அறம் செய்ய விரும்பு
அறம் செய்ய விரும்பு அறம் செய்ய விரும்பு என்று நான் தொடங்கி விட்டுவிட்டால் போதும். அறம் செய்ய விரும்பு. ஆறுவது சினம். இயல்வது கரவேல் ஈவது விலக்கேல் உடையது விளம்பேல் ஊக்கமது கைவிடேல்.... .... ... .... என்று கடகடவென்று ஒப்பித்து விடுவீர்கள். நானும் உங்கள் ரகம்தான். ஆத்திசூடிக்கும் நமக்கும் பெரிய நெருக்கம் உண்டு. ஆத்திசூடியை நெஞ்சிலேயே குடி வைத்திருப்போம். நேரம் வரும்போதெல்லாம் சொல்லி சொல்லி மகிழ்வோம். ஆரம்பப் பள்ளியில் படிக்கும்போது ஒருநாள் பள்ளிக்கு ஆய்வாளர் வந்திருந்தார். மனப்பாடச் செய்யுள் தெரியுமா ?என்று கேட்டார். எந்தப் பாடல் என்ற கேள்வி எதுவுமில்லாமல் "அறம் செய்யவிரும்பு ஆறுவது சினம்.... என்று ஒட்டு மொத்த வகுப்பும் உயிர் வருக்க ஆத்திசூடி முழுமையையும் ஒரே மூச்சில் சொல்லி முடித்தோம். இடையில் நிறுத்தவே இல்லை. ஆய்வாளர் பாராட்டினார். அடுத்து அறம் செய்ய விரும்பு என்றால் என்ன என்று தெரியுமா? என்று கேட்டார் . அவ்வளவுதான். ஒருத்தரும் வாயைத் திறக்கவில்லை. திருதிரு என்று விழித்துவிட்டு ஆசிரியரையே பார்த்தோம். ஆசிரியர் சொல்லிக் கொடுக்கவ...