Posts
Showing posts from May, 2026
அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவை போல்
- Get link
- X
- Other Apps
அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவை போல நம் வாழ்வில் தவிர்க்க முடியாத ஓர் அங்கமாக இருப்பவர்கள் உறவுகள். "கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு கூடுதல் கோடி பெறும் " என்று தனது தனிப்பாடலில் சொல்லித் தந்தார் ஔவை . மூதுரைப் பாடலில் விளக்கமாக சில வாழ்வியல் உண்மைகளைச் சொல்லித் தருகிறார். எல்லா உறவும் உறவல்ல. யார் யார் உறவினர்.... யார்யாரெல்லாம் உறவினர் அல்லர் என்பதை நான் உங்களுக்குச் சொல்லித் தருகிறேன் என்கிறார் ஔவை. ஔவையின் பாடல்கள் பொழுதுபோகாமல் எழுதப்பட்டவை அல்ல. அனுபவச் சாறு பிழிந்து கொடுக்கப்பட்ட வாழ்வியல் விருந்து. எக்காலத்தினரும் அருந்தி இன்பம் காணவல்ல அருமருந்து. மூதுரையின் ஒவ்வொரு பாடலும் தெரிந்து கொள்ள வேண்டிய வாழ்க்கைப் பாடங்களை நடத்திச் செல்லும். இன்றைய மூதுரை விருந்து இதோ: அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல் உற்றுழித் தீர்வார் உறவு அல்லர் - அக்குளத்தில் கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே ஒட்டி யுறுவார் உறவு ...
அறம் வைத்துப் பாடுதல்
- Get link
- X
- Other Apps
அறம் வைத்துப் பாடுதல் நாம் வாழ்கிற வாழ்வு அறம் சார்ந்ததாக இருக்க வேண்டும். இந்த ஆசை எல்லோருக்கும் உண்டு. ஆனால் அனைவரும் அப்படி ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோமா? அறம் சார்ந்த வாழ்வு என்பது எல்லோராலும் சாத்தியப்படக் கூடியதா? எல்லா இடங்களிலும் எல்லா நேரங்களிலும் எல்லோராலும் பின்பற்ற முடிகிறதா? இப்படி ஏகப்பட்ட கேள்விகள். முதலாவது அறம் என்றால் என்ன என்று பார்ப்போம். மனிதன் இப்படித்தான் வாழ வேண்டும் என்று தனக்கென வகுத்துக்கொண்ட ஒழுக்கநெறியே அறம் எனப்படும் "மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற" என்பார் வள்ளுவர். மனத்தில் எந்தவிதமான குற்றமும் இல்லாமல் இருத்தலே அறம். உள்ளத்தில் அன்பில்லாது செய்யப்படும் எந்த தர்மமும் அறம் எனப்பட மாட்டாது. எண்ணம், சொல், செயல் மூன்றும் தூய்மையாக இருந்து செய்யப்படும் செயல்தான் அறமாகக் கொள்ளப்படும். இந்ந அறத்தைத் தவிர இன்னொரு அறமும் இலக்கியத்தில் சொல்லப்படுவதை அறிந்திருக்கலாம். அறம் பாடுதல் என்ற ஒரு சொல் கேள்விப்பட்டிருப்போம். இந்த அறம் பாடுதல் மேலே கூறப்பட்ட அறத்திற்கு முற்றிலும் மாறுபட்டது. ஒரு புல...
பினாங்கு மாப்பிள்ளை
- Get link
- X
- Other Apps
பினாங்கு மாப்பிள்ளை கண்ணம்மோ ... கண்ணம்மோ... மூச்சிரைக்க கண்ணம்ம வீட்டு வாசலில் வந்து நின்றான் முத்துசாமி. "ஏல...என்ன இந்த ஓட்டம் ஓடியார... என்னமும் அவசரமா?" "அம்மதான் உங்கள கையோட கூட்டிவரச் சொன்னாவ" "இந்தா வாரேன்னு சொல்லு" "வாங்க... உடனே வரணுமாம்" "அப்படி என்ன தல போற அவசரம்" "வாயேன்....நேரத்த போக்காத. எங்க பசு குட்டிப் போடப்போவுது... அதுதான் அம்ம கூப்பிட்டுட்டு வரச்சொன்னாவ..." கையைப்பிடித்து இழுத்தான் முத்துசாமி. கூடவே போனார் கண்ணம்ம. இப்படி நாளும் கண்ணம்மயை தேடி யாராவது வந்துவிடுவர். மாட்டுக்கு ஒண்ணுன்னாலும் மனுசனுக்கு ஒண்ணுன்னாலும் கூப்பிடுங்க கண்ணம்மய இதுதான் ஒவ்வோர் வீட்டிலும் கேட்கும் குரலாக இருக்கும். கண்ணம்மயைத் தெரியாதவர் யாரும் அந்த ஊரில் இருக்க முடியாது. அவ்வளவு பிரபலம். எல்லாருக்காகவும் ஓடி ஓடி உதவும் குணம். ஊருல ஒருத்தருக்கு ஒன்று என்றால் முதல் ஆளாக ஆஜர் ஆகி நிற்பது கண்ணம்ம மட்டும்தான். கைப்பிள்ளைகளுக்கு மருந்து கொடுக்கணுமா... கண்ணம்மயத் தவிர யாரும் அவ்வளவு பக்குவமா மருந்து கொடுத்திட முடியாது. எந்த வீட்டில்...
ஞானம்ம பாட்டி
- Get link
- X
- Other Apps
ஞானம்ம பாட்டி "மேலத் தெருவுல சுடலைமாடன் கோவில் பக்கத்துல சர்க்காரு அதிகாரிக வந்துருக்காவளாம். நீரும் சட்டுன்னு ரெண்டு மொடக்கு நீத்தண்ணி குடுச்சிபுட்டு ஓடிப் போய் என்ன யாதுன்னு பாரும் " தோட்டத்துக்குப் போயிட்டு வந்ததும் வராததுமா தாத்தாவை துரத்தாத குறையா துரத்தித் கொண்டிருந்தாள் ஞானம்ம பாட்டி. "எதுக்கு வந்துருக்காவளாம்?" என்று கேட்டபடியே கட்டிலில் போய் உட்கார்ந்தார் வேதநாயகம் தாத்தா. "உக்காந்துட்டீரா? இனி எழும்ப ஒருமணி நேரம் ஆக்குவீர...." "எதுக்கு வந்துருகாவன்னு கேட்டதுக்குப் பதில் சொல்லு" "என்கிட்ட சொல்லிகிட்டு தான் வந்துருக்காவ ஓடிப் போய் ஒரு எட்டு பாத்துட்டு வாரும்னா... எடக்குமடக்கா கேள்வி கேட்டுட்டு கிடக்கீரு" "என்னத்துக்கு யாதுக்குன்னு தெரியாம எதுக்குப் போகணும்?" "உம்மட்ட எல்லாத்தையும் ஒண்ணு விடாம எழுதணும்..போய் பாத்துட்டு வாரும்ன்னா பார்த்தூட்டு வாரும்ம...." "கூனுகுறுக்கு முறிய ஒரு ஏர் உழுது கிட்டு வந்துருக்கேன். செத்த குறுக்க அனத்த விட மாட்டாள... நொய்...நொய்ன்னுட்டு"?" . "நீரு தூங்கு...
கோபம் வேண்டாம்
- Get link
- X
- Other Apps
கோபம் வேண்டாம் சாக்ரட்டீஷ் உலகின் தலை சிறந்த தத்தவ ஞானி.கோடிக்கண மக்களின் நன்மதிப்பைப் பெற்றிருந்தாலும் மனைவியிடம் நல்ல பெயர் எடுக்க முடியவில்லை. அவர் தன் எழுத்துக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை வீட்டிற்கு கொடுப்பதில்லை என்பது மனைவியின் குற்றச்சாட்டு. வீட்டில் என்ன இல்லை ...என்ன இருக்கிறது.. எதையுமே அவர் கண்டு கொள்ளவே மாட்டார். ஒருமுறை இப்படித்தான் வெகுநேரமாக தன் நண்பரோடு பேசிக் கொண்டிருந்தார். பலமுறை மனைவி அழைத்துப் பார்த்தார். அவர் பேச்சை நிறுத்துவதாக தெரியவில்லை. வீட்டில் உள்ள பொருட்களை அங்கும் இங்கும் வீசி தன் கோபத்தை வெளிப்படுத்திப் பார்த்தார். அப்போதும் அவர் கண்டு கொள்ளவே இல்லை. மாடிக்குச் சென்றார். ஆத்திரத்தில் ஒரு வாளி தண்ணீரை மொண்டு வந்து அப்படியே சாக்ரட்டீஷ் தலை மீது ஊற்றினார். நண்பர் அப்படியே வாயடைத்துப் போனார். சாக்ரட்டீஷ் முகத்தைப் பார்த்தார். அவரோ ஒன்றுமே நடக்காதது போல இதுவரை இடி இடித்தது. இப்போது மழை கொட்டுகிறது "என்று வேடிக்கையாகப் பதிலளித்தார். இப்படித்தான் கோபம் வந்தால் பலருக்கு தாங்கள் என்ன செய்கிறோம் என...
பணி நிறைவுப் பாராட்டு மடல்
- Get link
- X
- Other Apps
பணி நிறைவுப் பாராட்டு மடல் மின்னணு மிகைபுகழ் கூடங்குளம் பேருலா முன்னடிநாடார் பஞ்சுப்பழம் அம்மாள் இணையிலா முன்னவர் குலம் விளங்க வந்த பிள்ளைநிலா சின்னவர் செவியோதிய தவமணி பெயர் புகழுலா! கள்ளுலா மனையாள் கண்ணுலா வந்தலா(ல்) காதலா(ள் ) கரம்பிடித்தலா கன்னி மனையாதலா கட்டிலா தொட்டிலா பிள்ளை இருவராதலா(ல்) மட்டிலா மகிழுலா மனையில் ஆட்சி நடத்தலா! கர்மவீரர் பள்ளியில் தடம் பதித்தலா (ல்) கர்மமே கண்ணெனக் கடுமையாய் உழைத்தலா வன்மம் கொள்ளா வாழ்க்கைத்துணை வழிகாட்டலா(ல்) தர்மமும் தயையும் வந்தது அண்ணன் கரம்பிடித்தலா! கலைகள் யாவும் உள்ளிலா தலைச் சோற்றிலா மலையாய் உயர்வுலா மாறா இறையருளிலா அலையிலா மனம் ஆர்ப்பரிப்பிலா ஆனந்தத் துள்ளலா விலையிலா உறவு காண்டலா(ல்) மனம் மகிழ்ச்சி கடலிலா! தவம் உன்றன் பெயரிலா செயலிலா அறம் நின் அறப்பணியிலா அர்ப்பணிப்பிலா விஞ்சு மதியுலா மிஞ்சு மொழியிலா பேச்சிலா கஞ்சமாய்ப் புகழ்தலால் பஞ்சம் என் சொல்லிலா! நாற்பத்தி நான்கு ஆண்டு நற்பணி நடத்தலா(ல்) நல்லோர் ஏத்தலா(ல்) நற்புகழ் வாய்த்தலா தொய்வில்லா தொடர்பணியால் தளர்தலா அயர்தலா அயர்வறியா அண்ணனுக்கு அணையிட ஓ...
பூசணிக்காயில் மொத்தம் எத்தனை ஸிதைகள்
- Get link
- X
- Other Apps
நானும் தங்கையும் புளியம்முத்து கையில் வைத்து விளையாடிக் கொண்டிருந்தோம். என் கையில் எத்தனை முத்து இருக்கிறது சொல் என்றாள் என் தங்கை ஏழு என்றேன். இது தெரியாதா? இதற்குப் போய் கல்லூரியிலா படிக்க வேண்டும்? எப்படி கண்டு பிடித்தாய் சொல்லேன்....ப்ளீஸ் கெஞ்சினாள் தங்கை. மாயமும் இல்லை மந்திரமும் இல்லை. டொட்டொடொயிங்.... இவ்வளவு நேரம் ஏழுகல் சுட்டிதானே விளையாடிக்கொண்டிருந்தாய். இதனால் முத்தும் ஏழுதான் வைத்திருப்பாய் என்று ஒரு ஊகத்தில் சொன்னேன். சரியா என்றேன். இப்போது நான் ஒரு விடுகதை போடுகிறேன் நீ விடுவி பார்க்கலாம். ஆரஞ்சு பழத்தில் எத்தனை விதைகள் இருக்கும்? ஆரஞ்சுப் பழத்தில் ஆரஞ்சு விதை இருக்கும். விளையாடாதே....எத்தனை விதைகள் இருக்கும் சரியாகச் சொல். சரியாகத்தான் சொன்னேன். ஆரஞ்சு விதைகள் தான் இருக்கும். என்னை என்ன கேணச்சி என்று நினைத்தாயா? சரியாகத்தான் சொன்னேன். ஆறு ஐந்து ஆரஞ்சு விதைகள் .மொத்தம் பதினொரு விதைகள் இருக்கும் அதனால்தான் அதற்கு ஆரஞ்சு என்று பெயர். புரிகிறதா?எனக்குப் பாடம் எடுத்தாள் என் தங்கை. இவளை எப்படியாவது மடக்க வேண்டுமே...என்ன செய்யலாம்? என்ன செய்...
கபிலர் சொல்லிய காதல்
- Get link
- X
- Other Apps
கபிலர் சொல்லிய காதல் காதலும் வீரமும் இல்லாமல் தமிழரின் வாழ்வியலைச் சொல்லிவிட முடியாது. வீரத்தை சொல்லும்போதும் காதல் சொல்லப்படும். காதலைச் சொல்லும்போதும் வீரம் சொல்லப்படும். இப்படி தமிழரின் வாழ்வியலில் காதலும் வீரமும் இணைந்தே தான் போய்க்கொண்டிருக்கும். காதல் வருவது ஒன்றும் இயற்கைக்கு முரணான ஒரு செயலல்ல. அனைவருக்கும் காதல் வரும். ஒரு தரப்பினர் முளையிலேயே காதலைக் கிள்ளி எறிந்துவிட்டு தான் உண்டு. தன் வேலை உண்டு என்று பொருளீட்டும் சிந்தனையில் போய்க்கொண்டே இருப்பர். மற்றொரு தரப்பினரோ காதலே வேலையாகச் செய்து கொண்டிருப்பர். எந்தக் தரப்பைச் சார்ந்தவராக இருந்தாலும் முளைவிட்ட காதல் நினைவுகள் என்றும் நெஞ்சோடு நிலைத்திருக்கும். அதனைக் காலத்தாலும் அழித்துவிட முடியாது. அப்படியே கால வெள்ளத்தில் காணாமல் போயிருந்தாலும் அங்கங்கே படிக்கும் சில செய்திகள், கவிதைகள் நம்மை இளமை கால நினைவுகளில் மூழ்கடிக்க வைக்கும். காதல் செய்வது அவரவர் விருப்பம். காதல் செய்யாதிருந்தவர்கள் அடுத்தவர் செய்யும் காதலை எட்டிப் பார்த்து மகிழ்தல் உண்டு. காதலித்தவருக்கும் காதல் செய்யா...
செந்தமிழ் நாடெனும் போதினிலே
- Get link
- X
- Other Apps
செந்தமிழ் நாடெனும் போதினிலே செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே- எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே- ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே - ( செந்தமிழ்.....) காவிரி தென்பெண்ணை பாலாறு- தமிழ் கண்டதோர் வையை பொருனை நதி-என மேவிய யாறு பலவோடத் - திரு மேனி செழித்த தமிழ்நாடு - ( செந்தமிழ்.....) வேதம் நிறைந்த தமிழ்நாடு-உயர் வீரம் செறிந்த தமிழ்நாடு- நல்ல காதல் புரியும் அரம்பையர்போல்- இளங் கன்னியர் சூழ்ந்த தமிழ் நாடு ...
தினைக்குப் பாடிய தீரக்கிழவி
- Get link
- X
- Other Apps
தினைக்குப் பாடிய தீரக்கிழவி கூழுக்குப் பாடியவரைத் தெரியும். உப்புக்கும் புளிக்கும் பாடியவரைத் தெரியுமா? உப்புக்கும் புளிக்கும் பாடலா? காசில்லாமல் போனால் கிடைத்ததற்குப் பாடல் பாடி விட்டுப் போக வேண்டியதுதான். சேர்ந்தே இருப்பது புலவரும் வறுமையுமல்லவா? வயிற்றுக்காகத்தானே இந்தப் பாடும் பாடலும். வயிற்றுப்பசி . வாழ்க்கைச் சக்கரம் ஓட வேண்டும். அதற்காகத்தான் வள்ளல்களை நாடி ஓடி பாடி பொருட்களைப் பெற்றனர் புலவர்கள். இந்தப் புலவர்மட்டும் உப்புக்கும் பாடுவேன். கூடவே புளிக்கும் பாடுவேன் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார். கூழாயிருந்தாலும் சற்று உப்பு இருந்தால்தானே குடிக்க முடியும். அதனால் அப்படி சொல்லி இருப்பாரோ? இருக்கலாம். சொல்லியவர் யார்? அறிந்து விடுவோம் வாருங்கள். ஒருநாள் ஔவை தெருவில் வந்துகொண்டிருகிறார். சற்று அசதி. எங்காவது சற்று அமர்ந்து இளைப்பாறி விட்டுச் செல்லலாம் என்று ஒரு வீட்டுத் திண்ணையில் அமர்கிறார் வீட்டிலிருந்து ஒரு பெண்ணின் அழுகுரல் கேட்கிறது. என்ன என்று எட்டிப் பார்க்கிறார். அழுகைக்கான காரணத்தைக் கேட்கிறார். "தாயே நான் என் செய்வேன்? என் கணவர் வந்து கேட்டால் என்ன பதி...
கனவினில் ஔவை
- Get link
- X
- Other Apps
கனவினில் ஔவை நார்க்கட்டிலில் நாடி வானம் பார்க்க மூடி கண்கள் இருக்க மெல்ல தொட்டதொரு விரல் விழிகள் திறக்க மறுக்க கைகள் மட்டும் சிலிர்க்க கேள்வி கேட்க மனம் நினைக்க நா எழும்ப மறுக்க செவி மடலுக்குக்குள் ஒரு சலசலப்பு சிற்றெறும்பு கடித்ததொரு சிலுசிலுப்பு செவி மடலைத் தழுவி செவி தீட்டி கவனம் திரட்டி குரல் அடையாள வகுப்பு நடத்தி குழம்பிய மனதோடு காத்திருந்தேன் வெற்றுக் காற்று வெப்பமொடு வந்து முட்ட கண் முன் ஏதோ அசைவாடும் உணர்வு யாரென்று குரல் அதட்ட முட்ட வந்தவள் இதழ்குவிக்க முத்துக்களைச் சிதற விட்டு வேடிக்கை காட்டி நின்றாள் மயங்கிக் கிடந்த என்னிடம் வேசம் கட்டிய நான் வேசக்காரியுமல்ல மோசக்காரியுமல்ல யாரென்று நீர் உரைத்தால் சாகா மருந்தொன்று தருவேன் வேகா வெயிலில் சுட்டப் பழம் எடுத்து வந்தேன் சுவைத்திட விருப்பமோ எனக் கரம் நீட்ட சாகா மருந்து தர இவளென்ன சஞ்சீவி பர்வதத்துக் காரிகையா? முட்டுக் கொடுத்து நடக்கும் இவள் முதுமகளா முழு முடமா? யாரிந்த கிழவி? ஏனிந்த விடுகதை? விடுகதை அவிழ்ப்பில் சிந்தை சிதற வானம் வெள...
குருதட்சணையான கட்டைவிரல்
- Get link
- X
- Other Apps
குருதட்சணையான கட்டைவிரல் "அண்ணா... குருதட்சணை...குருதட்சணை என்று கூறுகிறார்களே அது என்ன ?" கேட்டான் பாலனின் தம்பி முகிலன். "படிப்பதற்கு ஆசிரியருக்கு கொடுக்கும் பொருள் அல்லது பணம் குருதட்சணை. ஏன் திடீரென்று இந்தக் கேள்வி?" என்று தம்பியை ஏற இறங்க பார்த்தான் பாலன். "பணமும் பொருளும்தான் குருதட்சணை என்கிறாய்...ஆனால் கட்டைவிரலையே குருதட்சணையாக கொடுத்தான் ஏகலைவன் என்று ஆசிரியர் சொல்லித் தந்தாரே....அது என்ன ?" "ஓ...அதுவா அது பெரிய கதை.. அந்தக் கதை எல்லாம் உனக்கு எதற்கு?" "ஏன் ...நான் தெரிஞ்சுக்கக் கூடாதா ?" "ஏன் கூடாது...எல்லோரும் தெரிந்து வைத்திருப்பதில் தப்பில்லை." "அப்படியானால் எனக்கும் அந்தக் கட்டைவிரல் கதையைச் சொல்லுங்களேன்."என்று பிடிவாதம் பிடித்தான் முகிலன். "ரொம்ப பிடிவாதம் பிடிக்காதே...," . "எதையும் அறிந்துகொள்ள வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பது தப்பா?" "தப்பில்லை.... உன்னைப்போலவே எதையும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ள சிறுவன் ஒருவன் காட்டில் வசித்து வந்தான்" "தனியா...