவதற்கு ஒப்பானது ஆகும். பெருந்தன்மை மிக்காரிடம் இருக்கும் செல்வமும் தேவைப்பட்டவர்களுக்குத் தேவைப்பட்ட வேளைகளில் ...