ஒல்வது அறிவது அறிந்ததன்கண்....
ஒல்வது அறிவது அறிந்ததன்.... " ஒல்வது அறிவது அறிந்ததன் கண்தங்கிச் செல்வார்க்குச் செல்லாதது இல் " குறள். : 472 ஒல்வது _ இயல்வது அறிவது _தெரிவது அறிந்து_ தெரிந்து அதன்கண் _ அதனிடத்தில் தங்கி _நின்று செல்வார்க்கு _செயல்படுபவர்க்கு செல்லாதது_ முடியாதது இல் _ இல்லை ஒருவன் தன் வலிமைக்கு ஏற்றது எது என அறிந்து அதில் உறுதியாக செயல்படும்போது அவனால் செய்யமுடியாதது் எதுவுமில்லை. விளக்கம் : தன் திறம் என்ன என்பதை நன்கு அறிந்த பின்னரே ஒரு செயலில் ஈடுபட வேண்டும். தன்னால் இந்தச் செயலைச் செய்யமுடியும் என்ற நம்பிக்கையும் திறனும் ஏற்பட்டுவிட்டால் போதும். அதன்பின்னர் கண்டிப்பாக அச்செயல் நடைபெற்றுவிடும். தன்னால் முடியும் என்ற அதிகப்படியான நம்பிக்கை மட்டும் இருந்தால் போதாது. எல்லா செயலையும் எல்லோராலும் செய்துவிட இயலாது. தனக்கு அந்தச் செயலைப் பற்றிய ...