ஆவாரை யாரே அழிப்பார்
ஆவாரை யாரே அழிப்பார் நாம் நினைத்தபடி வாழ்க்கையில் எல்லாம் அமைந்துவிடுகிறதா? ஒருவருடைய வாழ்க்கை வசதி வாய்ப்போடு நன்றாக இருக்கிறது. அதற்குக் காரணம் முன்னோர் சேர்த்து வைத்த பொருளாக இருக்கலாம். புண்ணியமாக இருக்கலாம். உழைப்பாக இருக்கலாம். ஏதோ ஒரு காரணம் ஒருவரின் வளர்ச்சிக்குத் துணையாக இருந்திருக்கிறது. மாறாக இன்னும் ஒரு சாரார் வாழ்க்கை வயிற்றுக்கான போராட்டமாகவே கடந்து போகிறது. அவர்கள் உழைக்க வில்லையா? அவர்கள் பெற்றோர் புண்ணியம் செய்யவில்லையா? ஆனால் அவர்கள் எது செய்தாலும் தடை. முன்னேற முடிவதில்லை. இதற்கான காரணம் என்ன? சிலர் கஷ்டப்படுவதைப் பார்த்தால் கடவுளைப் பார்த்தால் நிற்க வைத்துக் கேள்வி கேட்க வேண்டும் என்று தோன்றும். மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் உள்ள வாழ்க்கை நிகழ்வுகள் கண் முன் வந்து ஏதேதோ எண்ண வைக்கின்றன. யாரையெல்லாமோ கேள்வி கேட்க வைக்கின்றன. யாரை கேள்வி கேட்டு என்ன பயன்? இந்த நிகழ்வுகள் எல்லாம் அவரவர் வாங்கி வந்த வரம் என்று சொல்லி சிலநேரங்களில் ஒதுங்கிக் கொள்ள வேண்டியதாகத்தான் இருக்கிறது. எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டுதான் ஆக வே...