போகும்போது அவளோடு போகுமாம்
போகும்போது அவளோடு போகுமாம் வா என்றால் வராது போ என்றால் போகாது உன் பேச்சு ' கா' இப்படி சிலர் நம்மிடம் முரண்டு பிடித்துக்கொண்டு திரிவர். இது போலவே ஒரு பாடல் வரி. கண்ணில் பட்டது. " போம்போது அவளோடு போம்" போகும் அவளை என்ன செய்வது? எப்படி அழைத்து வருவது? யாரைத் தூது அனுப்பலாம்? கையேந்தி நிற்கிறேன் கையேடு அழைத்து வா என்று கேட்டுத்தான் பார்க்கிறேன். கேட்பாரில்லை..... தூதுபோக துணையாக வர எவருமில்லை. வேறு வழியின்றி விலகி நிற்கிறேன். வழியெல்லாம் விழியாய் மணித்துளிகளை விரயமாக்கி காத்துக் கிடக்கிறேன் விழி பூத்துப் போனது விண்மீனும் கண் சிமிட்டி வீண் கதைப்பேசி கடந்து போனது. காது கொடுத்துக் கேட்க ஆளில்லை கருணை மனு கையிலேந்தி நிற்கிறேன். சட்டென்று ஒரு சலசலப்பு சட்டென்று என் கையிலிருந்த மனு விருட்டென்று பறந்து போனது எட்டும் தூரத்தில் உள்ள ஒரு தடுப்பில் தட்டி படத்துக் கிடந்தது தொட்டுவிட எண்ணி எட்டிக் கை வைத்தேன் கட்டிப்பிடித்தது ஒரு கை தட்டிப் பறிக்க வந்தவர் எவரோ? தடுமாறும் வேளையில் தடையிட முட்டுக்கட்டையிட முந்தி வந்து நிற்பவர் எவரோ ? ஓரக்கண்ணால் பார்த...