புலிகிடந்த தூறாய் விடும்
புலிகிடந்த தூறாய் விடும் " மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித் தாயினும் இல்" என்பார் வள்ளுவர். மனைவி மாண்புடையவளாக இருத்தல் வேண்டும். நற்பண்பு இல்லாத மனைவி வாய்த்தால் .... அவ்வளவுதான். குடும்பம் குடும்பமாக இராது. எப்போதும் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் மனைவி வீட்டில் இருந்தால் எப்படி மகிழ்ச்சியாக வாழ முடியும்? செல்வமும் புகழும் இருந்து என்ன பயன்? வீட்டில் அமைதி இல்லையே! எல்லாம் இருந்தும் அமைதி இல்லை என்றால் ஒன்றுமில்லாது போன்ற வெறுமையைத்தான் உணர முடியும். வெளியில் சென்ற கணவனுக்கு வீடு திரும்ப மனம் வராது. மனைவியோடு பேசவே அச்சம் ஏற்படும். எந்த நேரத்தில் சண்டையிட்டுக் கொள்வாளோ என்ற அச்சத்தோடே வாழ்க்கை நடத்த வேண்டியிருக்கும். " புகழ்புரிந்த இல்லில்லோர்க்கு இல்லை இகழ்வார்முன் ஏறு போல் பீடு நடை " பீடு நடைஎப்போது வரும்? பணத்தால் வருமா? பதவியால் வருமா? புகழால் வருமா? இல்லை. நமது புகழைக் காக்க விரும்பும் மனைவி அமைந்தால் மட்டுமே ஏற...