இதனை இதனால் இவன்....
இதனை இதனால் இவன் முடிக்கும்..... " இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல் குறள் : 517 இதனை _ இச்செயலை இதனால் _ இம்முறையால் , இந்தக் காரணத்தால் இவன் முடிக்கும் _ இவன் செய்து முடிப்பான் என்று _ என்பதாக ஆய்ந்து _ ஆராய்ந்து அதனை _ அந்தச் செயலை அவன்கண்_ அவனிடத்தில் விடல் _ விட்டு விடுக இச்செயலை இம்முறையால் இவன் செய்து முடிக்கும் திறன் பெற்றவன் என்பதை ஆராய்ந்து அச்செயலை செய்துமுடிக்கும்படி அவனிடத்தில் ஒப்படைத்துவிட வேண்டும். விளக்கம் : ஒரு செயலை செய்யும்படி ஒப்படைக்கும் முன்பு நாம் தேர்ந்தெடுக்கும் நபரைப் பற்றி பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து பார்க்க வேண்டும். நாம் ஒப்படைக்கப் போகும் செயலைப் பற்றிய முழு அறிவும் கொண்டவனாக இருக்க வேண்டும். அப்படியே அறிவு பெற்றிருந்தாலும் செய்யும் ஆர்வம் உள்ளவனாக இருக்கிறானா என்பதை அறிய வேண்டும். ஆர்வம் இருந்தாலும் குறிப்பிட்ட காலத்திற்குள் செய்து முடிக்கும் வலிமை பெற்றவனாக இருக்க வேண்டும். இப்படி எல்லா ...