Posts

Showing posts from December, 2022

புத்தாண்டு வரவேற்பு

புத்தாண்டு வரவேற்பு  புத்தாண்டு வரவேற்புக்காக அனைவரும் வாசலில் காத்துக் கொண்டிருக்கிறோம். மனம் நிறைய மகிழ்ச்சியைப்  சுமந்துகொண்டு முன்வரிசையில்  நிற்கின்றனர் சிலர்.   ஏதோ ஒரு தயக்கம் வரவேற்பில்  முன் வரிசையில் நிற்கவிடாதபடி  தடுத்து நிற்க பின்னால் நின்று  பதுங்கிப் பதுங்கி  எட்டிப்பார்த்துக் கொண்டு நிற்கின்றனர் இன்னும் சிலர். வரும் ஆண்டு எப்படிப்பட்டதாக இருக்கும்?  நன்மைகளை அள்ளி  வரப்போகிறதா அல்லது  துள்ளி வரும் கொரோனாவைக் கூடவே  கூட்டி வந்து கும்மியடித்துக்  கும்மாளமிடப்போகிறதா?  இப்படி ஒரு அச்சத்தில் இன்னும் சிலர்.    புத்தாண்டு வந்தால் என்ன?  வராமல் போனால் என்ன?என்று ஒரு சலனமும் இல்லாமல் எல்லா நாளையும் போல்தான் இதுவும் ஒரு நாள். மற்றபடி எதிர்பார்ப்பதற்கு  இதில் என்ன இருக்கிறது? என்ற கேள்வியை முன் வைத்து ஒரு மகானைப் போன்ற மனநிலையில் அமர்ந்திருப்போர்  சிலர்.   இந்த ஆண்டாவது நம்மைக் கண்டு கொள்ளுமா?  என்று பதின்ம வயதினரின் எதிர்பார்ப்பும் பரபரப்பும் கலந்த மனநிலையில் இன்னும் சிலர். இப...

நத்தம்போல் கேடும்....

Image
நத்தம்போல் கேடும் உளதாகும்  " நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும் வித்தகர்க் கல்லால் அரிது"                குறள்: 235 நத்தம் - ஆக்கம் போல்- போன்ற தேடும் - அழிவும் உளதாகும் - உள்ளதாகின்ற சாக்காடும் - இறப்பும் வித்தகர்க்கு- ஆற்றல் மிக்கவர்க்கு அல்லால் -அன்றி அரிது - கடினமானது துன்பத்திலும் அவற்றைத் தாங்கி  தன்னை  வளர்த்துக் கொள்வதும் சாவிலும் தன் புகழை  நிலை நாட்டுவதும் ஆற்றல்மிக்கவர்களால் மட்டுமே ஆகுமே அன்றி மற்றவர்க்கு ஆவது கடினம். விளக்கம் : எவ்வளவு துன்பம் வந்தாலும் துவண்டு போகாதவர்கள் உண்டு. நாலாபக்கங்களிலிருந்தும் தீமை செய்பவர் இருந்தாலும் அவை எல்லாவற்றையும் ஒரு புன்னகையால் கடந்து செல்லும் மன தைரியம் ஒரு சிலரிடம் மட்டுமே இருக்கும். இந்த மன தைரியமும் புரிதலும் ஒருவரை அடுத்த நிலைக்கு  எடுத்துச் செல்லும். வாழும்போது கேடு வந்தபோதிலும் தமது உழைப்பால் புகழ் ஈட்டி இறந்தபோதும் இறவாப் புகழ் எய்தும்  திறன் அறிவுடையவர்கு மட்டுமே வாய்க்கும். மற்றவர்க்கு வாய்த்தல் அரிதினும் அரிது. புகழ் எளிதில் ஈட்டிவிட முடியுமா?...

நன்றி சொல்ல வார்த்தை இல்லை

Image
நன்றி சொல்ல வார்த்தை இல்லை " எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு " " எந்த நன்மையை மறந்தவர்க்கும் வாழ வழி உண்டு. ஆனால் ஒருவர் செய்த நன்மையை மறந்தவர்க்கு ஒருநாளும்  வாழ்வு இல்லை" என்றார் வள்ளுவர். எதற்கு நன்றி சொல்ல வேண்டும்? யாருக்கு நன்றி சொல்ல வேண்டும்? அப்படி நான் நன்றி சொல்லும் அளவிற்கு யாரும் எனக்கு எந்த  உதவியும் செய்யவில்லை. நான் உழைத்தேன்.  நான் வளர்ந்தேன். இன்று இந்த இடத்தில் வந்து நிற்கிறேன். யாருடைய உதவியையும் எதிர்பார்த்து நான் என்றுமே இருந்ததில்லை. இப்படி ஒரு தன்மான உணர்வு குறுக்கே வந்து கேள்விகளைக் கேட்டு நிற்கும். இந்தக் கேள்விகளும் அதற்கான மறுப்புகளும் குறுக்கும் நெடுக்குமாக  ஓடி ஒரு குழப்பமான மனநிலைக்குள் நீங்கள் நின்று கொண்டிருக்கலாம். எத்தனைக் கேள்விகள் கேட்டாலும் மறுப்புரைகளை அள்ளி வீசினாலும்  நீங்கள் பெற்ற உதவியை மறுதலித்துவிட்டுக் கடந்து போய்விட முடியாது. அப்படியே நீங்கள் நன்றி சொல்ல மறுத்து நின்றால், "உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு " என்று வள்ளுவர் எழுதிய வரி  உங்களுக்காக  மட்டுமே...

கிறிஸ்துமஸ் பாட்டு

Image
  கிறிஸ்துமஸ் பாட்டு விண்ணின் மைந்தன் மண்ணில் அவதரித்தார் கானிடையரோடு நாமும் மாடடைக் குடில் தன்னில் மகிபனைக் கண்டிடுவோம்...வாருங்கள்            ஆஹா...ஹா...ஹா ...ஹா          .  என்ன ஆனந்தம்            ஆநிரை கொட்டிலில்             ஆவின் தாலாட்டலில்....( 2)             ஆஹா...ஹா...ஹா ஹா             என்ன  ஆனந்தம்!                     வானதூதர் வாழ்த்திட வான்வெள்ளி வழி காட்டிட வானசாஸ்திரிகளோடு நாமும் பண்ணிசைத்து  மகிழ்வோடு பாலனைப் பணிந்திடுவோம் ... வாருங்கள்          ஆஹா...ஹா...ஹா...ஹா           என்ன ஆனந்தம்!          ஆநிரை கொட்டிலில்           ஆவின் தாலாட்டலில்..(..2)           ஆஹா....ஹா....ஹா..ஹா        ...

எது நம்பிக்கை துரோகம்

எது நம்பிக்கை துரோகம்? " விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில் தீமை புரிந்தொழுகு வார்" என்பார் வள்ளுவர். ஒருவர் உன்மீது எந்தவித ஐயப்பாடுமின்றி நம்பிக்கை வைத்திருக்கிறார். .அப்படிப்பட்டவர்க்கு ஒரு தீமை செய்பவர் இறந்தவரினும் வேறு அல்லர். அவர் இருந்தும் இல்லாமல் இருப்பவருக்கு ஒப்பினவராகவே கருதப்படுவார். இதுதாங்க நம்பிக்கைத் துரோகம். நம்மை நம்பி இருப்பவர்களுக்கு ஒருபோதும் துரோகம் செய்தல் கூடாது. துரோகங்களில் பெரிய துரோகம் நம்பிக்கைத் துரோகம் தாங்க. துரோகமே கடுமையான  மன உளைச்சல் தரக்கூடியதுதான். இதில் பெரிய துரோகம் ஒன்று என்றால்... தாங்க முடியாமல் மனவலிமையை ஏற்படுத்தும். காலத்துக்கும் வலிக்கும். நினைத்த உடனே கண்ணீர் வழியும். பேச வாய் எழாது. சொல்லும்போது  அப்படியா?... என்று சாதாரணமாக கேட்டுவிட்டு கடந்து போகலாம். தலைவலியும் காய்ச்சலும் தனக்கு  வந்தால் தானே தெரியும். துரோகம் நண்பர்கள் இழைத்துவிட்டால்... நாலுநாள் வலிக்கும். துடைத்துப் போட்டுவிட்டு  கடந்து போய்விடலாம். பணியிடங்களில் துரோகிகள் இருக்கலாம்.எத்தனை மணிநேரம் அவர்களோடு இருக்கப்போகிறோம்? கண்டும் காணாமலும் கடந்து போய...

செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்....

" செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும் உறாஅர்போன்று உற்றார் குறிப்பு                   குறள் : 1097 செறாஅ - வெகுவாக சிறு சொல்- கடுஞ்சொல் பெற்றார் போல்- பகைவர் போல நோக்கும் - பார்க்கும் உறாஅர் -அறிமுகமில்லாதவர் போன்று- போல உற்றார்- நண்பர் குறிப்பு- அடையாளம் பகை உணர்வில்லாக் கடுமொழியும் பகைவரை நோக்குவது போன்ற கடுவிழியும் வெளியில் அயலார் போல இருந்துகொண்டு அகத்தே அன்பு கொண்டவரின் அடையாளமாகும். விளக்கம்: பேச்சில் பகைமை இருக்காது. ஆனால் பார்வையில் கடுமை இருக்கும். அதாவது பகைவரைப் பார்ப்பது போல பார்வை இருக்கும். பார்வை மட்டும்தான் இப்படியா? பேச்சும் கடுமையாக இருக்கும். ஆனால் அது உள்ளத்தில் இருந்து வருவதாக இருக்காது. அகத்தில் இனிமையும் புறத்தே இன்னாததுமாக  பேச்சு இருக்கும். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் பண்பு இருக்கும். இதுதான்  களவில் காதலை வளர்த்துக்  கொள்பவர்கள் நடந்து கொள்ளும் முறை. அன்புறாதவர்போல அன்புற்றிருப்பது பார்வைக்கு தொடர்பில்லாதவர்போல தொடர்பில் இருப்பது . இவை காதலர் குறிப்பால் உணர்த்தும் அடையாளங்கள். இது அவர்கள...

சள்ளை என்றால் என்ன?

Image
  சள்ளை என்றால் என்ன? ஒரே சள்ளையாக இருக்கிறது  என்று ஊர்ப்பக்கம் பேசத் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். அடிக்கடி சண்டையிட்டால் ஏன் சள்ளுசள்ளுன்னு நிற்கிறாய்  ? என்று எரிச்சலோடு கேட்பதுண்டு. வள்ளு வள்ளுன்னு நிற்கறா? சள்ளு சள்ளென்று  எரிஞ்சிகிட்டு நிற்குறா இவை எல்லாம் பேச்சு வழக்குச் சொற்கள். இவை இரட்டைக்கிளவியா? அடுக்குத்தொடரா? என குழம்பும்படியாக இருக்கும். இரட்டைக் கிளவி என்றால் பிரித்தால் பொருள் தராது. இங்கு இந்தச் வள்ளு வள்ளு  பிரித்தாலும் பொருள் தரும். வள்ளுன்னு சாடாத? என்று ஒற்றையாகவும் சொல்லுதல் உண்டு. ஆதலால் அது இரட்டைக் கிளவி அல்ல என்பது உறுதியாகிவிட்டது. ஆனால் சள்ளு என்ற  சொல்லுக்குப்  பொருள் தெரியாது. பொருள் தெரியாமல் இருந்தாலும்  சரியாக அச்சொற்கள் எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டுமோ அந்த இடத்தில்தான் பயன்படுத்தியிருக்கிறோம். அப்படியானால் அந்தப் சொற்களைப் பற்றிய புரிதல் நம் அடிமனதில் எங்கோ  பதிந்து போயிருக்கிறது. ஆனால் அதன் பொருளை வெளிப்படுத்தத்  தெரியவில்லை. பொருள் புரிய வைக்க முடியவில்லை. சள்ளை என்ற சொல்லை மறுபடியும் மறுபடியும் தொந்த...

வீரமாமுனிவரின் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்

Image
வீரமாமுனிவரின் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்  தமிழ் எழுத்துகள் ஒவ்வொரு காலகட்டத்திலும்  ஒவ்வொரு மாறுதலைச் சந்தித்து இன்றைய எழுத்து வடிவத்தைப் பெற்றுள்ளது. எழுத்து அப்படியே இருந்தால் என்ன? அதனை மாறுதலுக்கு உட்படுத்த  வேண்டிய அவசியம் என்ன? அதனால் என்ன பயன் நடந்துவிடப் போகிறது ? என்று கேட்பவர்களும் உண்டு. ஒரு சொல்லுக்கும் இன்னொரு சொல்லுக்குமிடையே உள்ள வேறுபாடு எளிதில் புலப்படாமை காரணமாக எழுத்து மயக்கம் ஏற்பட வாய்ப்புண்டு. இதைத் தவிர்ப்பதற்காகவும் எழுத்து எளிமையாக இருந்தால்தான்  அனைவரும் எளிதாக படிக்க முடியும் எழுத முடியும் என்ற  கருத்திற்காகவும் இத்தகைய மாற்றங்கள் தமிழ் அறிஞர்களால் மேற்கொள்ளப்பட்டன. இத்தகைய மாற்றங்கள் ஒரே நேரத்தில் நிகழ்ந்தனவா  என்றால் இல்லை என்பதுதான் பதிலாக இருக்கும். காலத்திற்கு ஏற்ப அவ்வப்போது சிறுசிறு மாற்றங்கள் நடைபெற்றன. இதில் பெரியார் செய்த எழுத்துச் சீர்திருத்தம் அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புண்டு.  பெரியார் செய்த எழுத்துச் சீர்திருத்தத்தால் எளிதாக எழுதவும் படிக்கவும் வாய்ப்பு  ஏற்பட்டிருப்பது மறுக்க முடியாத...

தீயவை செய்தார் கெடுதல்....

தீயவை செய்தார் கெடுதல்.... " தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை வீயாது அடிஉறைந் தற்று "                           குறள் :208 தீயவை - தீமை பயக்கும் செயல்கள் செய்தார் - செய்பவர் கெடுதல் - அழிந்து போதல் நிழல் -நிழலானது தன்னை- தன்னையே வீயாது - நீங்காமல் அடி - பாதம் உறைந்தற்று - தங்கினாற் போன்றது பிறர்க்குத் தீமை செய்பவர் அழிந்து போதல் என்பது ஒருவனுடைய நிழல் அவனை விட்டு நீங்காமல் அவன் பாதத்திலேயே  தங்கினாற் போன்றதாகும். விளக்கம் : தீமை செய்தவனுக்குத் தீமை கிடைக்கும். நாம் செய்த தீமை நம்மோடுதான் வரும். அது தெரியாமல்தான்  நாம் பிறர்க்குத் தீமை செய்து  கொண்டிருக்கிறோம். நிழல் எப்போதும் நம் கூடவே தான் வரும். சில நேரங்களில் நிழல் காணாமல் போகலாம். அதற்காக நிழல் இல்லை  என்று நினைத்துவிட வேண்டாம். நிழல் எங்கேயும் போகவில்லை. நம் காலடியில்தான் இருக்கும். அதுபோல பிறர்க்குச் செய்யும்  தீமையானது நிழல் போல நம் கூடவே வந்து கொண்டிருக்கும். நிழல் காணாமல் போவதுபோல சில நேரங்களில் தீமை  கண்ணுக்குப் புலப்படாமல் இருக்கலா...

மணிமுடியில் மரகதக்கல்

Image
மணிமுடியில் மரகதக்கல்  " உதவி வரைத்தன்று உதவி உதவி  செய்யப்பட்டார் சால்பின் வரைத்து" என்றார் திருவள்ளுவர். உதவி என்பது செய்யப்படும் அளவைப் பொருத்து சிறப்படைவதில்லை. உதவிப் பெறுபவரின் பண்பாட்டைப் பொருத்தே அதன் அளவு மதிப்பிடப்படும். நன்றாக இருக்கிற ஒருவருக்கு உதவி செய்ய எத்தனையோ பேர் முன்வருவர். ஆனால் எனக்கு யாருமே இல்லையே என்று ஒருவர் நிராதரவாக நிற்கும்போது நான் இருக்கிறேன் உங்களுக்கு உதவ என்று ஒருவர்  முன்வந்து நின்றால்....? அப்படியே பேச முடியாமல் திகைத்து நிற்போம். கலங்கிய நேரத்தில் கை கொடுத்துத் தூக்கிவிட வந்தவர் நம் கண்களுக்குத் தெய்வமாகவே தெரிவார்.. அப்படி நிராதரவான நேரத்தில் கை கொடுத்து உதவியவர் யார் என்று அறிய  ஆசையாக இருக்கிறதல்லவா? அதற்கு முன்னால் நடந்தது என்ன  என்பதைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டாமா?  இது கதை அல்ல.  உண்மைச் சம்பவம்.  நம்  தலைமை ஆசிரியை ஒருவருக்கு  நிகழ்ந்த சோகம். ஓய்வுக்குப் பின்னர் ஓய்வூதியம் பெறும் மகிழ்ச்சியே அலாதிதாங்க. எவ்வளவு பணம் வைத்திருப்பவராக இருந்தாலும் மாதத்தின் முதல் நாள் ஓய்வூதியம் வந்துவ...