நாகாக்க...!
நாகாக்க ... காக்க ....காக்க...நாவைக் காக்க.. அதென்ன நாவைக் காக்க...? நாவைக் காக்க முப்பத்து இரண்டு காவலாளிகள் இருக்கின்றனரே... போதாதா? இன்னும் வேறு எத்தனை காவலாளிகள் போட்டு காக்க வேண்டும்? நானூறு காவலாளிகள் போட்டாலும் போதாதுங்க... நாமதான் அதை அடக்கி வைக்கணும். பகலில் பக்கம் பார்த்துப் பேசணும். இரவில் அதுவும் பேசக் கூடாது தெரியுமிலல... " யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு" என்கிறார் வள்ளுவர். எதைக் காக்காவிட்டாலும் நாவைக் மட்டுமாவது காத்துக்கொள்ள வேண்டும். அப்படி காத்துக் கொள்ளாதிருந்தால் தவறான சொற்களைப் பயன்படுத்திவிட்டு துன்பப்பட நேரிடும். வள்ளுவரின் வாய்மொழியை மதியாமல் வாங்கிக் கட்டிக் கொண்ட ...