Posts

Showing posts with the label வெற்றி நிச்சயம் -தன்னம்பிக்கை கட்டுரை

வெற்றி நிச்சயம்

வெற்றி நிச்சயம்  முயற்சி திருவினை ஆக்கும் முயற்சியின்மை  இன்மை புகுத்தி விடும். "  முயற்சி செய்து உழைத்துக் கொண்டே   இருந்தால்  செல்வம் பெருகும்.   முயற்சி ஒன்றுமே செய்யாமல்  சோம்பேறியாக இருந்தால் வறுமை   வாசலில் வந்து நிற்கும் என்கிறார் வள்ளுவர்.    வெற்றி சாதாரணமாக யாருக்கும்   கிடைத்து  விடுவதில்லை. விடாமுயற்சி இருந்தால் மட்டுமே  வெற்றி கிட்டும்.   வெற்றிக்காக நாம் பல படிகளைக்  கடந்துவர வேண்டியிருக்கும்.  அதில் ஏறி மேலே வரும்முன்  ஐயோ! அம்மா!  ...மூச்சு வாங்கும்.  அதற்காக பயணத்தை இடையில்  விட்டுவிடக் கூடாது.    வெற்றிக்காக நாம் வகுத்து வைத்துள்ள  தவறுதலான பாடத்திட்டம் நம்மை   பலமுறை சறுக்கி விழச் செய்யும்.  எங்கே சறுக்கல் இருந்தது என   ஆய்ந்து அதைக் களைந்துவிட்டால்  பயணம் ஓரளவு சுமுகமாக இருக்கும்.     முயன்றால் முடியாதது எதுவும் இல்லை.  தொடங்கும்போது இதனை நம்மால்  செய்துவிட முடியுமா என்று மலை...