Posts

Showing posts with the label உண்டாலம்ம இவ்வுலகம் -கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி பாடல்

உண்டாலம்ம இவ்வுலகம்

Image
உண்டாலம்ம இவ்வுலகம்... உலகம் ரொம்ப கெட்டுப் போய் விட்டது. எங்கு பார்த்தாலும் கொலை ,கொள்ளை பாலியல் வன்கொடுமை, சண்டைச் சச்சரவு, நாட்டுக்கு நாடு போர், வீட்டுக்கு வீடு  போட்டி, பொறாமை, எங்கெங்கு நோக்கினும் அமைதி இல்லாச் சூழல் என்று சொல்லிச் சொல்லிப் புலம்பாத ஆளில்லை. அப்படியானால் உலகமே அவ்வளவு தானா... இனி உருப்படவே உருப்படாதா? உருப்படியான ஆள் ஒருவர் கூட இல்லையா ? என்ற ஐயம் எல்லோர் மனதிலும் எழுவது இயல்பு. ஏன் இல்லை. ...அப்படி இல்லாதிருந்தால் உலகம் என்றோ அழிந்து போயிருக்குமே. உலகம் இன்று வரை நல்லபடியாக இயங்கிக் கொண்டிருக்கிறது. அப்படியானால் நல்லவர்களும் உள்ளனர் என்பதுதானே அர்த்தம். "நல்லார் ஒருவர் உளரேல்அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை " என்று வள்ளுவர் கூறியிருக்கிறாரே. நல்ல மழை பெய்கிறது. நாடு செழிப்பாக இருக்கிறது. இதற்கெல்லாம் யார் காரணம்? என்ற உங்கள் மனவோட்டம் எனக்குப் புரிகிறது. உலகம் நல்லமுறையில் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதற்கு முக்கியக் காரணம் யார்...?யாராக இருக்க முடியும்.? நல்லவர்கள்....நல்லவர்களேதான். வேறு யாரும் இதற்குக் காரணம் அல்லர். இன்றும் உலகில் ...