Posts

Showing posts with the label கவிதையாய் அம்மா -அன்னையர் தின கவிதை

கவிதையாய் அம்மா

Image
கவிதையாய் அம்மா கன்னிக் குடம் உடைத்து கன்னியெனைப் பிறக்க வைத்து  கன்னி முத்தம்   கன்னத்தில் தந்து கன்னித் தமிழ் கற்பித்து  கன்னிநடை பயிற்றுவித்து  கன்னித்திங்கள் காட்டி    கன்னி மதிழ்சூழ  முகம்   கன்னிவிடாமல் பாதுகாத்த   கன்னி இளஞாழலான உன்னை   கன்னித் தமிழால்   கன்னி நெக்குருகி    எம்மோ எம்மோவென   யான் அழைத்த நாட்களை   நினைக்கிறேன்   கன்னி நித்தம்   கண்டாங்கியைக்  காணாமல தவிக்கிறேன் கவித்தாரும் கனித்தாரும் கொண்டு  காத்திருக்கிறேன் கவிதையாய் வாழ்வது நீதானே அம்மா!  இனிய அன்னையர் தின நல்வாழ்த்துகள் 🌹