வைகறை துயிலெழு
வைகறை துயிலெழு அதிகாலையிலேயே எழும்பணுமா ? என்னால் எல்லாம் முடியாதுப்பா... எட்டுமணிவரை யாராவது கிட்ட வந்தால் எட்டி உதைச்சுடுவேன் என்று சொல்லும் காலம் இது. இப்போபோய் வைகறை துயிலெழு என்கிறீர்களா...? வேண்டாமப்பா உங்கள் துயிலெழு படலம் என்று புலம்பலா...? எத்தனை நாளைக்குத்தான் இந்த புலம்பல்....? எழும்பித்தான் ஆகவேண்டும். அல்லது சோம்பேறி பட்டம் கட்டிவிடுவார்கள். அதிகாலையில் எழும்பும் பழக்கம் என்பது ஒருவருக்கு வாழ்க்கையில் கிடைத்த முதல் வெற்றி. வெற்றி பெற்ற அனைவருமே அதிகாலை எழும்பும் பழக்கம் கொண்டவர்களாகத்தான் இருப்பார்கள். எழுத்தாளர்களாகவோ விளையாட்டு வீரர்களாகவோ தொழில் முனைவோர்களாகவோ இருக்கிற யாரானாலும் தங்கள் வெற்றிக்கான முதல் காரணம் அதிகாலையிலேயே எழும்பி அன்றன்று செய்ய வேண்டிய வேலையைப் பட்டியலிட்டு அதன்படி நடப்பதாகத்தான் கூறுவார்கள். சோம்பல் ந...