Posts

Showing posts with the label மாதக் கடைசி-சிறுகதை

மாதக்கடைசி

மாதக் கடைசி சங்கருக்கு விதவிதமான வண்ணங்களில் டீ ஷர்ட் அணிய ஆசை. எந்தக் கடைக்குப் போனாலும்  கண்கள் கடை முழுவதும் டீ ஸர்ட்டை சுற்றிச் சுற்றியே வரும். அன்றும்  அப்படித்தான் தெருவோரமாக டீ ஷர்ட்  விற்கும் ஒரு வியாபாரியின் கடந்து போனான். அவனைக் கடக்க விடாதபடி வியாபாரியின் குரல் தடுத்து நிறுத்தியது. சற்று தடுமாறிய படி திரும்பிப் பார்த்தான். "அம்மா வாங்க ....ஐயா வாங்க...." என்று கூவிக் கொண்டிருந்த வியாபாரி சங்கர் நிற்பதைக் கண்டதும் "வாங்க சார்‌ வாங்க.... என்ன கலருல வேணும். ஐயா கலருக்கு எல்லா கலரும் பொருத்தமாகத்தான் இருக்கும். உங்களுக்கு ஏற்ற கலர்... நல்ல நல்ல எழுத்து வடிவங்களில்  இருக்கிறது...வாங்க வந்து பாருங்க " என்று நாலைந்து முறை  எடுத்து விரித்துக் காட்டினான். டீசர்ட்டை வாங்குவதற்கு முன் சங்கர் கை தானாக பேண்ட்  பாக்கெட்டுக்குள் சென்றது. வியாபாரி புரிந்து கொண்டான். "அவ்வளவு அதிகமெல்லாம் இல்லீங்க ஜஸ்ட்  கன்ரெட் ரூப்பீஸ் தான். இப்போ இல்லன்னா எப்பவும் இந்த விலைக்குக் கிடைக்காது சார்.. வாங்க சார்...வாங்க சார்... வாங்கிட்டுப் போங்க " என்று விடாமல் தொண்டை தண்ணீர...