ஒரு பிரசிடென்ட் உருவாகிறார்
ஒரு பிரசிடென்ட் உருவாகிறார் "மேலத் தெருவுல சுடலைமாடன் கோவில் பக்கத்துல சர்க்காரு அதிகாரிக வந்துருக்காவளாம். நீரும் சட்டுன்னு ரெண்டு மொடக்கு நீத்தண்ணி குடுச்சிபுட்டு ஓடிப் போய் என்ன யாதுன்னு பாரும் " தோட்டத்துக்குப் போயிட்டு வந்ததும் வராததுமா தாத்தாவை துரத்தாத குறையா துரத்தித் கொண்டிருந்தார் ஞானம்ம பாட்டி "எதுக்கு வந்துருக்காவளாம்?" என்று கேட்டபடியே கட்டிலில் போய் உட்கார்ந்தார் வேதநாயகம் தாத்தா. "உக்காந்துட்டீரா? இனி எழும்ப ஒருமணி நேரம் ஆக்குவீர...." "எதுக்கு வந்துருகாவன்னு கேட்டதுக்குப் பதில் சொல்லு" "என்கிட்ட சொல்லிகிட்டு தான் வந்துருக்காவ ஓடிப் போய் ஒரு எட்டு பாத்துட்டு வாரும்னா... எடக்குமடக்கா கேள்வி கேட்டுட்டு கிடக்கீரு" "என்னத்துக்கு யாதுக்குன்னு தெரியாம எதுக்குப் போகணும்?" "உம்மட்ட எல்லாத்தையும் ஒண்ணு விடாம எழுதணும்..போய் பாத்துட்டு வாரும்ன்னா பார்த்தூட்டு வாரும்ம...." "கூனுகுறுக்கு முறிய ஏர் உழுது கிட்டு வந்துருக்கேன். செத்த குறுக்க அனத்த விட மாட்டாள... நொய்...நொய்ன்னுட்டு"?" . "ந...