பாராட்டுங்கள்
வாழ்த்தும் பாராட்டும் வாழ்த்துங்கள். அது உங்களை வாழ்த்தும். பாராட்டுங்கள். அது உங்களைப் பல பாராட்டுக்களுக்கு உரியவராக்கும்." " உலகுள்ளவரை உவகையோடு வாழ்க." இது ஒரு சாதாரண வாழ்த்து தான். ஆனால் இதன் தாக்கம் எவ்வளவு என்பது நம்மில் பலர் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வாழ்த்துகள் ஏதோ பொழுது போகாமல் கூறுகிறார்கள் என்று கூட நினைப்பவர்கள் உண்டு. சில சமயங்களில் கடனே என்று வாழ்த்துகள் அனுப்புவதும் உண்டு. வாழ்த்துகள் கூறுவதற்கு அவ்வளவு சிரத்தை எடுத்துக் கொள்வதில்லை. இது சோம்பேறித்தனமா அல்லது நாம் வாழ்த்தும் அளவுக்கு இவர் அப்படி ஒன்றும் பெரிய ஆளா என்ற நினைப்பா என்று சொல்லத் தெரியவில்லை. இதே போன்றுதான் பாராட்டவும் பலமுறை தவறி விடுகிறோம். ஆனால் ஒவ்வொரு பாராட்டும் நம்மில் எப்படி எல்லாம் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.... இல்லை ...இல்லை.. தூக்கி நிறுத்தி இருக்கிறது என்பதைச் சற்றே பின்னோக்கி திரும்பிப் பார்த்தால் புரியும். அம்மா மடியில் படுத்திருக்கும்போது அம்மாவி...