ஔவையின் கர்வம் தொலைந்தது
மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் நாவல் மரத்தில் ஏறி நாவல் பழங்களைப் பறித்துத் தின்று கொண்டிருந்தான். அவ்வேளை அவ்வழியாக வந்த ஔவை நாவல் மர நிழலில் வந்து அமர்ந்தார். ஒளவையாரைப் பார்த்ததும் அந்தப் சிறுவன்" பாட்டி, உங்களுக்கு நாவற்பழம் பழம் வேண்டுமா ? "என்று கேட்டான். ஒளவையாருக்கோ நல்ல பசி. " ஆமாம்.பசியாக இருக்கிறேன்.பழம் பறித்துப் போடுப்பா "என்றார் ஔவை.. "உனக்குச் சுட்டப்பழம் வேண்டுமா அல்லது சுடாதப்பழம் வேண்டுமா "என்று கேட்டான் அந்தச் சிறுவன் . ஒளவைக்கு அந்தச் சிறுவன் கேட்ட கேள்விக்கான பொருளை உடனடியாக புரிந்துகொள்ள முடியவில்லை. அதென்ன சுட்டப்பழம், சுடாதப்பழம் என்று தனக்குத்தானே கேட்டுக் கொண்டார்.ஆனாலும் தனது அறியாமையை சிறுவனுக்கு முன்னால் காட்டிக் கொள்ள மனமில்லை. சரி ,எனக்குச் சுட்டபழமே பறித்துப் போடு என்றார். உடனே சிறுவன் மிகவும் கனிந்த பழங்களைப் பறித்து கீழே மணல் மீது போட, ஒளவையாரும் அவற்றை எடுத்து அப்பழங்களின்மீது ஒட்டிக்கொண்டிருந்த மணல் போகும்படி வாயால் ஊதிக்கொண்டிருந்தார். அச் செயலைப் பார்த்த அச் சிறுவன் "என்ன ....பாட்டி, பழங்கள் சுடு...