வேற்றுமை அணி
வேற்றுமை அணி அணி என்றால் அழகு என்று பொருள். செய்யுளில் அமைந்து கிடக்கும் சொல்லழகு, பொருளழகு ஆகியவற்றை வரையறுத்துக் கூறுவது அணி இலக்கணம். செய்யுளும் அழகுபடச் சொல்லப்பட வேண்டும். பாடலில் சொல்லப்படும் கருத்தையும் எளிதாக புரிய வைக்க வேண்டும். இதற்காக செய்யுளில் பல்வேறு உத்திகள் கையாளப்பட்டிருக்கும். அதனைத்தான் அணி இலக்கணம் என்கிறோம். அணி இலக்கண நூல்களில் மிகவும் தொன்மையான நூல் தண்டியலங்காரம். தண்டி என்ற ஆசிரியர் எழுதிய அலங்காரம் அதாவது அணி பற்றி எழுதப்பட்ட நூல் தண்டியலங்காரம். இந்த நூலில் முப்பத்தைந்து அணிகளுக்கான இலக்கணம் கூறப்பட்டுள்ளது. அவற்றுள் வேற்றுமையணிக்காணம் யாது என்பது பற்றிய செய்திகளை இக்கட்டுரையில் காண்போம். வேற்றுமையணி : " கூற்றினும் குறிப்பினும் ஒப்புடை இருபொருள் வேற்றுமைப் படவரின் வேற்றுமை அணியே " என்பது வேற்றுமை அணிக்குத் தண்டியலங்காரம் கூறும் இலக்கணம் ஆகும். செய்யுளில் இரு பொருள்களுக்குரிய ஒற்றுமைகளை முதலில் கூறி, பின்னர் பிரிதொரு காரணத்தால் ஒன்றிலிருந்து மற்றொன்று வேறுபட்டதெனக் காட்டுவது வேற்றுமை அணி எனப்படும்...