மணிமுடியில் மரகதக்கல்
மணிமுடியில் மரகதக்கல் " உதவி வரைத்தன்று உதவி உதவி செய்யப்பட்டார் சால்பின் வரைத்து" என்றார் திருவள்ளுவர். உதவி என்பது செய்யப்படும் அளவைப் பொருத்து சிறப்படைவதில்லை. உதவிப் பெறுபவரின் பண்பாட்டைப் பொருத்தே அதன் அளவு மதிப்பிடப்படும். நன்றாக இருக்கிற ஒருவருக்கு உதவி செய்ய எத்தனையோ பேர் முன்வருவர். ஆனால் எனக்கு யாருமே இல்லையே என்று ஒருவர் நிராதரவாக நிற்கும்போது நான் இருக்கிறேன் உங்களுக்கு உதவ என்று ஒருவர் முன்வந்து நின்றால்....? அப்படியே பேச முடியாமல் திகைத்து நிற்போம். கலங்கிய நேரத்தில் கை கொடுத்துத் தூக்கிவிட வந்தவர் நம் கண்களுக்குத் தெய்வமாகவே தெரிவார்.. அப்படி நிராதரவான நேரத்தில் கை கொடுத்து உதவியவர் யார் என்று அறிய ஆசையாக இருக்கிறதல்லவா? அதற்கு முன்னால் நடந்தது என்ன என்பதைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டாமா? இது கதை அல்ல. உண்மைச் சம்பவம். நம் தலைமை ஆசிரியை ஒருவருக்கு நிகழ்ந்த சோகம். ஓய்வுக்குப் பின்னர் ஓய்வூதியம் பெறும் மகிழ்ச்சியே அலாதிதாங்க. எவ்வளவு பணம் வைத்திருப்பவராக இருந்தாலும் மாதத்தின் முதல் நாள் ஓய்வூதியம் வந்துவ...