மூவகை மாணாக்கர்
மூவகை மாணாக்கர் இலக்கண நூல்கள் என்றதும் தொல்காப்பியம் , நன்னூல், யாப்பருங்கலக் காரிகை, தண்டியலங்காரம் இவை யாவும் நம் மனதில் வந்து போகும். இவை எல்லாம் யார் படிப்பார்கள் ? கடினமாக இருக்கும் என்று எண்ணத் தோன்றும். புலவர்கள் படிக்க வேண்டியது எல்லாம் நமக்கு எதற்கு ? என்று கேட்கத் தோன்றும். நன்னூலார் உங்களுக்கும் எனக்கும்கூட இலக்கணம் எழுதி இருக்கிறார். எங்களுக்கா....ஆச்சரியமாக இருக்கிறதா ? நீங்கள் கட்டுரையைப் படிக்கிறவர்தானே! அப்படியானால் உங்களுக்குத்தான். உங்களுக்குத்தாங்க... மாணவர்களுக்குத்தாங்க... நாங்கள் மாணவர்கள் இல்லையே ! நாங்கள் எப்போதோ படித்து முடித்து விட்டோம் என்கிறீர்களா? படித்து முடித்துவிட்டவர் எவருமிலர். வாழ்நாள் முழுவதும் நாம் மாணவர்கள்தான். நாளும் படித்துக் கொண்டுதான் இருக்கிறோம். கற்றல் என்பது புத்தகத்தைப் படிப்பதால் மட்டும் வருவதல்ல. செவிவழிக் கற்றலும் நாளும் நமக்குள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. அதுவும் கற்றல்தான் அதனால் நாமும் மாணவர்கள்தான். மாணவர்களை பள்ளிகளில் முதல்நிலை , சராசரி, சராசரிக்கும் கீழ் என்று மூன்று வகையாக...