தாமரை இலை நீர் போல
தாமரை இலை நீர் போல தாமரை என்றதுமே முகம் அன்றலர் தாமரை மலர் போல மலர்ந்து விடும். தாமரைக்கு அப்படி ஓர் ஈர்ப்பு சக்தி உண்டு.தாமரை மலர்ந்திருக்கும் தடாகங்கள் அருகில் செல்லும்போது கண்கள் அக்காட்சிகளைவிட்டு அகல மறுக்கும். அரைமணி நேரம் தடாகத்தின் அருகில் அமர்ந்துவிட்டுச் செல்லலாமா என்ற வாஞ்சை எழும். பூக்களும் அதன் மேல் மொய்த்திடும் வண்டும் மட்டுமே நம்மை கவர்ந்து விடாது. தடாகத்தில் மிதந்து கிடக்கும் தாமரை இலைகளும் என்னை கொஞ்சம் கவனி என்று நம் கவனத்தை ஈர்க்கும். தாமரை இலையால் எப்படி தண்ணீருக்கு மேலேயே மிதக்க முடிகிறது என ஒரு சிந்தனையை நமக்குள் விதைத்துவிட்டு மல்லாக்காக கிடந்து மயங்க வைக்கும். நீர் மட்டத்திற்கு மேல் தண்டின் வளர்ச்சி நின்று கொண்டிருப்பதன் பின்னணி என்ன என்பதை ஆராய வேண்டும் என்று எண்ண வைக்கும். இயற்கை ஆர்வலர்கள் மனதில் எழும் கேள்விகளும் சிந்தனைகளும் இவைகளாகத்தான் இருக்கும் இந்தச் சிந்தனையும் ஆர்வமும் இருந்ததால்தான் வள்ளுவரும் "வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு " என்று சொல்லி வைத்தார். இப்போது த...