சாந்தனையும் தீயனவே செய்திடினும்
சாந்தனையும் தீயனவே செய்திடினும் பல்லுக்கும் பல் கண்ணுக்குத் கண்" இப்படி பதிலுக்குப் பதிலடி கொடுத்திட வேண்டும். அல்லது சிலருக்குத் தூக்கமே வராது. இது தீயவர் உள்ளம். " தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை வீயாது அஇஉறைந் தற்று" என்பார் வள்ளுவர். நிழலானது தன்னை விடாமல் வந்து தன் காலடியிலேயே தங்கி இருத்தலைப்போல தீயசெயல்கள் செய்பவர்க்கு கேடு விடாமல் கூடவே வந்து நிற்கும் என்கிறார் வள்ளுவர். எல்லா விதிகளுக்கும் விதிவிலக்கு உண்டு. அதுபோல தீமைக்குத் தீமை என்பதும் எல்லா இடங்களிலும் எல்லா நபர்களிடமும் இருக்காது. நல்லோர் உள்ளம் நல்லவற்றையே சிந்திக்கும். பொறுத்துப் போதல், விட்டுக்கொடுத்துப் போதல் இப்படி ஆளாளுக்கு நற்பண்புகளோடு நடமாடும் நல்ல உள்ளங்களும் இருக்கத்தான் செய்கின்றனர். மரத்தை வெட்டும் மனிதனுக்கும் நிழல் தரும் பண்பு மரத்திற்கு உண்டு. நீ என்னை வெட்டிவிட்டாய். அதனால் நான் உனக்கு ஏன் நிழல் தர வேண்டும்? என்று மரம் வீம்பு பிடிப்பதில்லை. என் கடைசி கிளை இருக்கும் வரை நிழல் தந்துகொண்டுதான் இருப்பேன் என்று பிடிவாதமாக நிழல் தந்துகொண்டே இருக்கும். அதுபோல தீங...