Posts

Showing posts from February, 2020

மறதி போயே போச்சு

Image
                                    மறதி போயே போச்சு மறதி என்பது இயற்கையாக அனைவருக்கும் இருக்கும். முதுமையில் மறதி வரலாம். அதிகப்படியான மன அழுத்தத்தினால் மறதி வரலாம்.ஆனால் எப்போதும் மறந்துவிட்டது.. மறந்துவிட்டது என்று சொல்வோமானால் எங்கேயோ சிக்கல் இருக்கிறது என்றுதான் அர்த்தம். மறதி சாதாரண ஆட்களுக்கு வரலாம். பேரறிவாளிகளுக்கு வரலாமா? ஏன் ....வரக்கூடாது என்று ஏதேனும்  விதிவிலக்கா என்ன ? இதோ இங்கே ஒருவருக்கு மறதியாம். யார் என்று கேட்டால் அசந்து போவீர்கள். தாமஸ் ஆல்வா எடிசனுக்குத்தான் மறதியாம்.  ஆயிரத்திற்கும் மேற்பட்ட அறிவியல்  உருவாக்கங்களை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்த அருமையான அறிவியலாளர் இவர். இவர் இல்லை என்றால் மின்சாரம் இல்லை. மின்சாரம் இல்லை என்றால் இன்றைய  ஆடம்பர வாழ்க்கையும் இல்லை. பத்து நிமிடம் மின்சாரம் இல்லை என்றால்  உஸ்சு புஸ்சு என்று உருண்டு கொண்டு வந்து விடுவோம். இந்த மாபெரும் மனிதர் எடிசன்  ஒருமுறை மின்கட்டணம்  செலுத்த அலுவலகம் சென்றாராம்....

பந்தம்

                                                     பந்தம் பள்ளியில் விண்ணப்பப் படிவம் வாங்க வரிசையில் நின்றார் நீலமேகம்.   வரிசை ஒரு கிலோமீட்டர் வரை நீண்டு கிடந்தது.   கடைசியில் போய் நின்று கொண்டார். நீலவேணியையும் கையோடு கூட்டி வந்திருந்தார்.  நேரம் ஆக ஆக  வெயில் அதிமாகிக் கொண்டிருந்தது.  ஆனால் வரிசை ஆறு அடி கூட நகர்ந்த பாடில்லை.  இன்னும் விண்ணப்பப் படிவம் கொடுக்கவில்லையோ மனதிற்குள் ஒரு சந்தேகம்.  ஆறேழு முறை முன்னால் எட்டிப் எட்டிப் பார்த்தார்.      கண்ணுக்கு எட்டும் தூரம் வரை வரிசைதான் தெரிந்ததே தவிர யாரும் கையில் விண்ணப்பப் படிவம்  வாங்கிக் கொண்டு செல்வது போல்  தெரியவில்லை.  இப்படியே வரிசை ஆமை வேகத்தில் நகர்ந்தால்  எப்போது விண்ணப்பம் வாங்குவது?  இப்போது தான் அவருக்குப் புரிந்தது .   "நீலவேணியை வீட்டிலேயே விட்டுவிட்டு  வந்திருக்கலாமோ  வீட்டில் தனியாகத் தான...

பயணங்கள் முடிவதில்லை

                                        பயணம் செல்லடுவு அந்த வட்டாரத்தில் பிரபலமான   பெண்.எந்த ஊரில் திருவிழா என்றாலும் டாண் என்று முதல் ஆளாக வந்து நிற்பாள்.          திருவிழா என்றாலே வீட்டுக்கு வீடு செல்லடுவு வந்தாளா? செல்லடுவு வந்தாளா? என்ற கேள்விதான் அடிக்கடி கேட்கும்.          செல்லடுவுக்கு சாப்பாடு கொடுத்தீர்களா?... செல்லடுவுக்கு காப்பி கொடுத்தீர்களா? கேட்ட பின்னர்தான் எல்லா வீட்டிலும் உள்ள ஆண்களும் சாப்பிடவே உட்காருவர்.          அந்த அளவுக்கு அனைவர் மனதிலும் இடம் பிடித்திருந்தார் செல்லடுவு.                   வீட்டுக்குவீடு ஓடி ஓடி வேலை செய்வாள்.          ஒரு வீட்டுல வேலை செய்தாயிற்றே சற்று ஓய்வெடுப்போம் என்று ஒருபோதும் நினைப்பதில்...

முற்பகல் செய்யின்

Image
                                      முற்பகல் செய்யின் காகம் ஒன்று மாமரத்தில் கூடு கட்டி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தது.இந்தக் கூட்டிலேயே முட்டைகளும் இட்டு குஞ்சுகளோடு மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற கனவோடு வாழ்ந்து வந்தது.     ஒரு நாள் எங்கிருந்தோ வந்த குட்டிக் குரங்கு ஒன்று மரத்திற்கு மரம் தாவி விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தது.         காகத்தின் கூடு ஒன்று மரத்தில் இருப்பதைக் கண்டதும் உற்சாக மிகுதியால் கூடுதல் ஆட்டம் போட்டது.         தாவித்தாவி கூட்டிற்கு அருகில் சென்றது. கூட்டினுள் எட்டிப் பார்த்தது.  கூட்டினுள் யாரும் இல்லை.          யாரும் இல்லாத போது விளையாடினால் என்ன மகிழ்ச்சி கிடைக்கப் போகிறது ? சற்று நேரம் அப்படியே உட்கார்ந்து அங்கும் இங்கும் பார்த்துக் கொண்டிருந்து.          அப்போது எதிரில் நிற்கும் ஒரு ...

கோபத்தோடு பிணக்கு

                                    கோபம்  பாவம் " மறத்தல் வெகுளியை யார்மாட்டுந் தீய பிறத்தல் அதனான் வரும் "  என்கிறார் வள்ளுவர். "கோபம் தீய விளைவுகளை ஏற்படுத்துவதால் கோபத்தை மறந்துவிடுக" என்கிறது குறள். மறக்கக்கூடியதா கோபம்?  கோபம் என் பிறவிக்குணம் ஆயிற்றே... என்று புலம்புகிறவர்களும் உண்டு. அதனால்தானே சிடுமூஞ்சி என்ற பட்டத்தை வாங்கி வைத்திருக்கிறோம். "தீராக் கோபம் போராய் முடியும் " என்பார் ஔவை. கோபம்  மழையாகக் கொட்டிய நிகழ்ச்சி சாக்ரடீஸ் சாக்ரடீஷ் உலகின் தலை சிறந்த தத்துவஞானி. உலகமே கொண்டாடும் அவர்மீதும் கோபம் கொண்டவர்கள் உண்டு. சாக்ரடீஸ் கோடிக்கணக்கான  மக்களின்  நன்மதிப்பைப் பெற்றிருந்தாலும் மனைவியிடம்   நல்ல பெயர் எடுக்க முடியவில்லை. அவர் தன் எழுத்துக்குக் கொடுத்த  முக்கியத்துவத்தை வீட்டிற்கு கொடுப்பதில்லை  என்பது மனைவியின் குற்றச்சாட்டு. வீட்டில் என்ன இல்லை ...என்ன இருக்கிறது..  எதையுமே அவர் கண்டு கொள்ளவே மாட்டார். ஒருமுறை இப்படித்தான் வெகு...

சின்னப் பிள்ளை

சின்னப்பிள்ளை   சாதனைப் பெண்ணிவர்            சாதிக்கப் பிறந்தவர்      சரித்திரம் அறியாதவர்           சரித்திரம் ஆனவர்            விசித்திரம் இவர் ஒரு         விந்தைப் பெண்மணி           பள்ளி என்பதைப்                பாலியத்தில் கண்டதில்லை       வெள்ளி முளைக்குமுன்னே        துள்ளி நடைபோட்டார் காட்டினிலே கள்ளிக்  காட்டிடையே         வள்ளியிவர் தடம் பதித்தார் கிராமத்துத் தலையெழுத்தை         மராமத்து செய்ய வந்தார் ஊடகம் நுழையா கிராமத்தை          பாரதம் காண வைத்தார் உலகம் முழுவதும்          பெண்களுக்கான செய்தி தந்தாய் யாரிவர் யாரிவரென        கேட்டவர் வாய் மூடும் முன்னே பாரதத்துத் தலைமகனாம் வாஜ்பாயைத்         தன் காலில் விழ வைத்து...

செவலக்காளை

                      செவலக்காளை ஆளாளுக்கு ஒன்றும் சொல்லாமல் நின்றால் எப்படி?      நடந்தது நடந்து போச்சு...காலாகாலத்துல ஒரு மூக்கணாங்கயிறு போட்டுருந்தா இப்படி நடந்துருக்காது.      கால சுத்திகிட்டு கெடந்திருக்கும்.      செய்ய வேண்டியத செய்யாம விட்டுபுட்டு இப்போ வந்து லொபோ..லொபோ என்று வாயிலும் வயிற்றிலும் அடிச்சுட்டு வந்து நின்னா எப்படி? கூட்டத்தின் மௌனம் கலைத்தார் சட்டாம் பிள்ளை.    பாதிக்கப்பட்டவக நாலும் பேசத்தான் செய்வாக .நாம பொறுத்துத்தான் போவணும் .   அதுக்காக உசுர பறிப்போன்னு நின்னா எப்படி?இப்படி ஆளாளுக்கு அறுவாவை கையில எடுத்தா .கடைசியில எந்த உயிர் தான் மிஞ்சும்.     சட்டாம்பிள்ளையிடமே சட்டம் பேசினார் இன்னொரு பெரியவர். இதுக்கு மேல நான் பேசுவதற்கு என்ன இருக்கு? ஐயா பெரியவுக பார்த்து என்ன சொல்லுராகளோ அதுக்கு கட்டுப்பட்டு தான் ஆகணும்.          பட்டும் படாமலும் சொல்லிவிட்டு அமர்ந்தார் கைப்பிள்...

திருமண வாழ்த்து

                      திருமண வாழ்த்து வானுக்கு நிலவழகு       கானுக்கு மரமழகு                         மலருக்கு மணம் அழகு                    மங்கைக்கு மணாளனழகு                         கடலுக்கு அலை அழகு      உடலுக்கு உயிரழகு                 குழலுக்கு இசை அழகு                 குயிலுக்குக் குரலழகு       வாழைக்குக் குலை அழகு       தாழைக்கு மடலழகு                    ஆலுக்கு விழுதழகு                    அருகுக்கு வேரழகு          ஊருக்குத் தெருவழகு          தெருவுக்கு  வீ...

அம்மா

                      அம்மா வரம் வாங்க வந்தேன் அம்மா               என்னை வாழ்த்த வேண்டும் அம்மா         உயிர்களின் தொடக்கம் அம்மா                உச்சரிப்பின் முதலும் அம்மா        மொழிப்பாடம் கற்றுத் தந்த             முதல் பேராசிரியை அம்மா       எல்லைக்கோடு இல்லா               அன்புக்காரி என் அம்மா      காலக்கோடு வரைந்து வைத்த            கோலப் பேரழகி அம்மா        விலை பேச முடியா                கலைதான் என் அம்மா         அகவை ஏறிடினும்              மகவாய்த் தாலாட்டுவாள் அம்மா        தொல்லை கொடுத்திட்டேன் சும்மா             ...

எல்லைக்கோடு

                               எல்லைக்கோடு பெட்டைக்கோழி ஒன்று தன் ஆறு குஞ்சுகளோடு ஆனந்தமாக வாழ்ந்து வந்தது.     ஒவ்வொரு நாளும் இரை தேட செல்வதற்கு முன்பு தன் குஞ்சுகளைப் பத்திரமாக இருக்கும்படி அறிவுறுத்திவிட்டுச் செல்லும்.     இப்படியே நாட்கள் கடந்தன.     குஞ்சுகளும் பறக்க பழகிக் கொண்டன.     தாய் கொண்டு வரும் தானிய மணிகள் ஆறு குஞ்சுகளும் வயிறார உண்பதற்கு போதுமானதாக இருப்பதில்லை.     குஞ்சுகளையும் தன்னோடு அழைத்துச் செல்ல தாய்க் கோழி நினைத்தது.     "பிள்ளைகளே! இன்று முதல் நீங்களும் என்னோடு இரை தேட வாருங்கள்.     நாம் அனைவரும் சேர்த்து இரை தேடினால் நமக்குப் போதுமான உணவு கிடைக்கும்.வாருங்கள் நாம் போவோம் "என்றது.     எல்லா குஞ்சுகளுக்கும் ஒரே மகிழ்ச்சி. "ஊரு சுற்றிப் பார்க்கப் போறோம் " என்று உற்சாகத்தில் துள்ளிக் குதித்தன .     ஆனால் குட்டி தங்கையான ராசுக் குட்டிக்கு மட்ட...

கண்டாங்கி

Image
கண்டாங்கி...கண்டாங்கி கண்டாங்கி  கண்டாங்கி  என்னைக் கட்டி இழுத்த என்றன் அம்மா   கண்டாங்கி                         தொட்டில்  கட்டி         துயில  வைக்க      துணைக்கு வந்த    கண்டாங்கி.   தொட்டுப்  பிடித்து  விளையாடும் போது   திரைச்சீலையான   கண்டாங்கி   கண்ணீர் சிந்தும்  வேளையில்  கண்கள் தழுவி  கனிவு தந்த   கண்டாங்கி   தூரல் மழையில் நனைந்த போது   தலையைத்  துடைத்து விட்ட     கண்டாங்கி   அப்பாவிடம் தூது போக  பின்னணி பேசும்   அன்பு  அம்மா         கண்டாங்கி              வெற்றுத்தரையில்   படுத்த போது  பட்டு மெத்தைப்  படுக்கையான கண்டாங்கி   விட்டம...

தமிழரசன்

பள்ளி வாசல் வரை உற்சாகமாக வந்த  தமிழரசனுக்கு அதற்கு மேல் பள்ளிக்குள் செல்ல கால் எழவில்லை. ஒரு கணம்  அப்படியே நின்று  பள்ளியையே பார்த்தான். " பள்ளிக்குள் செல்வதா ?வேண்டாமா?"  என்று ஒரு தாவா மனதிற்குள் வந்து அவனை அப்படியே நிறுத்தி வைத்தது. கால்கள் தள்ளாடின. மனசுக்குள் ஒரு படபடப்பு.  நாலு நாளாக பள்ளிக்கு வரவில்லை.                ஆசிரியர் கேட்டால் என்ன சொல்வது ?  எப்படி சமாளிப்பது.?  மற்ற மாணவர்களைப் போல சட்டென்று  பொய் பேசி பழக்கம் இல்லை.  உண்மையைச் சொல்லி விடலாமா? ஐயோ...வேண்டாம். மற்ற மாணவர்கள் என்ன நினைப்பார்கள்? நினைப்பதோடு மட்டும் விட்டு விடுவார்களா? பிச்சைக்காரன்... பிச்சைக்காரன்... என்று சொல்லி சொல்லி கூனிக்குறுக  வைத்துவிடுவார்களே! நினைத்துப் பார்க்கவே உடலெல்லாம் கூசியது. நான் என்ன வேண்டும் என்றேயா பிச்சை எடுக்கிறேன்... எங்கள் வீட்டு நிலைமை அப்படி. இரண்டு பிள்ளைகளைக் கையில் கொடுத்துவிட்டு ஓடிப்போன அப்பா . அம்மா  என்னதான் செய்வார்?  இருக்க வீடு கிடையாது. ...