Posts

Showing posts with the label மயிலுக்குப் போர்வை போர்த்திய பேகன் -பரணர்

மயிலுக்குப் போர்வை போர்த்திய பேகன்

மயிலுக்குப் போர்வை போர்த்திய பேகன்  கடையேழு வள்ளல்கள் வரிசையில் முதன்மையாக வைத்துக் கொண்டாடப்படுவர்கள் முல்லைக்குத்தேர் கொடுத்த பாரி மன்னனும் மயிலுக்குப் போர்வை போர்த்திய பேகன் மன்னனும் ஆவர். அப்படி இவர்கள் இருவரும் என்ன செய்துவிட்டார்கள்? இவர்களை ஏன் அதிகமாகக் கொண்டாடிக் கொண்டிருக்குக்கிறோம்? அதற்கான பின்னணி என்ன? என்ற கேள்வி எழாமலில்லை. ஒருவர் வள்ளல் என்பது எதை வைத்து வரையறை செய்யப்படுகிறது? வள்ளண்மை என்பது எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாது செய்யப்படும் உதவி. தன்னைவிட  பொருளாதாரத்தில் தாழ்ந்தநிலையில் இருப்பவர்களுக்கு செய்யப்படும் உதவி  . கொடை எல்லா மன்னர்களும் கொடுப்பார்கள். கொடை நாம் அறிந்த ஒன்று. ஆனால்  இங்கே கொடை மடம் என்றால் என்ன என்ற ஒரு கேள்வி எழுகிறது. கொடைமடத்திற்கான விளக்கத்தை அறிவதற்கு முன்னர் அதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் யார் என்பதை நாம் அறிந்து கொண்டால் எளிதில் புரிந்து கொள்ள முடியும். பரணர் என்ற புலவர் பாடிய  ஒரு புறநானூற்றுப் பாடலைத் திரும்பிப் பார்த்தால் நமக்கு கொடை மடம் என்றால்  என்ன என்பது புரியும். கடையேழு வள்ளல்களுள் ஒருவரான ஆவியர் ...