வழக்கிழந்தவர் அழுத கண்ணீர்
வழக்கிழந்தவர் அழுத கண்ணீர் ஒரே வார்த்தையைத் திரும்பத் திரும்பச் சொன்னால் உண்மை என்று நம்பி விடுகிறோம். மாறுபட்ட மனிதர்கள். பொய்யும் புரட்டும் பேசும் மனிதர்கள் உள்ள உலகம். நாவன்மை இருந்தால் போதும். பொய்யையும் உண்மை என்று நம்ப வைத்துவிடலாம். வழக்காளுநர்களுக்கு சொல்வன்மை வேண்டும். அவர் எந்தச் பொய்யையும் உண்மை என்று நம்ப வைத்துவிடுவார். எந்த உண்மையையும் பொய்யாக்கி விடுவார். இந்த உலகம் பொய்யை உண்மை என்றும் உண்மையைப் பொய்யென்றும் புரட்டிப் பேசுகிறவர்களுக்குக் கொடுக்கிற மரியாதை அலாதியானது. இவற்றை எல்லாம் ஒரு புலவர் பாடலாகப் பாடியிருக்கிறார். பாடல் இதோ உங்களுக்காக.... "பொய்யுடை ஒருவன் சொல் வன்மையினால் மெய் போலும்மே மெய் போலும்மே" அதாவது சொல் வன்மையுடைய ஒருவன் சொல்லும் பொய்யும் மெய் போலவே தோன்றும். பேசத் தெரிந்தவர்கள் தாங்கள் சொல்வதுதான் உண்மை என்று அடித்துப் பேசுவார்கள் . ஆணித்தரமான உண்மை இருப்பது போல நம்ப வைப்பார்கள். அதுதான் உண்மை என்று நம்பும்படியாகவே அவருடைய பேச்சு இருக்கும். ஆமாம் பொய்யை மெய்யென்று நம்ப வைத்துவிட்டான். அப்படியானால் உண்மையின் நிலைமை எப்படி இருக்கும் ...