பசி வந்திடப் பத்தும் பறந்து போகும்
பசி வந்திடப் பத்தும் பறந்து போம் "பசி ருசி அறியாது "என்று கேள்விப்பட்டிருக்கிறோம். "பசித்தபின் புசி "என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். இது என்ன பசி வந்தால் பத்தும் பறந்து போகும்? அது என்ன பத்து ? தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறதல்லவா! கொஞ்சம் பொறுங்கள். பசியாறிவிட்டு வருகிறேன். அதாவது ஔவையின் பாடலைப் படித்து அறிவுப் பசி ஆற்றிவிட்டு வருகிறேன் என்று சொன்னேன். அப்பாடா... என்ன இது? நானொன்று நினைக்க இந்த ஔவை வேறொன்று சொல்கிறாரே! நான் என்ன நினைத்தேன் என்றால் பசி வந்தால் சட்டி பத்த இருக்கும் பருக்கையையும் வழித்து உருட்டி உள்ளே உள்ளே தள்ளி விடுவோம் இல்லையா? அதைத்தான் பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்று ஔவை சொல்லியிருப்பார் என்று நினைத்தேன். ஔவை என்னடா வென்றால் வேறு ஒரு பதிலைச் சொல்கிறார். பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பதற்கான ஔவையின் பாடல் இதோ உங்களுக்காக... " மா...