Posts

Showing posts with the label கடன்காரி- செல்வாவின் சிறுகதைகள்

கடன்காரி

கடன்காரி நேற்றிலிருந்தே பாட்டிக்கு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கிக் கொண்டிருந்தது. இன்றைக்கோ நாளைக்கோ உசுரு போயிரும் என்று ஊரு சனம் எல்லாம் வந்து பார்த்து அழுதுட்டுப் போனாவ... பாட்டியின் நாலு மகன்களும் வெளியில் அமர்ந்திருந்து  வர்றவுங்க போறவுங்க கிட்டே எல்லாம் பேசிகிட்டு இருந்தாவ.. வெளி இடங்களில் இருக்கும்  உறவினர்கள்கூட வந்துட்டாவ... ஆனால் உள்ளுரில் இருக்கும் அன்னத்தாயி சித்தி மட்டும் வரல... "அன்னத்தாயி இன்னும் வரலியா.... அன்னத்தாயி இன்னும் வரலியா..."  என்று ஆளாளுக்கு அன்னத்தாயி  சித்தியை பற்றியே கேட்டுக் கொண்டிருந்தாவ. " பெத்த தாய்க்கு சேத்துமா கட்டி இழுக்குது... இன்னுமா அன்னத்தாயிக்கு இந்தத் தாயை வந்து பார்க்கணும் என்று நினைப்பு வரல..." என்றார் மூத்த அத்தை. "கடைக்குட்டி என்று மடியிலேயே போட்டு  வளர்த்தப் புள்ள... இப்படியா கல்லு மனசாட்டும்  கிடப்பா..?.." என்றார் பக்கத்து வீட்டு பெரியம்மா. "பாரு...அந்தத் தாய் மனசு கடைக்குட்டியை மட்டும் காணாம எப்படி கிடந்து  தவிக்குது...யாராவது போய்  ஒரு வார்த்தை கூப்பிட்டுப் பார்த்தியளா?"   என்றார்  ஒ...