Posts
Showing posts with the label பிறந்தநாள் வாழ்த்து - கவிதை
பிறந்தநாள் வாழ்த்து
- Get link
- X
- Other Apps
பிறந்தநாள் வாழ்த்து கீழ் வானம் சிவக்க சாளரம் மெல்லத் திறக்க சாய்ந்தாடு மரக்கிளை ஒதுங்க செங்கதிரோன் ஞானம் டீச்சர் வீட்டில் அத்துமீறல் நடத்த செவிமடலைச் செந்தமிழ் சொற்கள் தழுவி நடமாட தங்க மகள் பிறந்தநாள் தராணியோடு பாவணி சூட்டி மகிழ்வோம் வாரீரென பட்சியொன்று காதோரம் கவிபாட சில்லென்று முகம் சிலிர்க்க செவ்விதழ் மெல்லத் திறக்க கண்கள் இதழுக்குத் தடையிட்டு கவின்மொழி பேசி நிற்க சுற்றம் சுற்றி நின்று வாழ்த்துரைக்க விஞ்சும் மதி யுண்டு மிஞ்சும் மகிழ் வுண்டு கொஞ்சும் நலம் கொண்டு நெஞ்சம் விழைவன கண்டு வாழ்வீரென யானும் வாழ்துரைத்து மகிழ்கிறேன் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு எம் உள்ளங்களை ஆண்டு!
பிறந்தநாள் வாழ்த்து
- Get link
- X
- Other Apps
பிறந்தநாள் வாழ்த்து தேனுலா தமிழுலா தேடலா(ல்) வானுலா மதியுலா வாழ்த்துப் செய்தி வாசித்தலா! தத்தை மொழி கற்றலா(ல்) ஒற்றைச் சொல்லில்- கைபேசி ஓயாது வாழ்த்துப் பாடலா! மிஞ்சி ஒலிப்பது பேச்சிலா விஞ்சும் அன்பிலா-உள்ளில் எஞ்சி இருக்கும் நட்பிலா! வரையிலா அன்பு நடத்தலா(ல்) கரையிலா நட்பு பேணலா -நடப்பவை கறையிலா உள்ளம் நினதாதலா! கண்டுலா வந்திட விழைதலா(ல்) கவியுலா வந்தது- இன்று கவினுலா இன்பச் சிற்றுலா! வானும் நிலனும் போல வாழ்க பல்லாண்டு...பல்லாண்டு இன்றுபோல என்றும் உவந்து! - செல்வபாய் ஜெயராஜ்
பிறந்தநாள் வாழ்த்து
- Get link
- X
- Other Apps
பிறந்தநாள் வாழ்த்து ஆசிரியருள் மாணிக்கமாய் அனைவரின் அன்புக்குரியோனாய் மாணவரின் கனவு நாயகனாய் மாண்புநிறை பேரறம் கொண்டோனாய் மட்டில்லா மொழியறிவாளனாய் தெற்றில்லா தமிழ்க்களனாய் வெற்றுமொழி பேசா ஞானியாய் தேய்வில்லா மதியாளராளராய் - வாழும் செல்வகணேசன் செவியில் கவியோதி செந்தமிழில் வாழ்த்துரைக்க கற்றோர் கரம் கூப்பி வரிசையில் காத்திருக்க தொன்மை புகழ் பண்ணையூராருக்கு வாழ்த்துப்பா என் கைசுமக்க நெடும்புனல் நன்னீர் தரு இனிமை நுகர்ந்து ஆழ்கடல் அலைகுவி மணலினும் மிக்க நாட்கள் வாழ்ந்தின்பம் காண வாழ்த்துகிறேன்! வாழ்க! இன்றுபோல் என்றும் உவந்து ! - செல்வபாய் ஜெயராஜ்
பிறந்தநாள் வாழ்த்து
- Get link
- X
- Other Apps
பிறந்தநாள் வாழ்த்து வானிலவோ தாரகையோ வாசம்தரு தேன்மலரோ - கோல்டா சில்லென்று சிரித்த நாள் சீர்மிகு பிறந்தநாள் ஆனதுவோ ஆராரோ வாழ்த்த அகவைநாள் அளவில்லா அகமகிழ் தந்ததுவோ! கட்செவியேறி காதோரம் கவியோதி கரமதில் மலர்தனைத் தந்து பாட்டியுனைச் சீராட்டுகிறேன் கலை பல கற்று விருதுகள் சுமந்து விஞ்சும் மதி யுண்டு மிஞ்சும் மகிழ் வுண்டு கொஞ்சும் நலம் பூண்டு நெஞ்சம் விழைவன கண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு வாழ்க! வாழும் பரம்பரையெனும் நற்பெயர் கொண்டு!
பிறந்தநாள் வாழ்த்து
- Get link
- X
- Other Apps
பிறந்தநாள் வாழ்த்து சிந்தும் சிரிப்பலையே முந்தும் மொழியலையே நடமாடும் பல்கலையே எழிலாடும் புன்னகையே நற்றிணையே !நல்லறிவே! முத்தமிழே !முழுநிலவே! கவித்தேனே!கற்கண்டே! பேசும் சொற்களஞ்சியமே ! என்னவென் றழைப்பேன்? ஏதுசொல்லி அறிமுகம் செய்வேன்? மும்பை மாநகராட்சியின் அறிவுப் பெட்டகமே! நின்பால் கற்றதும் பெற்றதும் ஏராளம் ஏராளமே! பேரறிவாட்டிக்கு வாழ்த்துரைக்கும் பெரும்பேறு வாய்த்தது என்றன் நற்பேறென்பேன் நீலமணிமிடற்று ஒருவன் போல மன்னுக பெரும நீயென்ற வாழ்த்துனக்கு அனுப்பி வைத்தேன் வாழ்க பல்லாண்டு ....பல்லாண்டு... பல்லாயிரம் ஆண்டு.. ராஜேஸ்வரியும் சிரிப்புமாய் இணைந்து! -செல்வபாய் ஜெயராஜ்
பிறந்தநாள் வாழ்த்து
- Get link
- X
- Other Apps
பிறந்தநாள் வாழ்த்து சிந்தும் சிரிப்பலையே முந்தும் மொழியலையே நடமாடும் பல்கலையே எழிலாடும் புன்னகையே நற்றிணையே !நல்லறிவே! முத்தமிழே !முழுநிலவே! கவித்தேனே!கற்கண்டே! பேசும் சொற்களஞ்சியமே ! என்னவென் றழைப்பேன்? ஏதுசொல்லி அறிமுகம் செய்வேன்? மும்பை மாநகராட்சியின் அறிவுப் பெட்டகமே! நின்பால் கற்றதும் பெற்றதும் ஏராளம் ஏராளமே! பேரறிவாட்டிக்கு வாழ்த்துரைக்கும் பெரும்பேறு வாய்த்தது என்றன் நற்பேறென்பேன் நீலமணிமிடற்று ஒருவன் போல மன்னுக பெரும நீயே! என்ற வாழ்த்துனக்கு அனுப்பி வைத்தேன் வாழ்க பல்லாண்டு ....பல்லாண்டு... பல்லாயிரம் ஆண்டு.. ராஜேஸ்வரியும் சிரிப்புமாய் இணைந்து! -செல்வபாய் ஜெயராஜ்
பிறந்தநாள் வாழ்த்து
- Get link
- X
- Other Apps
பிறந்தநாள் வாழ்த்து சிந்தும் சிரிப்பலையோ முந்தும் முன்னலையோ எட்வினின் நகல் இவனோ அகவை ஒன்று ஆகுமுன்னே அலைபேசி தொழில்நுட்பம் அறிந்த அறிஞன் இவன் என்பேனோ? எட்டெடுத்து வைக்குமுன்ன பதினாறடி பாயும் மருள்மானோ? ஜெஸ்வின் என்பதுன் பெயரோ எழில் கொஞ்சும் கலையோவியமாய் - எம் இல்லம் வந்த துரைதான் நீயோ புரட்டும் நாவொலி உனதோ-உன் உருட்டு மொழிதான் தமிழோ வாழ்த்தொலி கேட்டலால் வந்ததிந்த மகிழ்வோ? வாழ்த்தும் உள்ளங்கள் வாய்த்ததுன் நற்பேறோ? உள்ளம் உவக்க இல்லம்கூடி வாழ்த்துகிறோம்! நோய்நொடியில்லா நாட்கள் உனதாக இன்றுபோல் என்றும் மகிழ்ந்து வானும் நிலனும்போல வாழ்வாங்கு வாழ்க....! பல்லாண்டு...பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு வாழும் பரம்பரை என்னும் நிலைத்த பெயர் எமக்குத் தந்து!
பிறந்தநாள் வாழ்த்து
- Get link
- X
- Other Apps
பிறந்தநாள் வாழ்த்து தேனிலா தமிழுலா தேடலா (ல்) பால்நிலா வானுலா வந்து வாழ்த்துச் செய்தி வாசித்தலா கவியுலா சுமந்து தென்றல் காதோடு கவி பாடலா கைபேசி கிண்கிணியென கிண்ணரம் இசைத்து தத்தைய மொழி பேசி ஒற்றைச் சொல்லால் ஓயாது வாழ்த்தலா உள்ளம் மகிழ்ச்சி கடலிலா கண்டுலா வந்திட விழைதலா(ல்) யானும் வந்தேன் சிற்றுலா இறையருள் இல்லம் நிறைத்தலா (ல்) நலமும் வளமும் கூட்டாட்சி நடத்தலா இன்பம் நிரந்தர குடியுரிமை வாங்கலா வரையன்ன நெடிய புகழ் காண்டலா வானும் நிலனும் போல வாழ்தலா(ல்) நிலைத்த நலன் உமக்குரித்தாதலா என்றன் வாழ்த்துலா எழுத்துலாவாக கட்செவி அஞ்சலேறி இல்லம் வந்தது இன்பச் சுற்றுலா வாழ்க...வாழ்க...வாழ்க... பல்லாண்டு...பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு இன்றுபோல் என்றும் உவந்து !