Posts

Showing posts from September, 2022

செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்.....

செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்... செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன் கவிகைக்கீழ்த் தங்கும் உலகு"                        குறள் :389      செவி - காது கைப்ப - கசக்கும்படியாக சொல் - பேசும் மொழி பொறுக்கும் - தாங்கிக் கொள்ளும் பண்புடை- பண்பு கொண்ட வேந்தன் - அரசன் , ஆட்சியாளன் கவிகை - குடை, ஆட்சி கீழ் - கீழாக,தலைமையின்கீழ்  தங்கும் - நிலைபெறும் உலகு - மக்கள் குறைகூறுபவர்களின் கசப்பான சொற்களை எல்லாம் பொறுத்துக் கொள்ளும் பண்புடைய அரசின் கீழ்  உலக மக்கள் அனைவரும் வந்து நிற்பர். விளக்கம் : தன் காதுகளால் கேட்க முடியாதபடி கசப்பான சொற்கள் வந்து விழுந்தாலும் அவை எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்ளும் பண்பு ஒரு ஆட்சியாளனிடம் இருக்குமானால் ஒருநாள் கசப்பாகப் பேசியவர்களும் அந்த ஆட்சியாளனிடம் வந்து நிற்பர். மக்களின் விமர்சனங்கள் அமைச்சர்களின் அறிவுரைகள்  மாறுபாடாக கேட்க முடியாததாக இருக்கலாம். ஆனால் இவை எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டு, நாட்டு மக்கள் நலன் கருதி எடுக்க வேண்டிய  முடிவுகளைச் சரியாக எ...

கடன் சொல்லும் சேதி

கடன் சொல்லும் சேதி அதிகாலை 6. 30 மணி.  வாசலில் பத்திரிகை வந்து விழுகிறது.  எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன்.  ஒரு இடத்தில் என் கண்கள்அப்படியே  நிலைகுத்திப் போனது.  காரணம் வாழ வேண்டிய  வயதில் இரண்டு குழந்தைகள்.  ஆயிரம் கனவுகளோடு  பதினேழு வருடம் கூடவே  வாழ்ந்த மனைவி. மூவரின் படம்.  மூவரையும் கொன்றுவிட்டு  கணவன் கடன்தொல்லையால்   தற்கொலை செய்து கொண்டார்  என்பது செய்தி.    பதினாறு வயது மகன்.  இன்னும் ஐந்தாறு வருடத்தில்  தன் காலில் நின்று விடுவான்.  பதின்மூன்று வயது மகள்.  பலபல கற்பனைகள்  வந்து கீச்சுமூச்சு காட்டும் பருவம்.  வாழ்க்கையில் பாதிகாலம்கூட  கடந்திராத மனைவி. பிள்ளைகளை  எப்படியெல்லாம் வைக்க வேண்டும்  என்று ஓராயிரம் கனவுகளோடு  இருந்தவர். கணவன்மீது உள்ள அசையா நம்பிக்கையில் ஏன் ?எதற்கு ? என்ற எந்தக் கேள்வியுமே கேட்காது  உடன் நடந்தவர். இவர்களைக் கொல்ல இவருக்கு எப்படி மனம் வந்தது? என்று கேள்வி கேட்க வைக்கும் முகங்கள். தான் மட்டும் தற்கொலை செய்து கொள்ள வேண்டும...

அறனோக்கி ஆற்றுங்கொல் வையம்....

அறனோக்கி ஆற்றுங்கொல் வையம்..... " அறனோக்கி ஆற்றுங்கொல் வையம் புறனோக்கி புன்சொல்  உரைப்பான் பொறை"                குறள் : 189 அறம்- நல்வினை நோக்கி - கருதி ஆற்றுங்கொல் - தாங்குகிறதோ வையம் -உலகம் புறன் - புறத்தே நோக்கி - பார்த்து புன்சொல்- இழிவான பேச்சு உரைப்பான் - சொல்லுபவன் பொறை -தாங்குதல்,சுமத்தல் ஒருவன் இல்லாதபோது அவனைப்பற்றி  இழிவாகப் பேசுபவனை இந்த நிலமானது தாங்கிக் கொள்வது என்பது இவனையும் சுமப்பது எனக்கு அறம்  என்று கருதியோ?   விளக்கம் : முன்னொன்று பேசி புறமொன்று பேசும் இழிவான செயல்  சிலரிடம் இருக்கும். அதனை அவர்கள் தவறாகக் கருதுவதே இல்லை. ஆனால் அது எவ்வளவு பெரிய இழிவானச் செயல் என்பதை  இந்தக் குறள் கூறுகிறது பாருங்கள். ஒருவன் இல்லாதபோது அவனைப்பற்றி அவதூறாகப் பேசுதல் இழிவு. அறத்திற்குப் புறம்பான செயல். இப்படி ஒருவன் அறத்திற்குப் புறம்பான செயலைச் செய்கிறான். அவனையும் இந்த  உலகம் தாங்கிக் கொள்கிறது என்றால் அதற்குக் காரணம் என்னவாக இருக்கும்? சற்று சிந்திக்க வேண்டிய செயல்தான். இந்தப் பூமியானது அகழ்வாரையும் தாங்கும் ...

பாராட்டும் வாழ்த்தும்

பாராட்டும் வாழ்த்தும்  " வாழ்த்துங்கள். அது உங்களை வாழ்த்தும்.  பாராட்டுங்கள். அது  உங்களைப்   பல பாராட்டுக்களுக்கு உரியவராக்கும்."    "உலகுள்ளவரை உவகையோடு வாழ்க."  இது ஒரு சாதாரண வாழ்த்து தான்.   ஆனால் இதன் தாக்கம் எவ்வளவு என்பது   நம்மில் பலர் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.   வாழ்த்துகள் ஏதோ பொழுது போகாமல்  கூறுகிறார்கள் என்று கூட  நினைப்பவர்கள் உண்டு. சில சமயங்களில் கடனே என்று  வாழ்த்துகள் அனுப்புவதும்  உண்டு. வாழ்த்துகள் கூறுவதற்கு அவ்வளவு  சிரத்தை எடுத்துக் கொள்வதில்லை. இது சோம்பேறித்தனமா அல்லது நாம்  வாழ்த்தும் அளவுக்கு இவர்  அப்படி ஒன்றும் பெரிய ஆளா என்ற  நினைப்பா என்று சொல்லத் தெரியவில்லை. இரண்டுமே இருக்கலாம். இவை நமக்கும் இருக்கும் ஈகோவைத்தான் வெளிப்படுத்துவதாக இருக்கும். இதே போன்றுதான் பாராட்டவும்  பலமுறை தவறி விடுகிறோம்.  பாராட்டினால் அவர் நம்மை விடப்  பெரியவராகிவிடுவாரோ என்ற  நினைப்பு பாராட்டுக்கு முட்டுக்கட்டை இடும். அல்லது நாம் பாராட்டுவதால் என்ன கிடைத்...

ஆனைக்கும் பானைக்கும் சரி

ஆனைக்கும் பானைக்கும் சரி  ஆளாளுக்கு ஒன்றும் சொல்லாமல் நின்றால் எப்படி?"  "நடந்தது நடந்து போச்சு...காலாகாலத்துல       ஒரு மூக்கணாங்கயிறு போட்டுருந்தா       இப்படி நடந்துருக்காது.      கால சுத்திகிட்டு கெடந்திருக்கும்.      செய்ய வேண்டியத செய்யாம விட்டுபுட்டு       இப்போ வந்து லொபோ..லொபோ என்று       வாயிலும் வயிற்றிலும் அடிச்சுட்டு       வந்து நின்னா எப்படி?"  கூட்டத்தினரின் மௌனம் கலைத்தார்   சட்டாம் பிள்ளை.       "பாதிக்கப்பட்டவக நாலும் பேசத்தான்  செய்வாக .நாம பொறுத்துத்தான்  போவணும் ." "அதுக்காக உசுர பறிப்போன்னு நின்னா எப்படி? "இப்படி ஆளாளுக்கு அறுவாவை கையில  எடுத்தாகடைசியில எந்த உயிர் தான் மிஞ்சும்."      சட்டாம்பிள்ளையிடமே சட்டம் பேசினர்   கூட்டத்தில் நின்றிருந்த பெரியவர்கள். "இதுக்கு மேல நான் பேசுவதற்கு  என்ன இருக்கு?" "ஐயா பெரியவுக பார்த்து என்ன  சொல்லுராகளோ அதுக்கு ...

திருமணநாள் வாழ்த்து

திருமணநாள் வாழ்த்து கதிரவனும் கதிரனுப்பி  மணநாள் வாழ்த்துரைக்க வான்மழையும் நீருகுத்து  வாழ்த்திசையைப் பாடி நிற்க அன்றலர் அல்லி  நின் நகைகண்டு  நாணி முகம் கோணி நிற்க  சுற்றிவரும் சிற்றெறும்பும்   சற்று  தன்செயல் மறக்க  விழுதெனப் பிள்ளைகள்  பக்கம் நின்றிருக்க  அண்ணாந்து பார்த்து   எந்நாளும்  எல்லோரும்   ஏந்தி முகம் பார்த்திருக்க  வானும் நிலனும் போல  வாழ்வாங்கு வாழ்ந்தின்பம் காண்க!    வாழ்க பல்லாண்டு ...பல்லாண்டு...  பல்லாயிரம் ஆண்டு  இன்றுபோல் என்றும் இணைந்து!           - செல்வபாய் ஜெயராஜ் 

பிறந்தநாள் வாழ்த்து

பிறந்தநாள் வாழ்த்து சிந்தும் சிரிப்பலையே முந்தும் மொழியலையே நடமாடும் பல்கலையே எழிலாடும் புன்னகையே நற்றிணையே !நல்லறிவே! முத்தமிழே !முழுநிலவே! கவித்தேனே!கற்கண்டே! பேசும் சொற்களஞ்சியமே ! என்னவென் றழைப்பேன்? ஏதுசொல்லி அறிமுகம் செய்வேன்? மும்பை மாநகராட்சியின் அறிவுப் பெட்டகமே! நின்பால் கற்றதும் பெற்றதும்  ஏராளம் ஏராளமே!  பேரறிவாட்டிக்கு வாழ்த்துரைக்கும் பெரும்பேறு வாய்த்தது என்றன் நற்பேறென்பேன்  நீலமணிமிடற்று ஒருவன் போல  மன்னுக பெரும நீயென்ற வாழ்த்துனக்கு அனுப்பி வைத்தேன்  வாழ்க பல்லாண்டு ....பல்லாண்டு...  பல்லாயிரம் ஆண்டு..  ராஜேஸ்வரியும் சிரிப்புமாய் இணைந்து!                                    -செல்வபாய் ஜெயராஜ்

ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்....

ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்.... " ஆக்கமுங் கேடும் அதனால் வருதலாற் காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு"            குறள் : 642 ஆக்கமும் - வளர்ச்சியும் கேடும் - அழிவும் அதனால் - அதன் காரணமாக வருதலால் - ஏற்படுவதால் காத்து- போற்றி ஓம்பல் - பாதுகாத்தல் சொல்லின் கண் - சொல்லில் சோர்வு தளர்ச்சி  ஒருவனுடைய வளர்ச்சியும் அழிவும் தான் சொல்கின்ற சொல்லால் வருவதால்  ஒருவன் தான் சொல்லும் சொல்லில் தவறு இல்லாதபடி காத்துக் கொள்ள வேண்டும். விளக்கம் : நமது ஆக்கத்திற்கும் அழிவுக்கும்  நாம் தான் காரணம். ஒரு சொல் வெல்லும் . ஒரு சொல் கொல்லும். அதனால் பேசும் பேச்சில் கவனமாக இருத்தல் வேண்டும். நன்மையும் தீமையும் சொல்லால் வருதலால் நாவைக் காத்துக் கொண்டு நன்மைக்கு உகந்த சொற்களையே பேச வேண்டும். அதனால்தான் வள்ளுவர் "யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு" என்று சொல்லித் தந்தார். இந்தக் குறளில் நாட்டின் வளர்ச்சி அமைச்சர்கள் கையில்தான் உள்ளது. நல்ல சொற்கள் பேசும் அமைச்சர்களால் நாட்டிற்கு அச்சுறுத்தல் இருக்காது. மாறாக பொறுப்பற்ற முறையில் சொற்களைக் கைய...

அற்றார் அழிபசி தீர்த்தல்....

அற்றார் அழிபசி தீர்த்தல்.... அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றார் பொருள்வைப் புழி        குறள் : 226 அற்றார் - பொருளற்றவர் அழிபசி - கொடிய பசி தீர்த்தல் - நீக்குதல் அஃது - அவ்வாறு செய்தல் ஒருவன் - ஒருவனுடைய பெற்றார் - பொருள் மிகுதியாகப் பெற்றவர் பொருள் - பொருளை வைப்புழி - சேமித்து வைக்குமிடம்.. கொடிய பசியால்  வாடுபவரின் வயிற்றுப் பசியைப்  போக்கி அவர் வயிற்றில்  இடம்பிடிப்பதுதான்  பொருளுடைய ஒருவன் தான் சேர்த்து வைத்தப் பொருளைச் சேமித்து வைக்கும் இடமாக இருக்கும். விளக்கம் : நிறைய பொருள் இருக்கிறது. அதனைப் பிற்காலத்தில் பயன்படுத்துவதற்காக களஞ்சியத்தில் சேர்த்து வைப்போம். அதிக விலை வரும்போது விற்று மேலும் அதிகம் பொருள் ஈட்டலாம் என்று நினைப்போம். நீங்கள் பொருளைச் சேர்த்து வைக்க வேண்டிய இடம்  அது அல்ல . அதைவிடப் பாதுகாப்பான இடம் ஒன்று உண்டு. அவ்வாறு நீங்கள் சேமித்து வைக்கும் இடம் பிற்காலத்தில்   உங்களுக்கு  உதவுவதாக இருக்கும். அது எந்த இடம் என்று கேட்கிறீர்களா? ஏழையின் வயிறு . கொடிய வயிற்றுப்பசியால் வாடுகிறவனுக்கு உங்கள் பொருள...

அம்மா நீ எனக்கு வேண்டும்

  அம்மா நீ எனக்கு வேண்டும்       அம்மா நீ எனக்கு வேண்டும் அனுதினமும் உன் தோளில் சாய்ந்து  ஆறுதல் நான் அடைந்திட வேண்டும். அம்மா உன் அன்பு வேண்டும் நீ மட்டுமே எனக்குவேண்டும் உன் மடியில் சாய்ந்து வானிலவை அழைத்திட வேண்டும் கண்சிமிட்டும் தாரகையோடு கதை ஆயிரம் பேசிட வேண்டும் உன் முகம் பார்த்து ஊர்க்கதைகள் பேசிட வேண்டும் உன் மார்பில் சாய்ந்து  உலகமெல்லாம் சுற்றிட வேண்டும் உன் கையால் என் தலையை மெல்ல நீ கோதிட வேண்டும் பெத்தவள் நீ எனக்கு பேரு சொல்லித் தர வேண்டும் பொய்யான வார்த்தை பேசி நெய்ச்சோறு ஊட்ட வேண்டும் நித்தம் நித்தம் உன் மடியில் தலை சாய்த்து கிடந்திட வேண்டும்  சத்தமில்லா முத்தம் தந்து கன்னத்தை கன்னிட வைத்தல் வேண்டும் முற்றம் எங்கும் உன்னோடு குறுநடை நடந்திட வேண்டும்    சோர்வு வந்திடும்போதும்  துயரங்கள் துரத்தும்போதும்  அம்மா உன் தோள் எனக்கு ஆறுதலாய் இருந்திடல் வேண்டும்   விரல்களால் நம்பிக்கை வார்த்தை    என் முதுகில் நீ எழுதிட வேண்டும் வீதிவீதியாய் அம்மா உன் கரம் பற்றி ஆனந்த நடை போட வேண்டும் அம்மா நீ எனக்கு வேண்டும்...

சொல்லத் துடித்த கண்கள்

  சொல்லத் துடித்த கண்கள்  அதே கண்கள். கடந்த ஒரு வார காலமாக என் தூக்கத்தைக் கெடுத்த அதே கண்கள். இதைத்தானே கடந்த ஒரு வாரகாலமாக நான் தேடிக் கொண்டிருந்தேன். இவ்வளவு சீக்கிரமாக பார்க்க நேரிடும் என்று எதிர்பார்க்கவில்லை. பார்த்த அந்தக் கணத்தில் தடுமாறிப் போனேன்.தலைகுப்புற  விழுந்தது போல் இருந்தது.  முன்னும் பின்னுமாக  கால்கள்  பின்ன ஆரம்பித்தன. அதற்குமேல் என்னால் நடக்க முடியவில்லை. ஏன் இந்தத் தடுமாற்றம்?  அந்தக் கண்கள் என்னோடு  அப்படி என்னதான்  பேசியன? நெஞ்சுக்குழிக்குள் ஏதோ ஒன்று உருளுவது போல இருந்தது. மறுபடியும் மறுபடியும்  பார்க்க வேண்டும். என்ன பேச நினைக்கிறாய்? என்று கேட்க வேண்டும். அவள் கண்களில் தெரிந்த கெஞ்சல். ஏதோ சொல்ல நினைத்த துடிப்பு . என்னைச் சுற்றிச் சுற்றி சூறாவளியாய் சுழற்றி  சுழற்றி அடித்தது. ஒரு ஐந்து வினாடி பார்வை.  அந்தக் கண்களுக்குள் இருந்த ஏதோ ஒன்று என்னை அதற்கு மேல் போகவிடாமல் கட்டிப் போட்டுவிட்டது. கண நேரக் காட்சி வந்து வந்து கண்ணாமூச்சி காட்டி மறைந்து போனது ஏன் ? மறுபடியும் அந்தக் கண்களைக் காண மாட்டோமா என்ற ஏக...

அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை....

அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை... " அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும் புன்மையாற் காணப் படும் "                  குறள் : 185                   அறம் - நல்வினை சொல்லும் - சொல்லுதல் நெஞ்சத்தான் - உள்ளம் உடையவன் அன்மை - அல்லாமை புறம்- காணாத இடம், வெளியிடம் சொல்லும் - சொல்லுகின்ற புன்மையால்- இழிச் செயலால் காணப்படும் - அறியப்படும் ஒருவனிடம் இருக்கும் புறங்கூறும் குணத்தை வைத்தே அவனிடம் அறமில்லை என்பதைத் தெரிந்து கொள்ளலாம். விளக்கம் : ஒருவன் கல்வி அறிவில் சிறந்தவனாக இருக்கலாம். அறநூல்களைக் கற்றுத் தேர்ந்திருக்கலாம்.பேச்சில் அறம் இருக்கலாம். ஆனால் அவனிடம் புறங்கூறுதல் என்ற ஒரு இழிகுணம் இருந்துவிட்டால் போதும் அவனிடம் அறம் இல்லை என்பதைத் தெரிந்து கொள்ளலாம். உள்ளத்தில் அறச்சிந்தனை உள்ள எவருக்கும் புறங்கூறும் எண்ணம் எழாது. அறம் பேசுவதால் மட்டும் ஒருவரை அறம் உடையவர் என்று எண்ணிவிடாதிருங்கள். முகத்திற்கு முன்னால் இனிமையாகவும் முதுகுக்குப் பின்னால் அவதூறாகவும் பேசும் அந்த ஒரு பண்பு மட்டுமே போதும். இவரிடம...

தவறவிட்ட தருணங்கள்

தவறவிட்ட தருணங்கள் மழை பெய்ததும் கலப்பையை எடுத்துச்  செல்லாத உழவன்.... படிக்கும் காலத்தில் புத்தகத்தை மூடி வைத்துக் கொண்டு தூங்கும் மாணவன்... வேலையின்போது சிரத்தை எடுத்துக் கொள்ளாத ஊழியக்காரன்.... இளமையில் சின்னச்சின்ன குறும்புகளைச் செய்யத் தவறிய இளைஞன்... உடலும் உள்ளமும் உறுதியாக இருக்கும்போது உழைக்கத் தவறிய மனிதர்கள்.... பணம் புரளும் போது சேமிக்கத் தவறிய மனிதர்கள்.... உயர் பதவி இருந்தும் உதவி செய்யத் தவறிய அதிகாரிகள்... இவர்கள் எல்லாம் கிடைத்த நல்ல தருணத்தைத் தவற விட்டவர்கள்.    இவர்கள் மட்டுமல்ல... இன்னும் எத்தனையோ பேர் தமக்குக் கிடைத்த நல்ல கருத்தைத் தவறவிட்டிருப்பர்.   நம் ஒவ்வொருவர் வாழ்விலும்  ஏதோ ஒன்றைத் தவறவிட்ட தருணம் கண்டிப்பாக நிகழ்ந்திருக்கும். அதை நினைத்து நினைத்து  வருந்தியிருப்போம். எல்லாவற்றையும் இழந்தது போன்ற விரக்தியில் இருந்திருப்போம். இனி எனக்கு நல்லதே நடக்காதா அப்படி ஒரு வாய்ப்பு மறுபடியும் வாய்க்காதா என எண்ணி எண்ணி வெதும்பியிருப்போம். இளமையில் காதலைச் சொல்ல முடியாமல் தவறவிட்டுவிட்டு  இன்றுவரை தவித்துக் கொண்டிருப்பவர்கள் நிறையபே...

நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்....

நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்.... நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும் பண்பாற்றார் ஆதல் கடை"              குறள் : 998 நண்பு - நட்பு ஆற்றார் - கொள்ளாதவர் ஆகி - ஆய் நயம் - இனிமை , இரக்கம் இல் - இல்லாதவற்றை செய்வார்க்கும் -செய்பவர்க்கும் பண்பு - பண்போடு ஆற்றார் - ஒழுகாதவர் ஆதல் - ஆகுதல் கடை - இழிவு நட்பு பாராட்டாதவராக  இனிமை அல்லாத செயல்களைச் செய்பவரிடத்தில் நாமும் பண்போடு நடக்க முடியாதிருத்தல் இழிவாகவே கருதப்படும். விளக்கம் :  நம்மிடம் இனிமையாக பேசத் தெரியாதவர், தீமை செய்ய நினைப்பவர் இவர்கள் உண்மையிலேயே நம் நண்பர்களாக இருக்க முடியாது. உண்மையான நட்பு இருப்பவர்கள் தவறான பேச்சிலும் செயலிலும் ஈடுபட மாட்டார். அப்படி ஒருவர் தவறாக பேசுகிறார் நமக்கு எதிரான செயலில் ஈடுபடுகிறார் என்றால் நாமும் அவருக்கு அப்படியே  திருப்பிப் செய்ய நினைப்பது அநாகரிகமாகும். அப்படிச் செய்வோமானால்  அவருக்கும் நமக்கும் என்ன வேறுபாடு இருந்துவிடப் போகிறது.? அவரைப் போலவே நாமும் பண்பற்றவர்களாக நடந்து கொண்டால் நாம் அவரை விடவும் இழிவானவர்களாகவே கருதப்படுவோம் என்கிறார...

ஒலித்தக்கால் என்னாம் உவரி....

ஒலித்தக்கால் என்றாள் உவரி.... " ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை நாகம் உயிர்ப்பக் கெடும் "              குறள்: 763 ஒலித்தக்கால் - ஆரவாரம் செய்வதால் என்னாம்  -என்ன ஆகிவிடும்? உவரி -  உப்புநீர் நிறைந்த கடல் (போல ) எலிப்பகை- எலியினது பகை நாகம் - நல்ல பாம்பு உயிர்ப்பக் - மூச்சுவிட்டதும் கெடும் - காணாமல் போய்விடும் எலிகள் எல்லாம் கூடி நல்லபாம்போடு பகைமை கொண்டு கடல்போல  ஆரவாரம் செய்வதால் என்ன நிகழும்?  பாம்பின் மூச்சொலி கேட்டதும்  ஒன்றுமில்லாமல் அடங்கிப் போய் விடும். விளக்கம் :  எலிகள் எல்லாம் கூடி நாகத்தின்  முன்னால் நின்று கடல் போல் முழக்கமிட்டாலும் அதனால் வரும்  தீமை ஏதும் உண்டோ? நாகம் ஒரு மூச்சு விட்டால் போதும். எலிகளின் ஆரவாரம் அப்படியே  அடங்கிப் போய்விடும். அதுபோல எலிபோல வீரம் இல்லாத பகை நாட்டு வீரர்கள்  ஏராளமானோர் கூடிநின்று ஆர்ப்பரித்தாலும் ஆற்றல்மிக்க வீரன் ஒருவனைக் கண்ட உடனேயே அப்படியே அடங்கி பின்வாங்கி சென்றுவிடுவர். அச்சமுள்ள எலிகள் அச்சமில்லா நாகத்தின் முன் நிற்க அஞ்சும்.  பகைவரை எதிர்ப்பத...

நோவாவின் பேழை - விடுகதை

நோவாவின் பேழை - விடுகதை  1. விண்ணை முட்டிய மலை        பேழை தட்டிய மலை        அது எந்த மலை?                   விடை : ஆரராத் மலை 2. வானில் வண்ணம் காட்டுவேன்     மழை நாள் கண்டு மகிழ்ந்து நிற்பேன்      உடன்படிக்கையின் அடையாளம் நான் என்றதும்      விண்ணில் பறப்பது போல் மகிழ்கிறேன்.      நான் யார் தெரியுமா?     விடை :  வானவில் 3.  சமாதானம் பேசி வந்தேன்       என்னை அழைத்து       காலநிலை அறிந்து வர அனுப்பிவிட்டார்       நான் யார்?     விடை :. புறா 4. கூடி உண்பேன்      பந்தியில் அல்ல;      தன்னந்தனியாய் வெளியேறினேன்      தண்ணீரில் அல்ல      நான் யார்?       விடை : காகம்                  5.  தேவனுக்கு பிரியமானது இந்த மலை       நான் கொத்தி வந்தத...

ஆசிரியர் நாள் வாழ்த்து

Image
ஆசிரியர் நாள் வாழ்த்து பள்ளி என்னும்  கருவறையில் எம்மை  கருவாக்கி உருவாக்கி   உயிரின் உயிராய்  மெய்யின் மெய்யாய்  எழுத்தின் வடிவாய்  சொல்லின் பொருளாய்  எண்ணின் தொடரியாய்  தொடருரைப் பகர்ந்து  மடமையைக் களைந்து  மதியொளி ஏற்றி  விழுமியங்கள் ஊட்டி விழுநீர்ப் பாய்ச்சி வேராய்  இருந்து விழுதாய்த் தாங்கி சிகரம் தொட ஏணியாய் பேராழி கடக்க தோணியாய் பெருமதி புகட்டிய  நல்லாசிரிய பெருமக்களுக்கு  ஆசிரியர் நாள் நல்வாழ்த்துகள்!