Posts

Showing posts from January, 2023

உடம்பொடு உயிரிடை என்ன....

உடம்பொடு உயிரிடை என்ன.... " உடம்பொடு உயிரிடை என்னமற்று  அன்ன மடந்தையொடு எம்மிடை நட்பு               குறள் :  1122 உடம்பொடு- உடம்புடன் உயிரிடை -உயிருக்கான என்ன - எத்தன்மையது அன்ன - அத்தன்மையது மடந்தையொடு - மங்கையோடு எம்மிடை -எங்களுக்கிடையிலான நட்பு - உறவு எனக்கும் என் தலைவிக்குமான நட்பு உடம்புக்கும் உயிருக்கும் உள்ள நட்பு  எத்தகையதோ அத்தன்மையது. விளக்கம் : அவளில்லாமல் என்னால் உயிர்வாழ முடியாது. எனக்கும் என் காதலிக்கும் இடையிலான நட்பு எத்தகையது தெரியுமா? உடம்புக்கும் உயிருக்கும் இடையினலான நட்பு  எத்தகையதோ அத்தகைய நட்பு எங்கள் நட்பு. உயிர் பிரிந்தால் உடல் இருந்தும் இல்லாததாகிவிடும். எனக்கு என் காதலி உயிர் போன்றவள். அவளுக்கு நான் உயிர் போன்றவன். உடலொடு உயிராய் இணைந்து விட்டோம். இனி எங்களுக்குள் பிரிவு இல்லை.  பிரிந்தால் எங்களால் உயிர் வாழமுடியாது உடலும் உயிரும்  சார்ந்திருக்கும் போதுதான் அந்த வாழ்வில் உயிர்ப்பு உண்டு. அவளும் நானும் சேர்ந்திருந்தால் தான்  எங்கள் வாழ்வு உயிர்ப்புடையதாக இருக்கும். மனம் இணைந்த நட்பு  என்...

இணங்கி இருப்பது நன்று

இணங்கி இருப்பது நன்று "மறவற்க மாற்றார் கேண்மை துறவற்க துன்பத்துள் துப்பாயார் நட்பு" என்றார் வள்ளுவர். சான்றோர் நட்பை ஒருபோதும் விட்டுவிடாதே. துன்பத்தில் துணையாக இருந்தவர்களின் நட்பையும் விட்டுவிடாதே. நட்பு என்றால் இணக்கமாக நடந்து கொள்வது. இணக்கம் எப்போது ஏற்படும்? ஒத்த கருத்துடையோரிடம் இணக்கம் ஏற்படலாம். ஒத்த வயதினரோடு இணக்கம் ஏற்படலாம். ஒரே இடத்தில் வேலை செய்வோரிடம் இணக்கம் ஏற்படலாம். ஒத்த தொழில் புரிவோரிடையே இணக்கம் ஏற்படலாம். இது சூழல் காரணமாக ஏற்படும் இணக்கம். இது நல்லதா? இந்த இணக்கத்தினால் ஏதேனும் நன்மை பயக்குமா? உறுதியாகச் சொல்ல முடியாது. நன்மை இருக்கலாம். அதனால்தானே இணக்கமாக இருக்கிறோம். போக்குவரத்து வசதிக்காக... பேச்சுத்துணைக்காக... தொழில் முன்னேற்றத்திற்காக ... என்று ஏதோ ஒரு காரணம் கருதி வந்த இந்த இணக்கம்  கடைசிவரை தொடருமா? உறுதியாகச் சொல்ல முடியாது. அதனால்தான் இது நன்று என்று முடிவு செய்யப்படவில்லை. ஆனால் ஔவை இவை இவை எல்லாம் நன்று என்று ஒரு பட்டியல் தருகிறார் . அப்போது யாரோடு இணக்கமாக இருப்பது நன்று என்றும் கூறுகிறார் கேளுங்கள். இதோ பாடல் உங்களுக்காக.. " நல...

குலத்தளவே ஆகுமாம் குணம்

குலத்தளவே ஆகுமாம் குணம்  நாய் வாலை நிமிர்த்த முடியுமா? முடியாதல்லவா ! அதே போன்றுதான் சிலரின் பிறவிக் குணத்தை யாராலும் மாற்ற முடியாது. அது  என்ன பிறவிக்குணம்?  இப்படியொரு கேள்வி எழாமலில்லை.    சில செயல்கள் நமது   பழக்கத்தால் வருவன.  எடுத்துக்காட்டாக   செந்தமிழ் நாப்பழக்கம் வருவது.  கல்வி  மனப்பழக்கம்  ஒழுக்கம் நடைப் பழக்கம்  என்கிறார் ஔவை. ஆனால் நட்பும்  தயையும்  கொடையும் பிறவிக்குணம்  என்று சொல்லியிருக்கிருக்கிறார்.    சிந்திக்க வேண்டிய செய்தி.    சில குணங்கள்  பழகப்பழக  வந்துவிடும்.  ஆனால் இன்னும் சிலவற்றை பழக்கத்தினால்  ஏற்படுத்திக் கொள்ள முடியாது  என்பதுதான் நிதர்சனமான உண்மை. கொடை பிறர் மெச்ச வேண்டும்  என்பதற்காக செய்வோரும் உண்டு. அவர்கள் எதிர்பார்த்த புகழும் அங்கீகாரமும் கிடைக்காதபோது நாளடைவில் அந்தக் கொடை குறைந்து போகும். இல்லாமலே போய்விடும். அதனால்தான் பிறவிக்கு குணத்தால்  வருவதுதான் கொடை, தயை, நட்பு எல்லாம் என்பது  ஔவை கருத்து. அப்படி பிறவிக்...

தளர்ந்து வளையுமோ.....?

தளர்ந்து வளையுமோ....? "மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின்" என்றார் வள்ளுவர். தன் உடம்பிலிருந்து மயிர் நீங்கினால் கவரிமா உயிர் வாழாதாம். அதுபோல சான்றோர் மானம் இழக்க நேரிட்டால் உயிரை  விட்டு விடுவராம். தன்மானத்தோடு வாழ வேண்டும் என்ற எண்ணத்தோடு வாழ்பவர்களுக்கு தனது தன்மானத்திற்கு ஓர் இழுக்கு ஏற்படும் சூழல் ஏற்படும்போது அவர்களால் அதனைச் சாதாரணமாக  எடுத்துக்கொண்டு கடந்து போக முடியாது. நமக்கு இப்படி ஒரு சூழல் வந்துவிட்டதே என்று எண்ணி எண்ணி மனம் வெம்பி  போகும்.  ஒரு கட்டத்தில் அதனை   தாங்கிக்கொள்ள முடியாது  மனம் ஒடிந்து அவமானப்பட்டு அப்படியே மடிந்து போவர். எவ்வளவுதான் ஒரு மனிதனால்  தாங்கிக்கொள்ள முடியும்? வளைந்து கொடுக்க முடியாதநிலை வரும்போதுதான் ஒடிந்து போகின்றனர். உயிர் விடத் துணிகின்றனர். தாங்க முடியாத நிலையில் அது ஒருவரை இறப்பு வரை  கொண்டு சென்றுவிடுகிறது. இதே கருத்தைத்தான்  ஔவையும் " உற்ற இடத்தில் உயிர் வழங்கும் தன்மையோர் பற்றலரைக் கண்டால் பணிவரோ? கல்தூண் பிளந்து இறுவது அல்லால் பெரும்பாரம் தாங்கின் தளர்ந்து வளைய...

நாகாக்க...!

Image
நாகாக்க ... காக்க ....காக்க...நாவைக் காக்க.. அதென்ன நாவைக் காக்க...?        நாவைக் காக்க முப்பத்து இரண்டு        காவலாளிகள் இருக்கின்றனரே... போதாதா?        இன்னும் வேறு எத்தனை காவலாளிகள்         போட்டு காக்க வேண்டும்?        நானூறு காவலாளிகள் போட்டாலும் போதாதுங்க...        நாமதான் அதை அடக்கி வைக்கணும்.       பகலில் பக்கம் பார்த்துப் பேசணும்.        இரவில் அதுவும் பேசக் கூடாது தெரியுமிலல...               "  யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்         சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு"        என்கிறார் வள்ளுவர். எதைக் காக்காவிட்டாலும் நாவைக்  மட்டுமாவது காத்துக்கொள்ள வேண்டும். அப்படி காத்துக் கொள்ளாதிருந்தால் தவறான சொற்களைப் பயன்படுத்திவிட்டு துன்பப்பட நேரிடும்.  வள்ளுவரின் வாய்மொழியை மதியாமல்    வாங்கிக் கட்டிக் கொண்ட ...

தேடிச் சோறு நிதந் தின்று

Image
தேடிச் சோறு நிதந் தின்று.... வயிற்றுக்காகத்தானே இந்தப்பாடு என்று சொல்வதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். எண்சாண் உடம்பில் ஒரு சாண் வயிறே பிரதானம் என்று சொல்லிச் சொல்லி பெருமைப்பட்டிருக்கிறோம். அதெல்லாம் ஒரு வாழ்க்கையா? வாழ்க்கை என்றால் எப்படி  இருக்க வேண்டும்?  பிறந்தோம்...இருந்தோம்... வாழ்ந்தோம் என்று இருக்கக்கூடாது. எந்தக் கவலையும் இல்லா வாழ்க்கை  வாழணும் . கவலை இல்லா வாழ்க்கை வாழ வேண்டும் என்று ஆசைதான். ஆனால் இவை எல்லாம் நடக்குமா? நல்வினையோ தீவினையோ எல்லாம் இறைவன் செயல். நல்வினை எல்லாம் இறைவன் செயல். தீவினையுமா...? தீவினையும் அவன் செயல் என்றால் சற்று நெருடலாக இருக்கிறதே என்று கேட்கத் தோன்றும். அப்படியானால் இதிலிருந்து தப்பிக்க என்னதான் வழி? ஒன்றும் செய்யமுடியாது. அதுவும் இறைவன் கையில்தான் இருக்கிறது. இறைவனிடம் முரட்டுக் பக்தன் பிடிவாதம் பிடிப்பதுபோல பிடிவாதமாகக் கேட்டால் கண்டிப்பாக இறைவன் கேட்ட வரம் அருளுவார் .நன்மை வேண்டும் என்று விடாப்பிடியாக கேட்டால் நன்மை கிடைக்கும். இது இறை நம்பிக்கை உள்ள அனைவரும் ஒத்துக்கொள்ளும்  உண்மை. நடந்ததா... ? நடக்கவில்லையா ...?...

பருவத்தால் அன்றிப் பழா

Image
பருவத்தால் அன்றிப் பழா  நல்ல மழை பருவம் தப்பக்கூடாது என்று உழுது விதை விதைத்தாயிற்று. அதன்பின்னர் ஒரு மாதத்திற்குள் வயல் எங்கும் பச்சைப்பசேல் என்ற காட்சி. பார்க்கப் பார்க்க பெருமிதம். இன்னும் ஓரிரு மாதங்கள்தான் கதிர் வந்துவிடும். வீட்டு வறுமையும் போய்விடும். வயிற்றைக் கட்டி வாயைக்கட்டி இதுவரை வந்தாயிற்று. ஆனால் வீட்டில் வறுமை. நாளைய விடியலுக்கு என்ன செய்வது ? கேள்வி முன் வந்து நிற்க வயதுக்கு ஓடுகிறார் உழவர். இன்றைக்காவது கதிர் முற்றி அறுவடைக்குப் தயார் நிலைக்கு வந்துவிடுமா? என்ற ஒரு நப்பாசை. ஆனால் கதிர்கள் இன்னும் விளையவில்லை.. என்ன செய்வது? தலையில் கை வைத்தபடி வரப்பிலேயே இருந்து விடுகிறார். விவசாயிக்குத்தான் இந்த நிலை என்றால்.... பறவைகளுக்கும் இதே நிலைதான். காடு முழுவதும் மரங்கள் வளர்ந்து நிற்கின்றன. ஆனால் ஒரு மரத்திலாவது பழங்களைக் காணோம். பறவைகள் அங்குமிங்கும் அலைமோதுகின்றன. இரைக்கால எங்கெங்கெல்லாமோ பறந்து திரிகின்றன. எங்கும் பழங்கள் இல்லை. பூவும் பிஞ்சும் காயும் என்று உண்பதற்கு தயார்நிலையில் இல்லை. பறைவைகள் இரை கிடைக்காமல் கூடுக...

வேண்டிய வேண்டியாங் கெய்தலால்.....

வேண்டிய வேண்டியாங் கெய்தலால்.... வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம் ஈண்டு முயலப்  படும் "                  குறள் : 265 வேண்டிய - விரும்பியவை வேண்டியாங்கு - விரும்பியவாறு எய்தலால் - பெறலாம் செய்தவம் - தவம் செய்தல் ஈண்டு-இங்கே முயலப்படும் - முயற்சி செய்யப்படும். நாம் விரும்பியவற்றை விரும்பியபடியே பெறமுடியும் ஆதலால் தவம் செய்தலை இங்கேயே முயற்சி செய்து பெற்றுக் கொள்வீராக. விளக்கம் நாம் விரும்பியதை  விரும்பியபடியே பெற்றுக்கொள்ள வேண்டுமா? அதற்காக வேறு எங்கும் செல்ல வேண்டியதில்லை. நமது விருப்பத்தை உறுதியாக மனதில் எழுதி வைத்துக்கொள்ளுங்கள். அதனைப் பெறுவதற்காக ஒரு தவம் போல காத்திருங்கள். முயற்சி மேற்கொள்ளுங்கள். கண்டிப்பாக அது உங்களை வந்தடையும். வயதான பிறகு செய்யலாம் குடும்ப வாழ்க்கையை விட்டுவிட்டு கடுந் தவம் மேற்கொள்ளலாம். இப்படி எந்த  நினைப்பும் வேண்டாம். இல்லறத்தில் இருந்தாலும் தவம் செய்து நாம் விரும்பியதைப் பெற்றுக் கொள்ளலாம். தவத்தை ஒரு குறிக்கோளை பெறுவதற்காக விருப்பமுடன் செய்தால் விரும்பியவற்றை எல்லாம் விரும்பியபடி மே அந்தத் தவ...

அட்டாலும் பால் சுவையில் குன்றாது....

அட்டாலும் பால் சுவையில் குன்றாது.... பேச்சுத் துணைக்கு வருவதல்ல நட்பு. பிறர் பேசாது நம்மைப் பார்த்துக் கொள்வதுதான் உயர்ந்த நட்பு. துன்பம் வந்த காலத்து தொலைந்து போகும் நட்பு  நட்புல்ல. சிலர் வலியவலிய வந்து நம்மோடு உறவு கொண்டிட நினைப்பர். நாமும் எவ்வளவு நல்லவர்களாக இருக்கிறார்கள் என்று நம்பிவிடுவோம். அந்த நம்பிக்கையில் மனதில் இருக்கும் கவலைகளை எல்லாம் சொல்லிவிடுவோம். வீட்டு நிலவரத்தை விலாவாரியாக சொல்லி வைப்போம். இது ஒருநாள் துன்பத்தில் வந்து முடியும். நமக்கு ஏதாவது துன்பம் வந்தபோது அந்த நட்பு காணாமல் போய்விடும். அல்லது நான் அப்பவே நினைத்தேன் என்று முதுகின் குச் பின்னால் தவறான முத்திரை பதிவு செய்துக்கொண்டு திரியும். பெரும்பாலான நட்புகள்  இப்படித்தான் இருக்கின்றன.  யாரும் நெருங்கிப் பழகிவிட்டால்  அவர்களை நண்பர்கள் என்று  எண்ணிவிடாதீர்கள். நட்புக்கான நற்பண்பு இல்லையா அவர் நண்பராக ஏற்றுக் கொள்ளாதீர்கள். பாலுக்கு என்று இயல்பாகவே ஒரு சுவை உண்டு. அது எவ்வளவு காய்ச்சி வற்றிப்போனாலும் அதன் சுவை கூடுமே தவிர குறைவு படாது. அதுதான் பாலின் இயல்பு. அதுபோல நெருக்கடி நேரத்திலும் ந...

நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்....

நல்லார் ஒருவர்க்குச்  செய்த உபகாரம்  நேற்று செய்த உதவியை இன்றே மறந்துவிட்டு நீ யாரோ?நான் யாரோ ? என்று கண்டும் காணாமலும் சென்று கொண்டிருக்கும் மனிதர்கள் வாழும் உலகம் இது. என்ன பெரிய உதவி .? நீ உதவி செய்ததற்கு நானும்தான் பதிலுக்கு உதவி செய்துவிட்டேன் என்று சரிக்குச் சரியாக உதவிக்குக் கணக்கு வழக்கு எழுதி கணக்கு முடிப்போர்   உண்டு.   உதவியின் அளவு கணக்கு வழக்குகளுக்குள் அடங்குவதல்ல என்பதைப் புரிந்தோர் ஒரு சிலரே. உதவி என்பது யாருக்கும் செய்தோம்? எந்த இடத்தில் செய்தோம்? எப்போது செய்தோம்? என்பதில்தான் அதன் மதிப்பும் மரியாதையும் அடங்கியிருக்கிறது. இதைத்தான் வள்ளுவரும், உதவி வரைத்தன்று உதவி உதவி செய்யப்பட்டார் சால்பின் வரைந்து  என்பார். தரமில்லாதவர்களுக்கு உதவியைப் பற்றிய மரியாதை  தெரியாதவர்களுக்கு உதவி செய்வது நமது மரியாதையை இழந்து  போவதற்கு ஒப்பானது. இவை எல்லாம் காலம் கற்பிக்கும் பாடங்கள். இந்த அறிவு எத்தனைபேர்  எத்தனை இடங்களில் சொல்லித் தந்தாலும் காலங்கடந்து பட்டு பட்டு  அதன் பின்னர் தான் புத்தி வரும். கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் செய்வத...

உன்னோடு வாழ்தல் அரிது....

காட்டில் ஒரு வேப்ப மரத்தடியில் அமர்ந்து புத்தகம்  படித்துக்கொண்டிருந்தேன். அப்போது கையில் கம்மோடு ஒரு பாட்டியும் வந்து அருகில் வந்து அமர்ந்தார். சற்று நேரம் இருவரும் பேசிக் கொண்டிருந்தோம். பாட்டியின் பேச்சில்  எனக்கு ஓர் ஈர்ப்பு ஏற்பட்டது. பாட்டியிடம் பேசி ஏதாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, "பாட்டி அரியது எது  என்று சொல்ல முடியுமா ?" என்று கேட்டேன். "அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது" என்று சொன்னார். இப்போது எனது  மனம் மானிடப்பிறப்புதான் அரிது என்று ஒரு கணக்குப் போட்டு வைத்தது. கணக்கைப் போட்டு முடிக்கும் முன்னரே "என்ன முடிவுரை  எழுதியாயிற்றா? இன்னும் முடியல..." என்று சிரித்தார்.பாட்டி. "மானிடர் ஆயினும் கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது"  என்று தொடர்ந்து அரிதான மற்றுமொரு காட்சியை முன் வைத்தார் பாட்டி. "உண்மையும் அதுதானே எந்தவித உடல் பலவீனமும் இல்லாத  மனிதன் பிறப்பது அரிது என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன்"  என்றேன். சிரித்துக்கொண்டே பாட்டி, "பேடு நீங்கிச் பிறந்தகாலையும் கல்வியும் ஞானமும் நயத்தல் அரிது" எ...

நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால்....

Image
நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால்... உதவி கேட்டு வந்தாலே ஓடி ஒளிந்து கொள்ளும் காலம் இது. அப்படியே ஒருவர்க்கு உதவி செய்தோம் என்றால் அவர் திரும்ப நமக்குச் செய்வாரா ?மாட்டாரா? என்று கணக்குப் போட்டுப் பார்த்த பின்னர்தான் முன்கை நீளும். இது மனித இயல்பு. காரணம்  எல்லாவற்றையும் கொடுத்துவிட்டால்.... நாளைக்கு நமக்கும் வேண்டுமே என்ற அச்சமாகக் கூட இருக்கலாம். ஆனால் உதவி என்றாலே எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல்  செய்யப்பட வேண்டும். சொல்வது எளிது.  நாம் செய்த உதவிக்கு என்ன பயன்? என்ற கேள்வி  எழலாமலில்லை.. பயன் இல்லாமல் போகாது. என்றாவது ஒருநாள் நாம் செய்த உதவிக்கான பலன் நம்மை வந்து சேரும். நம்பலாமா? ஏன் நம்பக்கூடாது? என்றோ தென்னை மரத்தின் வேருக்கு நாம் ஊற்றிய நீர் ஆண்டுகள் பல கடந்தும் நமக்கு இளநீராக கிடைக்கிறதல்லவா? இந்த உதவியை நாம் எதிர்பார்த்தோமா? ஆனாலும் தென்னைமரம் நாம் செய்த உதவியை மறக்காமல் இருந்து பலன் தருகிறதல்லவா? இதுதான் உதவிக்கான பலன். இனி யாருக்கும் நான் செய்த உதவிக்கான பலன்  கிடைக்குமோ ? கிடைக்காதோ ? என்ற ஐயம் வேண்டாமாம். இதோ ஔவை சொல்வதைக் கேளுங்கள். " நன...

வல்லான் வகுத்ததே வாய்க்கால்

Image
வல்லான் வகுத்ததே வாய்க்கால்  "வல்லவன் வகுத்ததே வாய்க்கால் " இந்தப் பழமொழியைக் கேட்கும்போது வெறுமனே பழமொழிதானே என்று கேட்டுவிட்டு கடந்து சென்றுவிட முடியாது. இந்தப் பழமொழி சிலருக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கலாம். ஆனால் பலருக்கு இது என்னப்பா வல்லான் வகுத்ததே வாய்க்கால்   என்று கேட்க வேண்டும் என்று தோன்றும்.. ஆனால்  கேட்க மாட்டோம்.வாய்க்குள்ளேயே விழுங்கிக் கொள்வோம்.  ஏன் இந்த விழுங்கல் என்றால் அந்த வல்லான் மேல் உள்ள அச்சம். அச்சப்படும் அளவிற்கு  இதில் என்ன இருக்கிறது? அப்படி பெரிய ஆளா இந்த வல்லான்? யாரிந்த வல்லான்? ஏன் இவர்மீது இத்தனை அச்சம்? வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்றால்தான் என்ன ? என்று அடுக்கடுக்கான கேள்விகளை நமக்குள் எழுப்பி நம்மைக் குமைய வைப்பதுதான் இந்தப் பழமொழி. வல்லான் என்றால் ஆற்றல் மிக்கவன்,வீரன் இப்படிப் பொருள் கொண்டிருப்போம். அது பொருளாக இருக்கலாம்.பதவியாக இருக்கலாம். வலிமையாக இருக்கலாம் மிகுந்த ஆற்றலோடு நீர்ப்பெருக்கு வருகிறது. அங்குமிங்கும் உடைப்பெடுத்து தனக்கென ஒரு வழியை ஏற்படுத்திவிடும். தனக்கான போக்கைத் தானே அமைத்துக் கொள்ளும். அத...

ஆகூழால் தோன்றும் அசைவின்மை....

ஆகூழால் தோன்றும் அசைவின்மை.... " ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள் போகூழால் தோன்றும் மடி"                           குறள் : 371 ஆகூழால்- ஆகுவதற்கு உரிய ஊழால் தோன்றும்- பிறக்கும் அசைவு -  சோம்பல் இன்மை - இல்லாதிருத்தல் கைப்பொருள் - கையில் இருக்கும் செல்வம் போகூழால் - போகச் சொல்வதற்கான ஊழால் தோன்றும் - உண்டாகும் மடி - சோம்பல் ஆக்கத்திற்னான ஊழால் சோம்பலில்லா முயற்சி உண்டாகும். கையில் இருக்கும் செல்வம் நீக்குவதற்கு காரணமான ஊழால் சோம்பல்  ஏற்படும். விளக்கம் : ஒருவனுக்கு முயற்சி செய்து பொருள் தேட வேண்டும் என்ற ஊக்கம் எப்போது உண்டாகும் என்றால் அதற்கான ஊழ் அவனுக்குச் சாதகமாக இருந்தால் மட்டுமே அது சாத்தியமாகும். அவனுடைய செல்வம் முழுவதும் அவரைவிட்டு நீங்க வேண்டும் என்றால் சோம்பல் என்னும் ஊழ் வந்து குடியேறிவிடும். ஒருவனுடைய வளர்ச்சிக்கும் தளர்ச்சிக்கும் ஊழ்தான் காரணம் இதுதான் குறள் கூறும் செய்தி. அந்த இப் என்பது என்ன? இதில் இருவேறு கருத்துகள் உண்டு விதி என்பர் ஒரு சாரார். மற்றொரு  சாராரோ விதி என்று ஏதுமில்லை சூழல் ...

மாட்டுப் பொங்கல்

Image
மாட்டுப் பொங்கல்  பொங்கல் என்றாலே கரும்பு எப்படி முதன்மை இடம் பிடிக்குமோ அது போன்று பொங்கலுக்கு மறுநாள் கொண்டாடப்படும் மாட்டுச் பொங்கலில் ஜல்லிக்கட்டு  முதன்மை இடம் பிடித்துவிடும். ஜல்லிக் கட்டு இல்லாத மாட்டுச் பொங்கலா என்று கேட்கும் அளவிற்கு இன்று ஜல்லிக்கட்டு உலகமெங்கும் பிரபலமாகிவிட்டது. ஜல்லிக்கட்டிற்கு என்றே மாடுகள் பிரத்தியேகமாக பயிற்சி கொடுத்து தயார்படுத்தப்படுகின்றன. இந்த இடத்தில் எனக்கு ஒரு கேள்வி எழுகிறது. ஜல்லிக்கட்டு விழாவில் காளைமாடுகள் மட்டும்தான் கொண்டாடப்பட வேண்டுமா? மற்ற மாடுகள் என்ன பாவம் செய்தன? அவையும் கொண்டாடப்பட  வேண்டியவைதானே! மாடு என்றால் செல்வம். நம் வீட்டிற்கு செல்வம் கொண்டுவர மாடாக உழைத்த மாட்டிற்கு நன்றி சொல்லும் நாள் மாட்டுச் பொங்கல். இதில் காளை மாடு ,பசுமாடு என்ற பாகுபாடு கூடாது. பசுமாடும் பால்தந்து கிராமத்துப் பெண்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மாட்டுச் பொங்கல் நாளில் எல்லா மாடுகளும் கொண்டாடப்படட்டும். ஒரு நாளில் அப்படித்தான் மாட்டுப் பொங்கல் நடைபெற்றது. கிராமத்தில்  பொங்கல் நாளில் அனைத்து மாடுகள...

வாய்மை எனப்படுவது யாதெனின்....

வாய்மை எனப்படுவது யாதெனின்... " வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல் "                            குறள் : 291 வாய்மை- உண்மை எனப்படுவது- என்று சொல்லப்படுவது யாதெனின்-எது என்றால் யாதொன்றும்- எதுவாயினும் தீமை- கெடுதல் இலாத -இல்லாதவற்றை சொலல்- சொல்லுதல் வாய்மை என்று சொல்லப்படுவது யாது என்றால் யாருக்கும் எந்த இடத்திலும் தீங்கு தராதவற்றைச் சொல்லுதல் ஆகும். விளக்கம் : உண்மை என்று சொல்லப்படுவது என்னவென்றால் யாரையும் எந்த இடத்திலும் காயப்படுத்தாத சொல்லாக இருக்கவேண்டும். நமது சொல்லால் எந்த ஒரு உயிரும் காயப்பட்டு விடுமானால் நமது சொல்லில் மெய்ம்மை இல்லை என்று ஆகிவிடும். நாம் சொல்லும் சொற்கள்  பிறர்க்குத் தீமை விளைவிக்காததாக இருந்தால் அதுதான் வாய்மை. உண்மை பேசுகிறேன் என்று சிலர் பேசும் சொற்கள் பிறரைக் காயப்படுத்தலாம்.இந்த சொற்கள் வாய்மை என்ற அகராதியில் வராது. தன் உள்ளம் அறிந்தவரை பிறர்க்குக் கேடில்லா மொழி. நன்மை பயக்கும் மொழி. எல்லா இடத்தும் எல்லா நேரங்களிலும் இடர் உண்டாக்காத மொழி. அதுவே வாய்மை எனப்படும் என்க...

மரபுப் பெயர்கள்

மரபுப் பெயர்கள்  தொன்றுதொட்டு ஒரு பொருளை எச்சொல்லால் நம் முன்னோர் வழங்கிய வந்தனரோ அவ்வாறே வழங்கப்பட்டு வரும் சொற்கள் மரபுச் சொற்கள் அல்லது மரபுப் பெயர்கள் எனப்படும். தென்னங்கீற்று என்று சொல்லுவோம். தென்னம் இலை என்று சொல்வதில்லை. ஆட்டுக்குட்டி என்று சொல்வோம். ஆட்டுப் பிள்ளை என்று சொல்வதில்லை. பனை வடலி என்றுதான் சொல்வோம். பனங்கன்று என்று எழுதுவதில்லை. தென்னம் பிள்ளை என்று சொல்வோம். தென்னங்கன்று என்று சொல்வதில்லை. தென்னந்தோப்பு என்று சொல்வோம். தென்னந் கூட்டம் என்று சொல்வதில்லை. வாழை குலை என்று சொல்வோம். மாங்குலை என்று சொல்வதில்லை. கொத்துக் கொத்தாக மாங்காய் காய்த்துக் கிடக்கின்றன என்றுதான் சொல்வோம். குலை குலையாக மாங்காய் காய்க்கும் கிடக்கின்றன என்று சொல்ல மாட்டோம். காகம் கரையும் என்று சொல்வோம். காகம் கூவும் என்று சொல்வதில்லை. குயில் கூவும் என்றுதான் சொல்லுவோம். கோழிப்பண்ணை என்றுதான் எழுதுவோம். கோழித் தொழுவம் என்று எழுதுவதில்லை. மாட்டுத் தொழுவம் என்றுதான் சொல்வோம். எழுதுவோம். இதுதான் மரபு. ஒலி மரபுச் சொற்கள் பற்றி பார்ப்போம். குயில்   -கூவும் காகம்  -கரையும் கிளி -பேசும் ...

அப்பாவும் மகனும்

அப்பாவும் மகனும்  "நான் கேட்டுகிட்டே இருக்கிறேன். நீ பதிலே சொல்ல மாட்டேங்குற..." உரக்கக் கத்தினார் அம்மா. திரும்பிப் பார்த்துப் சிரித்தான்  பார்த்திபன். இந்த அம்மாவே இப்படித்தான். திடீரென்று இப்படித்தான்  உரக்கக் கத்துவாங்க. அம்மாவை எப்படி ஆப் பண்ண வேண்டும் என்று பார்த்திபனுக்குத் தெரியும். அதனால்தான் இந்த நமட்டுச் சிரிப்பு. "இது என்ன சிரிப்பு....? நான் கேட்பது உனக்குச் சிரிப்பா இருக்கு இல்ல..." கோபமாகக் கேட்டார் அம்மா. வாயைப் பொத்திக்கொண்டு  சிரித்தபடி திரும்பி நின்று கொண்டான் பார்த்திபன். "திரும்பி நின்னுகிட்டா..... கேட்கமாட்டேனா? இப்போ நீ என்னதான் சொல்லப் போற?" தோளைப் பிடித்து உலுக்கித் திருப்பியபடி கேட்டார் அம்மா. "உனக்கு இப்போ என்ன வேணுங்குற...?" ஒரு பத்து பவுனு நகை வேணுங்கிறேன். "அட ....எங்க அம்மாவுக்குக்கூட ஜோக் அடிக்க தெரியுது பாருங்க" "உன்னை அடிக்காம வளர்த்துட்டேன் பாரு. நீ இதுவும் சொல்லுவா இதுக்கு மேலேயும் சொல்லுவா." "வாங்க...வாங்க அடியுங்க... நல்ல அடியுங்கள்... உங்க கை வலிக்கும் வரை அடியுங்க..." "பேச்...

புத்தாண்டு வந்தாச்சு

      புத்தாண்டு வந்தாச்சு  புத்தாண்டு வந்தாச்சு. புதிய டைரி வாங்கியாச்சு. புதுப்பக்கங்களில் புதுப்புது தீர்மானங்கள் அலங்காரமாக எழுதி வைச்சாச்சு. இனி என்ன...மற்றதெல்லாம்  வழக்கம்போல் தான். இதுதான் அன்றாட நிகழ்வு என்பதுபோல வருடாந்திர நிகழ்வாகிப் போய்விட்டது. ஆனாலும் சிலரிடமிருந்து வேறுவிதமாக மனதின் ஒலி நேரடியாக ஒலிபரப்பட்டு வருவதைக் கேட்க முடிகிறது. புதிய தீர்மானங்கள் எடுத்திருக்கோமில்ல.. பார்த்துகிட்டே இருங்க....நாளையிலிருந்து நான் புதிய ஆள் என்ற பேச்சு காற்றோடு என் காதுவரை வந்தாச்சு. என் காதுகளுக்கு மட்டுமா வந்திருக்கும்.? உங்கள் காதுகளுக்கும் வந்திருக்கும். இந்தப் புத்தாண்டில் நான் அப்படி இருப்பேன். இப்படி இருப்பேன் என்று ஆளுக்கொரு  உருட்டு உருட்டிக் கொண்டிருப்போம். ஆனால் என்னடி மீனாட்சி கடந்த ஆண்டு எடுத்த புத்தாண்டு தீர்மானங்கள் என்னாச்சு ?என்ற பாட்டு காத்தோடு வந்து கீச்சுமூச்சுக் காட்டி மிரட்டிக் கொண்டிருக்கிறது. பழையதை எல்லாம்  நினைவுபடுத்தாதுங்கப்பா. இன்றிலிருந்து நான் புதிய ஆள் என்று உதடுகள் சொன்னாலும் கடந்த ஆண்டு தீர்மானங்கள் யாவும் நேற்றோடு ...

வேட்டியின் சாட்சி

வேட்டியின் சாட்சி காலைப்பொழுது  கவின்மிகு அழகு கதிரவன் கண்டு கண்களைத் திறந்து கள்ளச்சிரிப்பு   மெல்ல அரும்ப மேனி புடைத்து வெண்முத்தம் சிதற அள்ளி அணைத்து ஆரத்தழுவி ஆலையிலேற்றி ஆடையாக்கி ஆளுக்கொரு  பெயர் சூட்டி அணி அணியாய் அனுப்பி வைத்தனர்! வெண்வேந்தன் எனக்கு வேட்டி என்னும் நற்பெயறேற்றி வேற்று வரிசையில் அமர்த்தி  வைத்தனர் யார் யாரோ வந்தார் ஏதேதோ சொல்லி என்னை நிராகரித்தார். உழவன் ஒருவர் வந்தார் உவகையோடு கையிலெடுத்து தனதாக்கிக் கொண்டார் உழவன் மேனிக்கு அணியமாகும் பெரும்பேறு தந்து விட்டார் மனமகிழ் கொண்டேன் மகிழ்ந்தேன் வியந்தேன்  உன்மத்தம் கொண்டேன் அதிகம் ஆடாதே என்று ஓரிரு மாதத்தில்  கந்தல்என்ற பெயரில்  கடைக்கோடியில் வீசிவிட்டார்! கசக்கிக் கிடந்தேன் கலங்கி குலுங்கி கண்ணீர் விட்டழுதேன் காலம் செய்த கோலமிது வேறெதுவும் தெரியவில்லை இதுதான் என்வாழ்வா? புலம்பெயர் காலம் வாராதோ புவி எனக்கொரு மீட்சி தாராதோ என புலம்பிக் கிடந்தேன்! கன்னியவள் என்னைத் தொட்டாள் கலைமிகு கோலம் தந்தாள் இட்லிக்கு ஆடையாக்கி இதம் தந்தாள் இப்பிறப்பின் பயன்  ஈதென்று அறிய வைத்தாள்  கா...

போகிப் பண்டிகை

போகிப் பண்டிகை  கதை இல்லாமல் பண்டிகைகள் இல்லை. யோகிக்குக் கதை இருக்கும்போது போகிக்குக் கதை இல்லாமல் இருக்குமா என்ன? போகிக்கும் கதை ஒன்று இருக்கிறது. ஒரு கடினமான சூழல் அல்லது உழைப்புக்குப் பிறகு கிடைக்கும் நன்மையைக் கொண்டாடி மகிழ்வது தான் பண்டிகைகள். அந்தவகையில் போகியும் கடினமான காலத்தைக் கடந்து வந்து விட்டோம் என்ற மகிழ்ச்சியை அனைவருக்கும் தெரிவிக்கும் முகமாகவே கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும். பழையவை ஒழிந்தன. தொல்லைகள் தொலைந்தன. ஆணவம் ஒழிந்தது. ஒழிக்கப்பட்டது. இனி நாளும் மகிழ்ச்சி. களிப்பு. புதியவை புகுந்தன. புத்தொளி பிறந்தது என்ற ஒரு புதுமையான எண்ணத்தோடு போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. புதிய வாழ்க்கையை எதிர்பார்த்து பழைய குப்பைகளை எல்லாம் முற்றிலுமாக அகற்றி தூய்மையோடு வருங்காலத்தை எதிர் நோக்கி கொண்டாடப்படும் பண்டிகை போகிப் பண்டிகை. கதை கதை என்றீர்களே... அந்தக் கதை என்ன என்று சொல்லுங்கள் என்று கேட்பது என்  காதுவரை கேட்கிறது. போகிப் பண்டிகை பற்றிய ஓர் அருமையான புராணக் கதை ஒன்று உள்ளது. நீரின்றமையாது உலகம். நீராதாரம் மழை. மழைக்குக் கடவுள் இந்திரன். மழை இன்றேல் உழவில்லை....