பகைமையும் கேண்மையும்....
பகைமையும் கேண்மையும்..... " பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின் வகைமை உணர்வார்ப் பெறின் " குறள். : 709 பகைமையும் - எதிரியும் கேண்மையும் -நட்பும் கண் - விழி உரைக்கும் - சொல்லும் கண்ணின் - நோக்கினது வகைமை - வேறுபாட்டினை உணர்வார் -அறிந்து கொள்வார் பெறின்- நேர்ந்தால், பெற்றிருந்தால் கண்ணின் பார்வை வேறுபாட்டினை அறிந்து கொள்ளும் திறன் மட்டும் இருந்தால் ஒருவன் பகைவனா?நண்பனா? என்பதை அவன் கண்களே நமக்குக் காட்டிக் கொடுத்துவிடும் விளக்கம் : ஒரு மனிதனைப் பார்க்கும்போதே அவன் உள்ளக்கிடக்கையை அறிவிக்க வல்லது கண். கண்ணை வைத்தே ஒரு மனிதனை எடை போட்டுவிடலாம். பார்க்கும் பார்வையில் பல வகை இருக்கும். அந்த நுட்பம் எல்லோருக்கும் தெரியாது. அது தெரியாமல் போவதால்தான் பல நேரங்களில் எதிரியையும் நண்பனாக எண்ணி ஏமாந்து போகிறோம். அப்படிப்பட்ட நுட்பம் தெரிந்த அமைச்சர்களை ஒரு மன்னன் தன் அமைச்சரவையில் வைத்துக் கொள்ள வேண்டுமாம். அப்போதுதான் எதிரியை உடனடியாக கண்டுபிடித்து தம்மையும் தன் நாட்டையும் காத்துக் கொள்ள முடியும் எ...