Posts

Showing posts with the label நினைவில் நிற்கும் ஆண்டு - புத்தாண்டு கட்டுரை

நினைவில் நிற்கும் ஆண்டு

Image
நினைவில் நிற்கும் ஆண்டு    காலம் நல்லதொரு ஆசிரியர். நாம் கற்க மறுத்தாலும் கவலைப்படப்போவதில்லை. தொடர்ந்து பாடங்களைக் கற்பித்துக்கொண் டே இருக்கும். வலிந்து வந்து ஏதேதோ செய்திகளைச் சொல்லிச் செல்லும். கண்முன்னே  காட்சிப்படுத்திச் செல்லும் என்றுதான் சொல்ல வேண்டும். படி ...படி என்று ஊட்டி நிற்கும். படிப்பதும் புறங்கையால் புறந் தள்ளிவிட்டு போவேன் என்பதும் அவரவர் விருப்பு வெறுப்பைச் சார்ந்தது. பாடங்கள் பலவிதம். எளிமையானதும் கடினமானதும் இனிமையானதும் என்று எல்லாவற்றையும் விரவிய  கலவையாக வந்து நிற்கும். எல்லாப் பாடங்களிலும் எல்லோராலும் எளிதில் தேர்ச்சி பெற்றுவிட முடியாது. புரிந்து கொள்ள முடியாத முன்னுக்குப்பின் முரணான கடினமான நடையுடன் கூடிய பாடங்கள் இருக்கலாம்.எளிதாக புரிந்து கொள்ளக் கூடிய பாடங்களும் இருக்கலாம். எளிதாகப் புரிந்து கொண்டவன் புத்திசாலி. புரிந்தாலும் புரியாதவர்கள்போல  கடந்து செல்பவர்கள்தான் பலர். யாருக்கோ சொல்லப்படும் பாடம். நமக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லை என்று கண்டும் காணாமலும்   கடந்து செல்பவர்களும் உண்டு.  இதில் நாம் எந்த ரகம்...