மரபுப் பெயர்கள்
மரபுப் பெயர்கள் தொன்றுதொட்டு ஒரு பொருளை எச்சொல்லால் நம் முன்னோர் வழங்கிய வந்தனரோ அவ்வாறே வழங்கப்பட்டு வரும் சொற்கள் மரபுச் சொற்கள் அல்லது மரபுப் பெயர்கள் எனப்படும். தென்னங்கீற்று என்று சொல்லுவோம். தென்னம் இலை என்று சொல்வதில்லை. ஆட்டுக்குட்டி என்று சொல்வோம். ஆட்டுப் பிள்ளை என்று சொல்வதில்லை. பனை வடலி என்றுதான் சொல்வோம். பனங்கன்று என்று எழுதுவதில்லை. தென்னம் பிள்ளை என்று சொல்வோம். தென்னங்கன்று என்று சொல்வதில்லை. தென்னந்தோப்பு என்று சொல்வோம். தென்னந் கூட்டம் என்று சொல்வதில்லை. வாழை குலை என்று சொல்வோம். மாங்குலை என்று சொல்வதில்லை. கொத்துக் கொத்தாக மாங்காய் காய்த்துக் கிடக்கின்றன என்றுதான் சொல்வோம். குலை குலையாக மாங்காய் காய்க்கும் கிடக்கின்றன என்று சொல்ல மாட்டோம். காகம் கரையும் என்று சொல்வோம். காகம் கூவும் என்று சொல்வதில்லை. குயில் கூவும் என்றுதான் சொல்லுவோம். கோழிப்பண்ணை என்றுதான் எழுதுவோம். கோழித் தொழுவம் என்று எழுதுவதில்லை. மாட்டுத் தொழுவம் என்றுதான் சொல்வோம். எழுதுவோம். இதுதான் மரபு. ஒலி மரபுச் சொற்கள் பற்றி பார்ப்போம். குயில் -கூவும் காகம் -கரையும் கிளி -பேசும் ...