ஜெபிக்கும் கரங்கள்
ஜெபிக்கும் கரங்கள் ஜெர்மனி நாட்டில் ஆல்பிரெச் ,ஆல்பிரட் என்ற இரு சகோதரர்கள் இருந்தனர். இருவருக்கும் ஓவியம் கற்றுக்கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்று ஆசை. ஆனால் போதுமான பண வசதி இல்லாததால் இருவராலும் படிக்க முடியவில்லை. ஒருவர் வேலை செய்து இன்னொருவரை படிக்க வைக்க வேண்டும். ஒருவர் படிப்பு முடித்து வந்ததும் இன்னொருவர் படிக்கலாம் என்று முடிவு எடுத்தனர். யார் முதலாவது படிக்க செல்வது? பூவா தலையா போட்டுப் பார்த்துவிட வேண்டியதுதான். பூ விழுந்தவர் முதலில் படிக்கச் செல்ல வேண்டும். தலை விழுந்தால் ,அந்த நபர் வேலை செய்து மற்றவரை படிக்க வைக்க வேண்டும். இவ்வாறு முடிவு எடுக்கப்பட்டது. ஆல்பிரட் படிக்க வேண்டும் என்ற முடிவு வந்தது. அதன்படி...