தன்னைத்தான் காக்கின் சினங்காக்க....
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க.... "தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் தன்னையே கொல்லுஞ் சினம் " குறள் : 305 தன்னைத்தான்_ தன்னை காக்கின் _ காக்க விரும்பினால் சினங்காக்க _ கோபம் வராமல் காத்துக் கொள்க காவாக்கால் _ காத்துக் கொள்ளாவிட்டால் தன்னையே _ சினம் கொண்டவனையே கொல்லும் _ அழித்துவிடும் சினம் _ கோபம் ஒருவன் தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தால் சினம் வராமல் காத்துக் கொள்ள வேண்டும். அப்படிக் காத்துக் கொள்ளாவிட்டால் அந்தச் சினமே அவனை அழித்துவிடும். விளக்கம் : ஒருவன் தன்னை எல்லா பழி பாவங்களில் இருந்தும் காத்துக்கொள்ள விரும்பினால் கோபம் வராமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அப்படி தன்னைப் பாதுகாத்துக் கொள்ளாவிட்டால் அந்தக் கோபம் அவன் வாழ்க்கையை முற்றிலுமாக அழித்துப் போட்டுவிடும். கோபம் தன்ன...