ஆரையடா சொன்னாயடா
ஆரையடா சொன்னாயடா எங்கேயோ கேட்ட குரல். அங்கங்கே அடிக்கடி கேட்டுக் கொண்டிருக்கும் குரல். நாளும் நமக்கு ஆர்வத்தைத் தூண்டும் குரல் அது எந்த குரல் என்று கேட்க ஆசையா? சொல்கிறேன்..வாருங்கள். நீயா ... நானா... என்ற போட்டி வரும்போது உரசல் ஏற்படுகிறது. அண்ணன் தம்பிக்குள் போட்டி. அக்கா தங்கைகளுக்குள் போட்டி. கட்சிகளுக்குள் போட்டி. தொண்டர்களுக்குள் போட்டி தொழிலில் போட்டி. கடவுள்களுக்குள் போட்டி. கடவுளைத் தொழுவதில் போட்டி. உண்பதில் போட்டி . உடுப்பதில் போட்டி. ஏன் உறங்குவதில் கூட போட்டி. பக்கத்து வீட்டுக்காரரோடு போட்டி. அண்டை மாநிலத்தோடு போட்டி. வீட்டுக்கு வீடு போட்டி. நாட்டுக்கு நாடு போட்டி. இப்படி போட்டியோ போட்டி என்று போட்டி நிறைந்த உலகில் போட்டிப் போட்டுக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எல்லா இடங்களில் நான் பெரியவனா? நீ பெரியவனா? என்பதில்தான் போட்டி எழும். உலகம் இப்படித்தான். ...