துர்ச்சனர் கண்ணிற்படாமல் விலகுக
துர்ச்சனர் கண்ணிற்படாமல் விலகுக தள்ளு.. தள்ளு ....தள்ளு குரல் எழுப்பியபடி குறும்புக்கார சிறுவன் ஒருவன் ஓடி வந்தான். எந்தப் பக்கம் தள்ளுவது ? எதற்காகத் தள்ள வேண்டும்? இப்படிக் கேள்விகளோடு அந்தச் சிறுவனை நிமிர்ந்து பார்ப்பதற்கு முன்னர் அவன் என்னைக் குப்புறப் தள்ளிவிட்டு ஓடிவிட்டான். எழுந்து முழங்கையைத் தடவியபடி அந்தச் சிறுவனை முறைத்துப் பார்த்தபடி நின்றிருந்தேன். "தள்ளி நில்லு ....தள்ளி நில்லு தெருவில் நின்றபடி வாய்ப்பார்த்துக் கொண்டிருந்தால் வருவோர் போவோர் எல்லாம் குப்புற தள்ளிவிட்டுத்தான் போவார்கள்" என்று சொல்லி வாயைப் பொத்தி படி சிரித்தாள் தங்கை. "அப்படியே அடித்தேன் என்றால்...."கையை ஓங்கினேன். கையை மடக்கிப் பிடித்த அண்ணன், " கொம்புள திற்கைந்து குதிரைக்குப் பத்துமுழம் வெம்புகரிக் காயிரந் தான் வேண்டுமே வம்புசெரி துர்ச்சனர் கண்ணிற் படாத தூரத்து நீங்குவதே நல்ல நெறி." என்று சும்மாவா சொல்லியிருக்கிறார்கள் .கோபப்படுவதை விட்டுவிட்டு யோசி...யோசி நன்றாக யோசி என்றான். யோசித்தேன். அண்ணன் கூறியதில் இருந்த உண்மை புரிந்தது. தாங்கள் அறிந்ததை உணர்ந்ததை முன்னோர்கள் நறு...