கடவுள் ஏன் கல்லானார்
கடவுள் ஏன் கல்லானார் கேள்வி கேளுங்கள். கேட்க கேட்கத்தான் அறிவு வளரும். கேள்வி கேட்கும்போது புதியனவற்றைத் தெரிந்து கொள்கிறோம். அதிகம் கேள்வி கேட்கப்படும் இடங்கள் மூன்று என்பர். முதலாவது வீடு. ஏன் ? எதற்கு ? எங்கே ? என்ற கேள்விகள் கேட்காத வீடுகள் இருக்க முடியாது. சண்டைக்கான அடித்தளமே கேள்வியில்தான் தொடங்குகிறது. வீடுகள் தான் கேள்வி கேட்கும் உரிமையைக் கொடுக்கும் இடம். சுதந்திரமாக எந்தக் கேள்வியும் கேட்கலாம். விடை சரியாக கிடைக்கும். எதிர்மறையாக வரும் வந்து விழும். சில நேரங்களில் தாறுமாறாக தட்டியும் வந்து சேரும். எது எப்படியோ கேள்விக்கான விடை எந்த வகையிலோ வந்து சேர்ந்து விடும். இரண்டாவதாக வகுப்பறை . அதிகம் கேள்விகள் கேட்கப்படும் இடம் வகுப்பறை. மாணவர்களை அதிகம் கேள்வி கேட்க அனுமதியளிக்காத இடம் என்றுதான் சொல்ல வேண்டும். பெரும்பாலான ஆசிரியர்கள் மாணவர்களைக் கேள்வி கேட்க அனுமதிப்பதில்லை. மாணவர்களை அதிகம் கேள்விகள் கேட்க அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் ஒரு புரிதலோடு கற்க அனுமதியளித்ததாக இருக்கும். மூன்றாவது நீதிமன்றம் கேள்வி கேட்கப்படும் ...