செந்தமிழ் நாடெனும் போதினிலே செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே- எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே- ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே - ( செந்தமிழ்.....) காவிரி தென்பெண்ணை பாலாறு- தமிழ் கண்டதோர் வையை பொருனை நதி-என மேவிய யாறு பலவோடத் - திரு மேனி செழித்த தமிழ்நாடு - ( செந்தமிழ்.....) வேதம் நிறைந்த தமிழ்நாடு-உயர் வீரம் செறிந்த தமிழ்நாடு- நல்ல காதல் புரியும் அரம்பையர்போல்- இளங் கன்னியர் சூழ்ந்த தமிழ் நாடு ...
Posts
Showing posts from February, 2026
சும்மா
- Get link
- X
- Other Apps
சும்மா... சும்மா.... சும்மா "என்ன பாலாமணி அக்கா... வேலை எல்லாம் முடிந்துட்டுதா... சும்மா இருந்தாப்ல இருக்கு..." "உனக்கு என்ன மகராசி நீ சும்மா இருப்பதற்கு என்றே கொடுத்து வைத்தவள்" " ஏன் உனக்கு என்னாயிற்று... நீயும் சும்மாதானே இருக்கிறாய் ." "சும்மாவா...ஒருமணி நேரம் இந்த வீட்டுல சும்மா இருக்க விட்டுருவாகளா என்ன " "சும்மா ஒரு பேச்சுக்குக் கேட்டேம்பா... அதுக்குப்போய் ....ஆமா.. உங்க அத்தை சும்மா இருக்காங்களா? " "அவுங்களுக்கென்ன ...சும்மா தின்னுட்டு தின்னுட்டு...சும்மா இருக்க முடியாமல் ஊர்வம்பு இழுத்துக்கிட்டு இருப்பாங்க..." "நீ சும்மா இருக்க சொல்ல மாட்டியா.." "சும்மா சும்மா...எத்தனை தடவைதான் சொல்றது...கேட்கணுமில்லையா..." "உன் தங்கை ஒருத்தி சும்மா இருந்தாளே... அவள் எப்படி இருக்கிறாள்.." "அவள் வீட்டில் சும்மாதானே இருக்கிறேன். கம்ப்யூட்டர் வகுப்புக்குப் போகிறேன் என்றாள். வீட்டில் சும்மாவே இருப்பதற்கு ஏதாவது சும்மா படிச்சுட்டு வரட்டுமே என்று அனுப்பி வைத்தேன்." "சும்மா இருப்பதற்கு அது தே...
நன்றி சொல்ல வார்த்தை இல்லை
- Get link
- X
- Other Apps
நன்றி சொல்ல வார்த்தை இல்லை "ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப்புடைத்து "என்ற ஒற்றைக் குறளில் கற்றையாய் வாழும் கலையைச் சொல்லித் தந்தார் வள்ளுவர். உடலை வலுவாக்கி உள்ளத்தைத் தூய்மையாக்கி மனதை அடக்கி மூச்சுப்பயிற்சியை நிதமாக்கி வாழும் கலையை நமதாக்கி வாழ்க்கைக் கலையை உயர்வாக்கி உலகாக்கி உயரே உயரே என உயர்ந்து வரும் யோகாக்கலை நிகழ்ச்சிக்குத் தகைமையாய் தன்னிகரில்லாத் தலைமையாய் தக்கதொரு தலைமையுரையாற்றி நிகழ்ச்சிக்கு மணிமகுடமாய் வீற்றிருக்கும் தலைவர்.... ...... . அவர்களுக்கு நிகழ்ச்சி அமைப்பாளர்கள் சார்பில் முதலாவது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். காரியமில்லா காட்சி கவின் பெறுவதில்லை செயலில் செம்மை செப்புவதில் இனிமை செயலாற்றுவதில் தனித்தன்மை கொண்ட செயலாளர் வி. பி. ராமநாதன் அவர்களுக்கு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு குழு சார்பில் நன்றியை உரித்தாக்குகிறேன். ஆட்சிக்குழு கல்விக்குழு தலைமைப் பொறுப்பில் இருந்து நிர்வாகத்திற்கும் கல்வி வளர்ச்சிக்கும் உற்றநல் துணையாக உடனிருந்து வழிநடத்தி வரும் .... ..... .. .. அவர்களுக்கு இந்தத் தருணத்தில் நன்ற...
உறவினர் யார்
- Get link
- X
- Other Apps
உறவினர் யார் "கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு கூடுதல் கோடி பெறும் " என்று கோடியை அள்ளி விட்டு அவர் பாட்டுக்குப் போய்விட்டார் ஔவை. ஔவை இப்படிச் சொல்லி விட்டாரே என்று நமக்கும் உறவுகளோடு ஒட்டி வாழ ஆசைதான். ஆனால் எப்படித்தான் ஒட்டநினைத்தாலும் தாமரை இலை மேல் நீர் போல ஒட்ட மறுப்பவர்களை என்ன செய்வது? அப்படி ஒட்ட மறுப்பதற்குக் காரணம்? உங்கள் குணமா? அல்லது உங்களிடம் இல்லாத பணமா? என்று சிந்தித்துப் பார்த்தால் இந்த விலகலுக்குக் காரணம் பணமாகத்தான் இருக்கும். " பணம் இருப்பவன் பின்னால் பத்துப்பேர் பதவி இருப்பவன் பின்னாலும் பத்துப்பேர் "என்ற பழமொழியைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த பத்துப்பேர் யார் யார்? என்று பட்டியலிட்டுப் பாருங்கள். அதில் உறவுகளும் இருக்கும். உங்களிடம் பொருள் இல்லாதபோது உறவுகள் உறவினர் என்று சொல்லிக்கொள்ள விருப்பப்பட மாட்டார்கள். இதுதான் எதார்த்தம். ஒன்றிரண்டு உறவுகளுக்கு மட்டும் விதிவிலக்கு இருக்கலாம் . மற்றபடி பெரும்பான்மை பணத்தின் பக்கம்தான் நிற்கும். ஒட்டி நின்று நலம் விசாரிப்பதோடு நிறுத்திக் கொள்வர். அதனால்தான் , "பணம் செய்ய வ...
நற்றாமரை கயத்தில் நல்அன்னம்
- Get link
- X
- Other Apps
நற்றாமரை கயத்தில் நல்அன்னம் "உன் நண்பன் யார் என்று சொல் நீ யார் என்று சொல்கிறேன்" என்பார்கள். நீ எப்படியோ அப்படித்தான் உவன் சேர்க்கையும் இருக்கும் . ஒத்த குணம் இல்லாரோடு நட்பு வைத்துக்கொள்வது அரிதினும் அரிது. நட்பு யாரோடு அமையும்? என்னென்ன காரணங்களுக்காக அமையும்? என்று அலசி ஆராய்ந்து பார்த்தால் ஆளுக்கொரு காரணத்தைச் சொல்லலாம். உதவிக்காக... பணத்துக்காக.... ஒத்த கருத்து இருப்பதனால் என்று மாறுபட்ட கருத்துக்களை முன்வைக்கலாம். ஆனால் அதிகப்படியான வாக்குகள் யாருக்கு கிடைக்கும் என்றால் ஒத்திசைவு அதாவது ஒத்தக் கருத்துகொண்டோர் மாட்டு மட்டுமே நட்பு அமையும் என்பதாகத்தான் இருக்கும். இது இயல்பாக அமையும் ஒரு செயல் என்றுதான் சொல்லவேண்டும். மூடனோடு அறிவாளி கைகோர்த்துச் சென்றால் பார்ப்பவருக்கே வேடிக்கையாக இருக்கும். ஒரு புதுமை நடைபெறுவது போல வினோதமாகப் பார்ப்பர். ஒத்திசைவு இருந்தால் நாட்டமும் ஈர்ப்பும் தானாய் நிகழும். தேனீக்களுக்குத் தேன் இருக்கும் இடம்தான் விருப்பமாக இருக்கும். வண்டுகளுக்கு மலர் மீதுதான் ஈர்ப்பு உண்டு. இவை எல்லாம் பயன் கருதியாகக்கூட இருக்கலாம். வண்டுகள...
உலக மகளிர் தினம்
- Get link
- X
- Other Apps
உலக மகளிர் தினம் மார்ச் எட்டாம் நாள் உலக மகளிர் தினம். வாழ்த்துகள் பரிமாறப்படும். கொண்டாட்டங்கள் ,போட்டிகள் பட்டிமன்றங்கள் என்று ஊடகங்கள் எங்கும் பெண்கள் நிகழ்ச்சிகள் களைகட்டும். நாளிதழ்கள், வார இதழ்கள்,மாத இதழ்கள் அனைத்தும் சாதனைப் பெண்களின் கட்டுரைகளால் நிறைக்கப்பட்டிருக்கும். தன்னார்வ அமைப்புகளும் அரசும் சாதனைப் பெண்களைக் கண்டறிந்து விருதுகள் கொடுத்து மரியாதை செய்யும். இவற்றை எல்லாம் பார்க்கும் நாம் அடேங்கப்பா...பெண்களுக்கு இவ்வளவு அங்கீகாரமா என்று அண்ணாந்து பார்த்து மலைத்து நிற்போம். நாமும் இப்படி ஒரு சாதனை புரிந்தால் உலகம் நம்மைக் கொண்டாடும் என்று கனவு காண வைக்கும். நாளைய சாதனையாளர் நான்தான் என்று கனவில் மிதக்க வைக்கும். ஒருவகையில் இந்தக் கொண்டாட்டம் நம்மை ஊக்குவிப்பதாகவே இருக்கும். இருக்க வேண்டும். அப்படி ஊக்குவிப்பதாக இருந்தால்தான் இந்தக் கொண்டாட்டத்திற்கான பலனைப் பெற்றதாகக் கொள்ள முடியும். ஆனால் உண்மையில் உலக மகளிர் நாள் எதற்காகத் தொடங்கப்பட்டது? உலகெங்கிலும் உள்ள சாதனையாளர்களைக் கண்டறிந்து உலகிற்கு அறிமுகப்படுத்துவதற்காகவா மகளிர் தினம் கொண்டாடப்பட்...
இன்னாது அம்ம இவ்வுலகம்
- Get link
- X
- Other Apps
இந்த உலகம் எப்படிப் பட்டது? பணக்காரர்களுக்கான உலகமா? ஏழைகளுக்கானதா? ஒருபக்கம் வறுமை . மற்றொரு பக்கம் ஆடம்பரமும் கொண்டாட்டமும். அன்றாட வாழ்வாதாரத்திற்கே அல்லாடும் மக்கள் ஒருபுறம் இருக்க கோடி கோடியாக பணம் புரளும் மனிதர்கள் மற்றொருபுறம் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஒன்றுமே புரியவில்லை. ஏனிந்த முரண்பாடு? ஏனிந்த ஏற்றத்தாழ்வு? கண்ணீர் ஒரு புறம். களியாட்டம் மறுபுறம். என்ன இது? இப்படி மாறுபட்ட வேறுபட்ட உலகம். இதைப் படைத்தவர் ஒருவரா?அல்லது வெவ்வேறு ஆட்களா? மனதிற்குள் எத்தனை எத்தனையோ கேள்விகள். யாரைக் கேட்பது? படைத்தவனிடம்தான் தான் கேள்வி கேட்க முடியும். வேறு யாரைக் கேட்க முடியும்? இதற்கெல்லாம் காரணம் இறைவன் என்றால் எப்படி இப்படி ஏற்றத் தாழ்வான உலகை அவரால் படைக்க முடிந்தது.? படைப்பின் மீதும் படைத்தவன்மீதும் ஒரு தார்மீகக் கோபம் எழுகிறதல்லவா? இப்படி படைத்தவன் மீது கேள்வி கேட்க வைத்து,அதற்கான விடையையும் சொல்லிச் செல்லும் பாடல் ஒன்று புறநானூற்றில் உள்ளது. ஒரு வீட்டில் சாவிற்கான பறை ஒலிக்கிறது. அழுகையும் கூப்பாடும் நெஞ்சைப் பிழிந்தெடுக்கிறது. மற்றொ...
விடுதலைக்கவி பாரதி
- Get link
- X
- Other Apps
விடுதலைக்கவி பாரதி முன்னுரை: பாரதி என்ற மூன்றெழுத்து நாமத்தை உச்சரிக்கும்போதே நம்முள் உணர்ச்சிப் பொங்கும். உத்வேகம் எடுக்கும். இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் கனல் தெறிக்கும் விடுதலைப்போர் கவிதைகள் வாயிலாக மக்களிடையே விடுதலை உணர்வை ஊட்டியவர் தனது சிந்தனைகள் மூலமாக மக்களைத் தட்டி எழுப்பியவர்.தூங்கிக் கிடந்த சமுதாயத்தைத் துயிலெழ வைத்தவர். இந்திய விடுதலைப் போராட்டக் களத்தில் தவிர்க்க முடியாத சக்தி பாரதி என்று சொன்னால் அது மிகையாகாது. விடுதலை வீரர்: தென் தமிழகத்தின் எட்டையபுரம் என்ற ஊரை உலகமெங்கும் எட்டிப் பார்க்க வைத்த பெருமை பாரதிக்கு உண்டு. பாரதி வெறும் இலக்கியப் புலவர் மட்டும் அல்லர். விடுதலையை வேள்வியாகச் செய்து கொண்டிருந்த விடுதலைப்போர் வீரர் என்றுதான் அவரை அடையாளம் காண முடியும். விடுதலை வேட்கை: விடுதலை வேட்கை வெறிகொண்ட ஒப்பற்ற கவிஞர் பாரதி.அவருக்கு தாய்மொழி மீதும் தாய் நாட்டின் மீதும் தணியாக் காதல் உண்டு. இதனை பாரதியின் பாடல் வரிகள் பறைசாற்றி க் கொண்டேயிருக்கும். " என்று தணியும் இந்த சுதந்திர தாகம் என்று மடியும் இந்த அடிமையின் மோகம் என்ற...
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்
- Get link
- X
- Other Apps
அரசன் முதல் பாமரன் வரை அனைவருக்கும் அறிவுரையும் அறவுரையும் தந்து வழிகாட்டும் திருக்குறளையும் ஆத்திசூடியையும் படிக்காதவர் எவரும் இருக்க முடியாது. பேச்சுத் துணைக்கும் இவர்கள் வேண்டும். ஆட்சித்துணைக்கும் இவர்கள் வர வேண்டும். தமிழில் படிப்பதற்கும் பகிர்ந்து கொள்ளுவதற்கும் ஏராளமான நூல்கள் உள்ளன. எல்லா நூல்களிலும் உள்ள மொத்தக் கருத்தையும் கத்தையாக தன்னுள் அடக்கி வைத்திருக்கும் நூல் திருக்குறள். பயண நேரங்களில் பேச்சுத் துணைக்கு வைத்திருக்க வேண்டிய நூல். இன்று உலக நாடுகள் எல்லாம் உற்று நோக்கும் இந்திய பாராளுமன்ற உரையில் திருவள்ளுவரும் ஔவையும் ஆட்சி செய்கிறார்கள் என்பதை அறியும்போது மகிழ்ச்சி மேலிடுகிறது. அப்படி என்ன பெரிதாக ஆட்சி செய்துவிடப் போகிறது... ஏதோ போகிற போக்கில் ஒன்றிரண்டு வரிகளைச் சொல்லி இருப்பார்கள் என்று நினைக்கத் தோன்றும். அந்த ஒன்றிரண்டு வரிகளும் உலகம் முழுவதிலும் பேசுபொருளாகிவிடும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட வரிகள். இன்றைய சூழலுக்கும் உகந்ததாக இருப்பதில்தான் அதன் பெருமை நிலைநிறுத்தப்படுகிறது. இன்று நாட்டில் விவசாயம் சார்ந்த சிக்கல்கள் எழுந்துள்ளன. விவசா...
மாதக்கடைசி
- Get link
- X
- Other Apps
மாதக் கடைசி சங்கருக்கு விதவிதமான வண்ணங்களில் டீ ஷர்ட் அணிய ஆசை. எந்தக் கடைக்குப் போனாலும் கண்கள் கடை முழுவதும் டீ ஸர்ட்டை சுற்றிச் சுற்றியே வரும். அன்றும் அப்படித்தான் தெருவோரமாக டீ ஷர்ட் விற்கும் ஒரு வியாபாரியின் கடந்து போனான். அவனைக் கடக்க விடாதபடி வியாபாரியின் குரல் தடுத்து நிறுத்தியது. சற்று தடுமாறிய படி திரும்பிப் பார்த்தான். "அம்மா வாங்க ....ஐயா வாங்க...." என்று கூவிக் கொண்டிருந்த வியாபாரி சங்கர் நிற்பதைக் கண்டதும் "வாங்க சார் வாங்க.... என்ன கலருல வேணும். ஐயா கலருக்கு எல்லா கலரும் பொருத்தமாகத்தான் இருக்கும். உங்களுக்கு ஏற்ற கலர்... நல்ல நல்ல எழுத்து வடிவங்களில் இருக்கிறது...வாங்க வந்து பாருங்க " என்று நாலைந்து முறை எடுத்து விரித்துக் காட்டினான். டீசர்ட்டை வாங்குவதற்கு முன் சங்கர் கை தானாக பேண்ட் பாக்கெட்டுக்குள் சென்றது. வியாபாரி புரிந்து கொண்டான். "அவ்வளவு அதிகமெல்லாம் இல்லீங்க ஜஸ்ட் கன்ரெட் ரூப்பீஸ் தான். இப்போ இல்லன்னா எப்பவும் இந்த விலைக்குக் கிடைக்காது சார்.. வாங்க சார்...வாங்க சார்... வாங்கிட்டுப் போங்க " என்று விடாமல் தொண்டை தண்ணீர...
சிலப்பதிகாரம் கூறும் மூன்று உண்மைகள்
- Get link
- X
- Other Apps
சிலப்பதிகாரம் கூறும் மூன்று உண்மைகள் சிலப்பதிகாரம் உணர்த்தும் மூன்று உண்மைகள் பற்றி படிக்காமல் பள்ளிப் பருவத்தைக் கடந்து வந்திருக்க முடியாது . பள்ளியில் படிக்கும் போது கேள்விக்கு பதில் எழுதுவதற்காக இதனைப் படித்திருப்போம். அதன் பிறகு அதைப் பற்றி பெரிதாக எந்தச் சிந்தனையும் எழுந்திருக்காது. ஆனால் இவை அனைத்தும் மதிப்பெண்ணுக்காகப் படித்துவிட்டு அப்படியே கடந்து போவதற்காகச் சொல்லப்பட்டவை அல்ல. வாழ்க்கைப் பாடங்கள். இப்படிச் செய்தால் என்னென்ன தண்டனைகளை நாம் அனுபிப்பதிலிருந்து தப்பவே முடியாது என்று சொல்ல வந்தவை. எந்த மூன்று உண்மைகள் என்பதைப்பற்றி இக்கட்டுரையில் காண்போம். 1. அரசியல் பிழைத்தோருக்கு அறங்கூற்றாகும்”. 2.உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர். 3.“ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்” என்ற மூன்று உண்மைகளையும் உரைப்பதற்காக எழுதப்பட்டது சிலப்பதிகாரம். 1. அரசியல் பிழைத்தோருக்கு அறங்கூற்றாகும்: தவறு செய்தால் தண்டனை உண்டு. அந்தத் தண்டனை வெளியிலிருந்து யாரும் வந்து கொடுக்கப் போவதில்லை. அந்தத் தண்டனையிலிருந்து சாதாரண மக்கள் முதல் மன்னன் வரை யாரு...
பெரிதினும் பெரிது கேள்
- Get link
- X
- Other Apps
பெரிதினும் பெரிது கேள் "கற்றலினாயினும் கேட்க" என்றார் வள்ளுவர். கற்றலினும் கேட்டல் நன்று. ஆனால் என்ன கேட்க வேண்டும்? எப்படிக் கேட்க வேண்டும்? எதைக் கேட்க வேண்டும்? யார் சொல்வதைக் கேட்க வேண்டும்? இப்படி பல கேள்விகள் முன்வந்து நின்று விடை கேட்டு நிற்கும். இவை எல்லாவற்றிற்கும் நல்லதைப் கேட்க வேண்டும் என்று சொல்லி கடந்து போய்விடுவோம். ஆனால் பாரதி கேட்டல் எப்படி இருக்க வேண்டும் என்று மாறுபட்ட கோணத்தில் சிந்தித்திருக்கிறார். அதனால் நமது அனைத்துக் கேள்விகளுக்கும் ஒற்றை வரியில் விடை தந்துவிட்டார். "பெரிதினும் பெரிது கேள்" அருமையான பதில். யாரும் எதிர்பார்க்காத பதில். என்ன பெரிதாக கேட்க வேண்டும்? உனக்கு என்ன தேவையோ அது இதுவரை இல்லாததாக இருக்க வேண்டும். அதைக் கேள். இதுதான் இந்தப் பெரிதினும் பெரிது கேள் என்பதற்கான பொருளாக இருக்க வேண்டும். ஆனால் இந்தக் கேட்டல் ஆளாளாளுக்கு வேறுபடலாம். அவர்களுடைய கருத்து நமக்கு ஏற்புடையதாகவும் இருக்கலாம். அல்லாததாகவும் இருக்கலாம் . அவரவர் மனதில் பட்டபடி முன்னூற்று அறுபது பாகையிலிருந்தும் விமர்சனங்களையும் கருத்துக்களையும் பொருளையும்...
முறைமைக்கு மூப்பு இளமை இல்
- Get link
- X
- Other Apps
முறைமைக்கு மூப்பு இளமை இல் ஒரு குற்றத்திற்கான தண்டனை எப்படி வழங்கப்படுகிறது? நீதி முறையாக சட்டத்திற்கு உட்பட்டு வழங்கப்படுகிறதா இல்லை ஒருவர் சமூகத்தில் எந்த நிலையில் இருக்கிறார் என்ற பின்புலம் ஆராயப்பட்டு தண்டனை வழங்கப்படுகிறதா? சில நேரங்களில் இப்படிப்பட்ட கேள்விகள் எழாமலில்லை. ஒரே குற்றத்திற்கு வெவ்வேறு மாதிரியான தண்டனை வழங்கப்படுகிறது. சட்டம் அனைவருக்கும் சமம் என்று சொல்லிக் கொள்கிறோம். ஆனால் கொடுக்கப்படும் நீதிதான் வேறுபடுகிறது. ஏன் இத்தனை முரண்பாடுகளும் வேறுபாடுகளும்.? " ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்துசெய் வஃதே முறை. (குறள்: 541) என்கிறார் வள்ளுவர். "நிகழ்ந்த குற்றத்தினை ஆராய்ந்து, விருப்பு வெறுப்பின்றி, சார்புநிலையைத் தவிர்த்து, நீதி வழங்கப்பட வேண்டியதுதானே நியாயம் "என்கிறார் வள்ளுவர். ஒருவர் ஒரு குற்றம் செய்துவிட்டால் முதியவர் அல்லது இளைஞர் எனக் குற்றவாளியின் வயதினைக் கருத்தில் கொண்டு, சார்பு நிலையுடன் நீதி வழங்கப்படுவது சரியல்ல என்கிறார் இன்னொருவர். யாரிவர்? எதற்காக இப்படிச் சொ...
புதியதோர் உலகம் செய்வோம்
- Get link
- X
- Other Apps
புதியதோர் உலகம் செய்வோம் "தமிழுக்கு அமுதென்று பேர்_ அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர் " என்ற தேன்தமிழ்ப் பாடல் வரிகளைத் தந்து என்நேரமும் காதுகளில் தேனிசையாய் ஒலித்துக் கொண்டிருப்பவர் பாரதிதாசன். உலகில் மாற்றங்கள் நிகழ்வதும் அதை நாம் ஏற்றுக் கொள்வதும் தொடர்ந்து நடைபெற்று வருவதும் இன்று நேற்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் செயல் அல்ல. மாற்றங்களை நோக்கிய பயணம் எல்லா காலங்கிலும் நடைபெற்று வந்திருக்கிறது. அந்தப் பயணம்தான் புதிய படைப்புகளையும் புதுமைகளையும் கொண்ட புதிய சமுதாயத்தைப் படைக்கும். பழைமையிலேயே இருந்து கொண்டால் புதுப்பித்தலைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் ஒரு முடக்கம் ஏற்பட்டுவிடும். முடமாகிப் போவோம். எப்போதும் புதியவற்றை அறிய வேண்டும் புதிய சமுதாயத்தைக் காணவேண்டும் என்ற கனவு எல்லோரிடமும் இருக்கும். இருக்க வேண்டும். அதுதான் செயலாக்கத்துக்கு வித்திடுவதாக அமையும். நமது கனவு செயல்வடிவம் பெறும்போது சமூகமும் சமூக நடைமுறைகளும் புதிப்பிக்கப்பட்ட நிலையில் புதிய பரிணாமத்தை எட்ட வாய்ப்பு ஏற்படும். மாற்றம் தனிமனிதனால் ஏற்பட்டுவிடாது. ஒருங்கிணைந்து செயலாற்றினால் மட்டுமே புதிய உலக...
அச்சம் தவிர்
- Get link
- X
- Other Apps
அச்சம் தவிர் "அறஞ்செய விரும்பு "என்று தனது ஆத்திசூடியை அறத்தோடு தொடங்கினார் ஔவை. பாரதியார் தனது புதிய ஆத்திசூடியை "அச்சம் தவிர் "என்று தன்னம்பிக்கையூட்டித் தொடங்கியிருக்கிறார். அத்தோடு விட்டு விட்டாரா? அடுத்த வரி "ஆண்மை தவறேல்" அதாவது மன வலிமையை இழக்காதே! நம்பிக்கை தரும் வரி இல்லையா? அதைத்தொடர்ந்து மூன்றாவதாக "இளைத்தல் இகழ்ச்சி" என்கிறார். அதாவது சோர்ந்துபோய் பின்தங்கிவிடக் கூடாது.அது இகழ்வடைய காரணமாக அமைந்துவிடும். என்று தட்டி எழுப்பிக் கொண்டே வருகிறார். இதுதான் பாரதியின் பாடல்களில் இருக்கும் மந்திரமும் தந்திரமும். பாரதியின் பாடல்கள் என்றாலே ஒரு இளமையின் துள்ளலும் உயிரோட்டமான உணர்வும் உணர்ச்சியூட்டலும் கொண்டதாகவே இருக்கும். எதற்கும் அஞ்சா துணிச்சலை வளர்த்தெடுக்க உரமூட்டும் கருத்துக்கள் அதற்குள் பொதிந்து வைக்கப்பட்டிருக்கும். நம்மைத் தட்டி எழுப்புவதாக இருக்கும். இலக்கண வரம்புக்கு உட்படாமல் புதுக்கவிதைக்குப் பாதை அமைத்துத் தந்தவராயிற்றே! யாருக்கு அஞ்ச வேண்டும்? எதற்கு அஞ்ச வேண்டும்? என்று துணிச்சலோடு சொல்ல வந்த கருத்தினை அள்ளி வீசிய...
சீரியர் கெட்டாலும் சீரியரே
- Get link
- X
- Other Apps
சீரியர் கெட்டாலும் சீரியரே "கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு சுட்டாலும் வெண்மை தரும்" என்று சொல்லித் தந்த ஔவைக்கு அத்தோடு நம்மை விட்டுவிட மனமில்லை. சங்கு எத்தனை பேருக்குத் தெரியுமோ என்ற ஐயம் ஔவையின் மனதில் எழுந்தது. தெரிந்தவர்கள் நான் சொன்ன உவமை மூலம் சொல்ல வந்த கருத்தைப் புரிந்திருப்பார்கள். தெரியாதவர்களுக்கு புரிய வைக்க வேண்டுமே! அதற்கு என்ன செய்வது? எல்லாருக்கும் புரியும்படியான இன்னொரு பொருளைக் கையிலெடுத்து விளங்கும்படியாகச் சொல்லி வைப்போம். அப்படியாவது புரிகிறதா என்று பார்ப்போம் என்று நினைத்தார் ஔவை. நாமும் பல நேரங்களில் புரிந்து போல தலையை ஆட்டுவோம். ஆனால் புரிந்திருக்காது. சரி போகட்டும் என்று அப்படியே கடந்து போய்விடுவோம். திரும்பத்திரும்ப சொல்லித்தரும் போதுதான் புரிந்து கொள்வோம். அல்லது சில நேரங்களில் வாசித்த மறுநிமிடமே மறந்துவிட்டு கண்டும் காணாமல் போய்விடுவோம். எல்லாவற்றிற்கும் மேலாக தெரிந்த உவமைகள் மூலம் விளக்கப்பட்டிர...