தமிழ்ப் போட்டி
தமிழ்ப் போட்டி காட்டிலுள்ள விலங்குகள் எல்லாம் தங்கள் குட்டிகள் படிப்பதற்காக ஒரு பள்ளியை ஆரம்பித்தன. பள்ளி ஆசிரியராக கரடி அண்ணா நியமிக்கப்பட்டார். ஒரு நாள் பள்ளியை மேற்பார்வையிட வந்த காட்டு ராசா சிங்கம் மாணவர்களுக்கு ஒரு போட்டி வைக்கும்படி ஆசிரியரிடம் கேட்டுக் கொண்டார். ஆசிரியரும் மாணவர்களின் தமிழ் அறிவு எப்படி இருக்கிறது என்று அறிவதற்காக போட்டி ஒன்று நடத்துவது என்று தீர்மானித்தார். ஆலமரம் போட்டி நடைபெறும் இடமாக அறிவிக்கப்பட்டது. பதினொரு மணிக்கு எல்லா விலங்குகளும் ஆலமரத்தடியில் வந்து கூடும்படி அறிவிக்கப்பட்டது. அதன்படி எல்லா விலங்குகளும் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே ஆலமரத்தடியில் வந்து நின்றன சிங்கத்தின் தலைமையில் போட்டி தொடங்கியது. ஆசிரியர் போட்டியை நடத்துவதற்குத் தயாராக வந்து நின்றார். முதலாவது போட்டியின் விதிமுறைகளைத் தெரிவித்தார் ஆசிரியர். விடை தெரிந்தவர்கள் கையை உயர்த்த வேண்டும். முதலாவது கையை உயர்த்துபவருக்கு முதல் வாய்ப்பளிக்கப்படும். யாரும் முணுமுணுக்கவோ கையசைப்பின் மூலமோ பிறருக்கு உதவுதல் கூடாது. அப்பட...