பணம் பத்தும் செய்யும்
பணம் பத்தும் செய்யும் " பணம் பந்தியிலே குணம் குப்பையிலே" என்பார்கள். " கல்லானே ஆயினும் கைப்பொருள் ஒன்றுண்டாயின் எல்லாரும் சென்றங் கெதிர்கொள்வர் இல்லானை இல்லாளும் வேண்டாள் ஈன்றெடுத்த தாய் வேண்டாள் செல்லாது அவன் வாயிற் சொல்" என்கிறார் ஔவை. பணம் இல்லாதவரை ஈன்றெடுத்த தாயே விரும்ப மாட்டாளாம். என்ன கொடுமை இது? பணம் இல்லை என்றால் கட்டிய மனைவி மதிக்க மாட்டாள். பெற்ற தாய் விரும்ப மாட்டாள். சமூகம் மதிக்காது. அவனுடைய பேச்சு சபையில் எடுபடாது. இதுதான் உலக எதார்த்தநிலை. " பணமில்லாதவன் பிணம்" பணமில்லாதவன் செயலிழந்தவன் ஆகிவிடுவானாம். உண்மைதாங்க... பணம் இல்லாமல் என்ன நடந்துவிடப் போகிறது.? நீங்களே சொல்லுங்கள். " பணம் உள்ளவன் பின்னாலும் பத்து பேர் பதவி உள்ளவன் பின்னாலும் பத்து பேர்" பணம் இருந்தால்தான் பின்னால் நாலுபேர் வருவார்கள். பணம் இல்லையா? அப்படியானால் பதவியாவது இருக்க வேண்டும். அதுவும் இல்லையா? நம்மை யார் கண்டு கொள்வார்கள்...